Important Points in Solar System
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான கோள்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள் (Important Points in Solar System) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Solar System – Planets
கோள்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள்
‘PLANET’ என்ற சொல்லின் பொருள் – அலைந்து திரிபவன்
‘PLANET’ என்ற வார்த்தை எம்மொழியை சார்ந்தது – கிரேக்கம்
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் எண்ணிக்கை – 8
கோள்கள் தன்னைத் தானே சுற்றுவது – சுழலுதல் (Rotation)
கோள்கள் சூரியனை சுற்றுவதற்கு – வலம் வருதல் (Revolution)
கோள்களில் மிக பெரியது – வியாழன்
கோள்களின் மிக சிறியது – புதன்
சூரியனுக்கு அருகில் உள்ள கோள் – புதன்
சூரியனுக்கு தொலைவில் உள்ள கோள் – நெப்டியூன்
முதல் நான்கு கோள்கள் – புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
உட்கோள்கள் எவை – புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
உட்கோள்கள் வேறு பெயர் – பாறைக் கோள்கள்
பாறைக் கோள்கள் வேறு பெயர் – திட கோள்கள்
வெளிக்கோள்கள் – வியாழன், சனி, யுரெனஸ், நெப்டியூன்
வெளி கோள்கள் வேறு பெயர் – வாயு கோள்கள்
2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் – வியாழன்
23 1/2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் – பூமி
98° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் – யுரேனஸ்
மிக வெப்பமான கோள் – வெள்ளி
வெள்ளி வெப்பமான காரணம் – கார்பன்டை ஆக்ஸைடு
மிக குளிர்ச்சியான கோள் – நெப்ட்யூன்
துணை கோள்கள் இல்லாத கோள்கள் – புதன், வெள்ளி
தன்னை தானே வேகமாக சுழலும் கோள் – வியாழன்
தன்னை தானே மெதுவாக சுழலும் கோள் – வெள்ளி
கோள்களில் மிக அடர்த்தியானது – பூமி
கோள்களில் மிக லேசானது – சனி
ஒளி மிக்க கோள் – வெள்ளி
சூரிய குடும்பத்தை கண்டு பிடித்தவர் யார் – கோபர்நிகஸ்
வேகமாக வலம் வரும் கோள் எது – புதன்
அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் – வியாழன்
வியாழனின் துணைகோள்கள் எண்ணிக்கை – 63 துனைக்கோள்கள்
பச்சை கோள் என அழைக்கப்படும் கோள் – யுரேனஸ்
மிகக்குளிர்ந்த கோள் எது – நெப்டியுன்
பனிப்பந்து என அழைக்கப்படும் கோள் – புளூட்டோ
மாலை நட்சத்திரம் என அழைக்கப்படும் கோள் – வெள்ளி
தன்னை தானே சுழலாமல் உருண்ட படியே சூரியனை சுற்றி வரும் கோள் – யுரேனஸ்
சிவப்பு கோள் என அழைக்கப்படும் கோள் – செவ்வாய்
நீல கோள் என அழைக்கப்படும் கோள் – பூமி
மெதுவாக சுழலக்கூடிய கோள் – வெள்ளி
வெப்பக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? – வெள்ளி
சூரிய குடும்பத்தில் கிழக்கில் இருந்து மேற்க்காக சுழலும் ஒரே கோள் – வெள்ளி
இரட்டை சகோதிரிகள் என அழைக்கப்படும் கோள்கள் – பூமி மற்றும் வெள்ளி
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான கோள்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள் (Important Points in Solar System) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.