TNPSC CURRENT AFFAIRS PDF –26th Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –26 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC January Daily Current Affairs 2021

Current Affairs Date: 26-01-2021

Tamil Nadu

  1. The Union Minister for Finance and Corporate Affairs Smt. Nirmala Sitharaman inaugurated the Chennai Bench of National Company Law Appellate Tribunal (NCLAT) through virtual mode here on January 25. The Chennai Bench of NCLAT shall have jurisdiction to hear the Appeals arising out of the orders passed by the benches of NCLT having jurisdiction of Karnataka, Tamil Nadu, Kerala, Andhra Pradesh, Lakshwadeep and Puducherry.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) சென்னை அமர்வை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். NCLAT-இன் சென்னை அமர்வு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய NCLT-களின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.

 

  1. The legendary playback singer and voice artist SP Balasubrahmanyam has been conferred posthumously the Padma Vibhushan by the President of India, Ramnath Kovind. The veteran Indian musician was already a recipient of Padma Shri (2001) and Padma Bhushan (2011) from the Government of India.

புகழ்பெற்ற பின்னணி பாடகரும், குரல் கலைஞருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருதை (மரணத்திற்குப் பின்) இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஏற்கனவே இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்ம பூஷண் (2011) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

 

  1. Ten personalities from various fields from Tamil Nadu were among the 102 persons chosen for Padma Shri Awards announced on January 25. The following is the list of Padma Shri awardees and the field in which they have been chosen: P. Subramanian (posthumous), trade and industry; Thiruvengadam Veeraraghavan (posthumous), medicine; K.C. Sivasankaran (posthumous), art; Pappammal, agriculture; Subbu Arumugam, art; Solomon Pappaiah, literature and education journalism; Marachi Subburaman, social work; Bombay Jayashri Ramnath, art; Sridhar Vembu, trade and industry, and P.Anitha, sports.

பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 102 நபர்களில் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பத்து நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட துறை பின்வருமாறு: பி. சுப்பிரமணியன் (மரணத்திற்குப் பின்) – வர்த்தகம் மற்றும் தொழில்; திருவேங்கடம் வீரராகவன் (மரணத்திற்குப் பின்) – மருத்துவம்; கே.சி. சிவசங்கரன் (மரணத்திற்குப் பின்) – கலை; பப்பம்மாள் – விவசாயம்; சுப்பு ஆறுமுகம் – கலை; சாலமன் பப்பையா – இலக்கியம் மற்றும் கல்வி இதழியல்; மராச்சி சுப்புராமன் – சமூக பணி; பம்பாய் ஜெயஸ்ரி ராம்நாத் – கலை; ஸ்ரீதர் வேம்பு – வர்த்தகம் மற்றும் தொழில், மற்றும் பி.அனிதா – விளையாட்டு.

 

India

  1. “AYU SAMVAD”(My Health My Responsibility) is one of the largest public awareness campaign program on AYURVEDA and COVID 19 PANDEMIC, organized by All India Institute of Ayurveda New Delhi, as envisioned & supported by Ministry of AYUSH. More than 5 lac lectures will be organized across the nation by Ayurveda Physicians for citizens of India.

ஆயுர்வேத மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று குறித்த மிகப் பெரிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டங்களில் ஒன்று “ஆயு சம்வத்” (என் சுகாதாரம் என் பொறுப்பு). இதை ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவால் அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம் நடத்துகிறது. இதன்மூலம், இந்திய குடிமக்களுக்கு ஆயுர்வேத மருத்துவர்களால் நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

 

  1. A large-scale tri-service joint amphibious exercise AMPHEX – 21 was conducted in the Andaman & Nicobar group of islands from 21 – 25 Jan 2021. The exercise involved the participation of Indian Navy, Indian Army and Indian  Air force.

2021 ஜனவரி 21 முதல் 25 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் AMPHEX – 21 என்கிற பெரிய அளவிலான முத்தரப்பு கூட்டு பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் இந்திய கடற்படை, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை பங்கேற்றன.

 

  1. The Union Minister for Road Transport and Highways Nitin Gadkari has approved a proposal to levy a “Green Tax” on old vehicles which are polluting the environment. The proposal will now go to the states for consultation before it is formally notified.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” வசூலிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டம் முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து மாநிலங்களிடமும் ஆலோசனை பெறவுள்ளது.

 

  1. The Ministry of Tourism, Government of India organizes Bharat Parv every year since 2016 in front of the ramparts of the Red Fort on the occasion of Republic Day Celebrations from 26th to 31st January. This year, the virtual Bharat Parv will be inaugurated by the Speaker Lok Sabha Om Birla.

ஜனவரி 26 முதல் 31 வரை குடியரசு தின கொண்டாட்டங்களைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டையின் கோபுரங்களுக்கு முன்னால் 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் ‘பாரத் பர்வ்’ என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டு, இணைய வழி பாரத் பர்வ் நிகழ்ச்சியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்.

 

  1. The Finance Minister of India, Nirmala Sitharaman, has launched the “Union Budget Mobile App” ahead of the presentation of the Union Budget on February 1, 2021. The mobile app was launched for hassle-free access of Budget-related documents by Members of Parliament (MPs) and the public. The budget will completely be paperless for the first time.

பிப்ரவரி 1, 2021 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை பாராளுமன்றம் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எந்த இடர்பாடும் இல்லாமல் அணுகுவதற்காக இந்த மொபைல் பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் முதல் முறையாக இந்த ஆண்டு முற்றிலும் காகிதமற்றதாக இருக்கவுள்ளது.

 

International 

 

  1. The former Japan PM Shinzo Abe has been conferred the Padma Vibhushan award by the President of India. The Padma Vibhushan is awarded for exceptional and distinguished service. He is conferred for his service in public affairs.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பத்ம விபூஷன் விருதை அறிவித்துள்ளார். பத்ம விபூஷன் விதிவிலக்கான மற்றும் சிறப்பான சேவைகளுக்காக வழங்கப்படுகிறது. அபே அவர்களுக்கு பொது விவகாரங்களில் அவரது சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

  1. Who has been conferred Padma Vibhushan award for the year 2021 from Tamil Nadu?

  1. B.B. Lal

  2. S.P. Balasubrahmanyam

  3. Sudarshan Sahoo

  4. None of the above

2021 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் விருதை தமிழ்நாட்டிலிருந்து பெற்றவர் யார்?

  1. பி.பி.லால்

  2. எஸ்.பி.பாலசுப்பிரமண்யம்

  3. சுதர்ஷன் சாஹூ

  4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

  1. Who has been conferred Padma Shri award for the year 2021 from Tamil Nadu?

  1. Subbu Arumugam

  2. Solomon Pappaiah

  3. Sridhar Vembu

  4. All the above

2021 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதை தமிழ்நாட்டிலிருந்து பெற்றது யார்?

  1. சுப்பு ஆறுமுகம்

  2. சாலமன் பாப்பையா

  3. ஸ்ரீதர் வேம்பு

  4. மேலே உள்ள அனைத்தும் சரி

 

  1. The Bharat Parv is organised on the occasion of

  1. Independence Day

  2. Republic Day

  3. Gandhi Jayanti

  4. None of the above

பாரத் பர்வ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் எந்த விழாவின் போது நடத்தப்படுகிறது?

  1. சுதந்திர தினம்

  2. குடியரசு தினம்

  3. காந்தி ஜெயந்தி

  4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

  1. Who is organising AYU SAMVAD in support of the Ministry of AYUSH?

  1. Indian Council of Medical Research

  2. All India Institute of Ayurveda

  3. National Institute of Occupational Health

  4. None of the above

ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவில் ‘ஆயு சம்வத்’ என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வது யார்?

  1. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

  2. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம்

  3. தேசிய தொழில் சுகாதார நிறுவனம்

  4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

  1. The exercise AMPHEX – 21 involves

  1. Indian Army

  2. Indian Navy

  3. Indian Air Force

  4. All the above

AMPHEX – 21 பயிற்சியில் பங்கேற்கும் அமைப்பு எது?

  1. இந்திய ராணுவம்

  2. இந்திய கடற்படை

  3. இந்திய விமானப்படை

  4. மேலே உள்ள அனைத்தும் சரி

 

  1. The Green Tax was recently approved by

  1. Ministry of Tourism

  2. Ministry of Environment

  3. Ministry of Road Transport and Highways

  4. None of the above

‘பசுமை வரி’க்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த அமைச்சகம் எது?

  1. சுற்றுலா அமைச்சகம்

  2. சுற்றுச்சூழல் அமைச்சகம்

  3. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

  4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

  1. The Bharat Parv is organised by

  1. Ministry of Tourism

  2. Ministry of Environment

  3. Ministry of Road Transport and Highways

  4. None of the above

‘பாரத் பர்வ்’ நிகழ்ச்சி எந்த அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது?

  1. சுற்றுலா அமைச்சகம்

  2. சுற்றுச்சூழல் அமைச்சகம்

  3. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

  4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

  1. In which field, former Japan PM Shinzo Abe was conferred the Padma Vibhushan award?

  1. Art

  2. Public Affairs

  3. Spiritualism

  4. Science

எந்தத் துறையில், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது?

  1. கலை

  2. பொது விவகாரம்

  3. ஆன்மீகம்

  4. விஞ்ஞானம்

 

1

2

3

4

5

6

7

8

B

D

B

B

D

C

A

B

DOWNLOAD  Current affairs -26 JAN- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: