Daily Current Affairs – October 17th to 20th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Oct 17th to 20th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  October 17th to 20th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

இளைஞர் ஒலிம்பிக்ஸ்

அர்ஜென்டினாவில் நடைபெற்ற கோடைகால இளைஞர் ஒலிம்பிக்ஸ் டிரிபிள் ஜம்ப் போட்டியில் பிரவீண் சித்ராவேல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஆகாஷ் மாலிக் இளைஞர் ஒலிம்பிக்ஸ்  வில்வித்தை போட்டியில் இந்தியாவின் முதல் வெள்ளி பதக்கத்தைப் பெற்றார்.

பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்

அபுதாபியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை 373 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி மஸ்கட்டில் நடைபெற்றது. 

ஆண்கள் ஹாக்கியில் முதல் போட்டியில் இந்தியா ஓமன் அணியை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

விம்பிள்டன் டென்னிஸ் 2019

2019 விம்பிள்டன் முதல் ஐந்தாவது-செட் டைபிரேக்கர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டி

மும்பை டெல்லி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்

ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடங்கியது.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்

ஓடென்ஸில் நடைபெறும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிக்குள் கிடம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சைனா நேவால் நுழைந்தனர்.

 

முக்கியமான நாட்கள்

 

அக்டோபர் 17 – சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் (ஐ.நா.) 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கும் வறுமை மற்றும் வறுமை ஒழிக்கப்பட வேண்டிய தேவை பற்றி மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, குறிப்பாக வளரும் நாடுகளில்.

2018 தீம் :- “Coming together with those furthest behind to build an inclusive world of universal respect for human rights and dignity”

அக்டோபர் 20 – உலக புள்ளிவிவர தினம்

சமூகத்தில் நல்ல முடிவெடுக்க நல்ல தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் அவசியமானவை என்பதைக் காட்ட அக்டோபர் 20ம் தேதி உலக புள்ளிவிவர தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்வு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. ஜூன் 3, 2015 அன்று ஐ.நா. பொதுச் சபையால் இதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது இரண்டாவது உலக புள்ளிவிவர தினம் ஆகும்.

தீம்:- Better Data, Better லீவிஸ்

 

 

உலக செய்திகள்

 

டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்

குடியிருப்பு பகுதிகளில் இயங்கிவரும் ஸ்டீல் மெருகு பட்டறைகளை கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.நாட்டின் தலைநகரான டெல்லியில் பல குடியிருப்பு பகுதிகளின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களில் உள்ள கரைகளை நீக்கி முலாம் பூசும் மெருகு பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டறைகள் வெளியேற்றும் கழிவுகளால் யமுனை நதியின் நீர் மாசடைந்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறிய வகையில் வசிர்புர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வரும் இந்த பட்டறைகளின் மீது நடவடிக்கை எடுத்து மூடுமாறு டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவுக்கு உத்தரவிடக்கோரி ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்துவந்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்துவரும் டெல்லி அரசுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.இதனால், சூற்றுச்சூழல் தொடர்ந்து மாசடைந்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய டெல்லி அரசுக்கு 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஐ.நா. ஆதரவு

ஐ.நா.வில் வளரும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டத்தை வழிநடத்தும் ஆதரவு  பாலஸ்தீனியர்கள் பெற்றனர்.

புல்படி விழா 

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பண்டைய புல்படி விழா பாரம்பரியம் மற்றும் பக்தியுடன் கொண்டாடப்பட்டது. நேபாள மொழியில், “புல்” என்பது மலர் மற்றும் “பட்டி” என்பது இலைகள் மற்றும் தாவரங்கள் என்பதாகும்.

ஈரான் மீது புதிய தடை

வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது, .

எதியோப்பியன் பிரதமரின் புதிய அமைச்சரவை

எதியோப்பியன் பிரதம மந்திரி அபீ அஹ்மத்தின் புதிய அமைச்சரவையில் 50% பெண்கள் உள்ளனர்.

உலகின் மிக நீண்ட கடல் பாலம்

சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் உலகின் மிக நீளமுள்ள கடல் பாலம் ஹாங்காங்-ஜுஹாய்-மாகோ பாலம் அக்டோபர் 24ல் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.

ஹாங்காங்கி���் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும், இந்த பாலத்தின் மூலம் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீனா முழுவதும் 56,500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய நிலம் மற்றும் நீரில் தரையிறங்கும் விமானம்

உலகின் மிகப் பெரிய சாதனையாக சீனாவின் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நிலம் மற்றும் நீரில் தரையிறங்கும் விமானம் AG600 வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

நீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் வகையிலான உலகின் மிகப்பெரிய விமானத்தை சீனா தயாரித்துள்ளது. மேலும் இது கப்பலா அல்லது விமானமா என குழப்பமடைய வைக்கும் இந்த விமானத்தின் முதல் சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

கடலில் ஆபத்து காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான ஏஜி 600 என்ற விமானத்தை சீனா தயாரித்தது. நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் வகையிலான இந்த விமானம், நீரில் மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது என சீனா தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த விமானம், சீனாவின் ஹீபே மாகாணத்தின் ஜிங்மென் பகுதியில் இருந்து முதல்முறையாக வானில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர், விமானம் வெற்றிகரமாக நீரில் இறக்கியும் சோதிக்கப்பட்டது. இது சீனாவின் 3-வது மிகப்பெரிய விமானம் ஆகும்.

 

 

மாநில செய்திகள்

 

உலகின் மிக உயரமான சிலை – ஒற்றுமை சிலை

அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் மிக உயரமான சிலை, ஒற்றுமை சிலை திறக்கப்பட உள்ளது

சர்தார் படேல் பிறந்த நாள் கொண்டாட்டத்தன்று அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் உலகின் உயரமான சிலை – ஒற்றுமை சிலை இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது.  நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.

சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும்வகையில், ‘ஒற்றுமை சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது

சிலையை அவர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கும். நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து செல்லும்.

மி-17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து படேல் சிலை மீது மலர்களை தூவும். சிலை திறப்பை முன்னிட்டு, குஜராத் காவல்துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படைகளைச் சேர்ந்த பாண்டு வாத்திய குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் நடன, இசை நிகழ்ச்கிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக, 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.

 

திட்டங்கள்

 

POCSO e-பாக்ஸ்

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண் தனது தற்போதைய வயதினை பொருட்படுத்தாமல் எந்த நேரத்திலும் புகாரை பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். POCSO e-பாக்ஸ் மூலம் வழக்குகளைத் தெரிவிக்க பாதிக்கப்பட்டவர்களை அவர் வலியுறுத்தினார்.

 

 

தரவரிசை

 

உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டித்தன்மை குறியீடு – 2018

இந்தியா – 58 வது இடத்தில் உள்ளது. இந்தியா 2017 ல் இருந்த இடத்தை விட ஐந்து இடங்கள் உயர்ந்தது.

1) அமெரிக்கா 2) சிங்கப்பூர் 3) ஜெர்மனி

உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டு பட்டியலில் இலங்கை 85வது இடத்தை பிடித்துள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2018ம் ஆண்டுக்கான உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு பட்டியல் வெளியாகியுள்ளது.

140 நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ள அந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சிங்கப்பூர் 2ம் இடத்திலும், ஜெர்மனி 3ம் இடத்திலும், சுவிட்ஸர்லாந்து நான்காவது இடத்திலும் இருக்கின்றன.

இந்த பட்டியலில் சீனா 28வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்தியா 58வது இடத்தில் இருக்கின்றது. இது குறித்து உலக பொருளாதார அமைப்பு கூறுகையில், உயர்மட்ட மற்றும் கீழ் – நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் முன்னேற்றி வருகின்றன.

சீனா ஏற்கெனவே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான முதலீடுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியா இதில் அதிகமாக பின் தங்கவில்லை.

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரங்களில், சீனா 72.6 புள்ளிகளுடன் 28வது இடத்திலும், ரஷ்யா 65.6 புள்ளிகளுடன் 43வது இடத்திலும், இந்தியா 62 புள்ளிகளுடன் 58வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 60.8 புள்ளிகளுடன் 67வது இடத்திலும், பிரேசில் 59.5 புள்ளிகளுடன் 72வது இடத்தையும் பெற்று உள்ளது.

ஆயினும், “தெற்காசியாவின் முக்கிய உந்து சக்தியாக இந்தியா இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் மிகவும் திறமையான உள்கட்டமைப்பு முறையை நம்பியுள்ளன.

போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இலங்கை மிக நவீன பயன்பாட்டு உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து உள்ளது.

 

மாநாடுகள்

 

12 வது ASEM உச்சிமாநாடு

ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு அக்டோபர்  18ம் தேதி பிரேஸ்ஸில் நடைப்பெறுகிறது.

ப்ரூசெல்ஸ் பெல்ஜியத்தில் நடக்கும் 12வது ஆசிய ஐரோப்பிய மாநாட்டில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு பயணம் அடைந்தார்.

12 வது ASEM உச்சிமாநாட்டில் 51 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள  நாடுகளில் இருந்து இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் 20-30 செய்தி ஆசிரியர்கள் பங்கு பெறுகின்றனர்.

ASEM உச்சிமாநாட்டை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய-கொரிய உச்சிமாநாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆசியான் தலைவர்கள் கூட்டம்  அக்டோபர் 19ம் நாளில் நடைபெற உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்-தென் கொரியா இடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவது குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய லட்சியமான  இந்த வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் முதலில் ஆசிய நாடுகளுடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தீம் :-  Global Partners for Global Challenges”    

 

NDMAவின் 6 வது கூட்டம்:-

பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) ஆறாவது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

பிரதம மந்திரி NDMAவின் செயல்திறனை நாட்டை பாதிக்கும் பேரழிவுகளை திறம்பட நிர்வகிப்பதற்கும் பதிலளிப்பதற்கும் மதிப்பாய்வு செய்தார்.

நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பேரிடர்களைச் சிறப்பாகக் கையாளவும், எதிர்கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளையும் இந்த ஆணையம் தற்போது மேற்கொண்டுள்ள திட்டங்களையும் பிரதமர் ஆய்வு செய்தார்.

இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தையும்,இத்தகைய பேரழிவுகளிலிருந்து உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும் சிறப்பாக எதிர்கொள்ளவும் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.பேரிடர் மேலாண்மையில் உலகத் தரம் வாய்ந்த செயல்திறனை கொண்டு வருவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 

ஸ்டீல் துறையில் மூலதன பொருட்கள்:-

ஸ்டீல் அமைச்சகம் 2018 அக்டோபர் 23 ஆம் தேதி ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் “ஸ்டீல் துறையில் மூலதன பொருட்கள்” மாநாட்டை நடத்துகிறது.

 

ASEM உச்சிமாநாடு:-

பெல்ஜியத் தலைநகர் ப்ரூசெல்ஸில் 12 வது ஆசிய ஐரோப்பியக் கூட்ட(ASEM) உச்சிமாநாடு நடைபெற்று முடிந்தது.

ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கும் இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு ஒரு பிராந்திய மன்றமாக நிறுவப்பட்டது தான் ASEM என்ற இந்த அமைப்பு. இதில் வடகிழக்கு மற்றும் தெற்காசியாவில் இருந்து 17 உறுப்பு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 28 கூட்டாளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த இரண்டு பிராந்தியங்களின் ஒருங்கிணைப்பு ஒரு புதிய உலக மேலாண்மையை சமநிலைப்படுத்துதுவதற்கான சாத்தியத்தை கொண்டுள்ளது.

உலக சமாதானம், 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நலன்களை அதிகரித்தல், அதுமட்டும் இல்லாமல்  உலகில் மிக உயர்ந்த அளவில் நாகரீகம் வளர்ச்சியடைந்த பகுதியாக அறியப்பட்டிருக்கும் இடங்களில் வாழும் மக்களுடன் ஒரு அறிமுகமாதல், நட்பை அதிகரித்தல், அறிவை வளர்த்துக்கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல். “தனித்துவமான” உறவு மேம்பாடு, கூட்டாளிகளுடன் “ஒற்றுமையை ஊக்குவித்தல் என பல நோக்கங்களுடன் செயல்பட தொடங்கிய இந்த அமைப்பின் 12 வது மாநாடு இம்மாதம் 18 மற்றும் 19ம் நாள்களில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து ஆசிய, ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின.

இதில் 51 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டார். சீனாவின் சார்பில் சீன தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் கலந்து கொண்டார். பெல்ஜியம் மன்னர் பிலிப், பிரதமர் சார்லஸ் மைக்கேல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பல்வேறு நாட்டு தலைவர்களையும் சிறப்பான முறையில் வரவேற்றார்.

இம்மாநாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று அரசியல் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சீனா முன்வைத்தது. சீனா – ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான உறவு வலுப்படுவதன் மூலம் ஆசிய – ஐரோப்பிய கண்டங்களுக்கிடையே உள்ள வர்த்தக பரிமாற்றம் மேம்படும். விரைவில் சீன முதலீட்டு உடன்படிக்கை கையொப்பம் இடப்படும் எனவும் இம்மாநாட்டில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு செய்திகள்

 

ஆழமான நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு வாகனம் (DSRV):-

புதிதாக சேர்க்கப்பட்ட ஆழமான நீர்மூழ்கி மீட்பு வாகனம் (டி.எஸ்.ஆர்.வி) சோதனை வெற்றிகர அடைந்ததால் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு திறன்களை அதிகரித்துள்ளது.

ஆண்டி டம்பிங் வரி:-

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் சில எஃகு தயாரிப்புகளின் மீது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டி டம்பிங் எனப்படும் அதிக பட்ச இறக்குமதி வரியை விதித்தது.

கூட்டு விமானப்படை பயிற்சிக்கு திட்டம்

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை இருதரப்பு ‘Cope India’ விமானப்படை பயிற்சியை முத்தரப்பு பயிற்சியாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

 

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)


ரஷ்யா மற்றும் எகிப்து இடையே ஒப்பந்தம் கையெழுத்து:-

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல்-ஃபாடா அல் சிசி உடன் மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துயிட்டனர்.வர்த்தகம், இராணுவம் மற்றும் ஏனைய உறவுகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தம், சோச்சி நாட்டில் இரு தலைவர்கள��ம் இடையில் கையெழுத்தானது.


விருதுகள்

ராஜ்பாஷா விருது

பிரசார் பார்தி தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வேம்பதி புது தில்லியில் பிரசார் பார்தி ஊழியர்களுக்கு ராஜ்பாஷா விருதுகளை வழங்கினார்.

மேன் புக்கர் பரிசு 2018

ஐரிஷ் எழுத்தாளர் அண்ணா பர்ன்ஸ் என்பவர் ‘மில்க்மேன்’ நாவலுக்காக மேன் புக்கர் பரிசு 2018 பெற்றார்.

 

வணிகச் செய்திகள் 

 

சுயாதீன கொடுப்பனவு ஒழுங்குமுறைக் குழு

சுயாதீன கொடுப்பனவு ஒழுங்குமுறைக் குழு அமைக்க ஆர்.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது.

2007 ஆம் ஆண்டு, கொடுப்பனவு & தீர்வு முறைமைகள் சட்டம், 2007 திருத்தங்களை முன்மொழிந்ததன்படி,ஒரு சுயாதீனமான கொடுப்பனவு ஒழுங்குமுறை வாரியம் (PRB) அமைக்க இந்திய ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது.


 Download Daily Current Affairs [2018- Oct – 17 & 20]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: