Daily Current Affairs – September 4th to 6th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Sep 4th to 6th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Topic :  Daily Current Affairs 

Date  :  Sep 4th to 6th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ISSF உலக சாம்பியன்ஷிப்

ஓம் பிரகாஷ் மிதர்வால் சர்வதேச துப்பாக்கி சூடு விளையாட்டு கூட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

2020 ஒலிம்பிக்கிற்கான ஒதுக்கீட்டு இடம்

2020 ஒலிம்பிக்கிற்கான ஒதுக்கீட்டு இடங்களை இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களான அஞ்சம் மௌத்கில் மற்றும் அபுர்வி சண்டேலா பெற்றனர்.

முக்கியமான நாட்கள்

 

செப்டம்பர் 5 – தேசிய ஆசிரியர்கள் தினம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 5, 1888 இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆகும்.

இந்த நாள் இந்தியாவில் 1962 முதல் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

செப்டம்பர் 5 – தொண்டு செய்வதற்கான சர்வதேச நாள்

கல்கத்தாவின் அன்னை தெரேசா “அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்த வறுமையையும் துயரத்தையும் சமாளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வேலைக்காக” 1979 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்.  

இவர் இறந்த செப்டம்பர் 5 ம் தேதியின் நினைவாக தொண்டு செய்வதற்காக  சர்வதேச நாள் அனுசரிக்கப்படுகிறது.

உலக செய்திகள்

 

தேசிய ஊட்டச்சத்து மாதம்

தேசிய ஊட்டச்சத்து மாதமானது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் குள்ளமாதல், ஊட்டச்சத்து குறைதல், இரத்த சோகை மற்றும் குறைவான பிறப்பு எடை போன்ற ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் இந்த மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கின்றது.

நோக்கம் :-

இளம் பருவ பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் சுகாதாரத் துறையில் நிலவும் குறைபாடுகளை அகற்ற ஊட்டச்சத்து மாதத்தில் கவனம் செலுத்துவார்கள்.

மாநாடுகள்

 

சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சி மாநாடு

தீம்:-    “சமத்துவம் பொருளாதார ஆற்றல் மூலம் தொடங்குகிறது”.

நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் 2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சி மாநாடு நடைபெற்றது.

நேபாள துணைத் தலைவர் நந்தா பஹதூர் புன் இந்த உச்சி மாநாட்டை திறந்து வைத்தார்.

நியமனங்கள்

 

ஆரிஃப் அல்வி என்பவர்  பாகிஸ்தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

டாக்டர் பூனம்கேத்ரபால் சிங் என்பவர்  உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மேரி கோம் என்பவர் பிஎஸ்என்எலின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார்.

 


 

 Download Daily Current Affairs [2018- Sep – 4 & 6]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: