Railway Jobs -ரயில்வே துறையில் 4 லட்சம் பணியிடங்கள் காலி

Railway Jobs: ரயில்வே துறையில் 4 லட்சம் பணியிடங்கள் காலி

Railways to recruit over 4 lakh Vacancies

ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 The railways will employ over four lakh people by 2021, Railway Minister Piyush Goyal announced

ரயில்வே துறையில் Railway அடுத்த இரண்டு ஆண்டுகளில் பலர் ஓய்வு பெறவுள்ளனர். ஏற்கெனவே, ரயில்வே துறையில் 2.82 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதில் 1.51 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறை கடந்த 14 மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 1.31 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2019-2020-இல் 53 ஆயிரம் ஊழியர்களும், 2020-21-இல் 46 ஆயிரம் ஊழியர்களும் ரயில்வே துறையில் ஓய்வு பெற உள்ளனர்.  

இதையொட்டி, 99 ஆயிரம் கூடுதல் காலிப் பணியிடங்கள் ஏற்படவுள்ளன. இதனால், முதல் கட்டமாக 1.31 லட்சம் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை வரும் பிப்ரவரி- மார்ச் 2019 மாதங்களில் தொடங்கி அடுத்த ஆண்டு 2020 ஏப்ரல்- மே மாதத்திற்குள் முடிக்கப்படும். 

இரண்டாவது கட்டமாக 99 ஆயிரம் கூடுதல் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை அடுத்த ஆண்டு 2020 மே – ஜூன் மாதங்களில் தொடங்கி 2021, ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

 இதன் மூலம் ரயில்வே துறையில் அடுத்த இரு ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் பேர் பணிக்கு அமர்த்தப்படுவர். இப்பணியிடங்களில் ஏற்கனவே உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது போக, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 103-ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடும் அளிக்கப்பட உள்ளது.

Currently, RRBs and other recruitment agencies affiliated with the national transporter are engaged in a hiring spree of 1,51,548 vacancies which includes RRB Group D, RRB ALP, RRB JE and recruitment to the Railway Police.

Presently, according to the Ministry, Indian Railways has a sanctioned strength of 15,06,598 employees.

Out of these, 12,23,622 personnel are on roll.

The remaining  2,82,976 are vacant posts.

Recruitment for 1,51,548 posts is going on, leaving 1,31,428 posts still vacant.

Further, the statement said, it may also be noted that approximately 53,000 and 46,000 railway employees shall retire in 2019-20 and 2020-21 respectively, causing an additional vacancy of approximately 99,000 employees.

Thus, after accounting for the current recruitment in progress, there will be total net vacancies of 1,31,428 and approximately 99,000 i.e. approximately 2,30,000 employees in the railways over next two years

 

One thought on “Railway Jobs -ரயில்வே துறையில் 4 லட்சம் பணியிடங்கள் காலி

  1. hello sir… i want to prepare railway exam.. but i dont know hoe to apply .. what is syllabus.. which category choosen…so please guide me.. how to prepare and attend

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: