Why we need OBC Certificate?

OBC  பற்றிய சில தகவல்கள்

மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சார்ந்தவர்கள் other backward class சர்டிபிகேட் பற்றிய முழு விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது இதைப் பற்றி தெரியாதவர்கள் கீழே உள்ள தகவல்களை படித்து முழுமையாக தெரிந்து கொள்ளவும் மற்றவர்களுக்கும் இதை பகிரவும்.

1. OBC சான்று என்றால் என்ன?
OBC – என்றால் Other Backward Class என்று பொருள். மத்திய மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்
பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மத்திய அல்லது பொதுத்துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் இந்த இட ஒதுக்கீட்டை பெற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்த OBC சான்றிதழ் தேவைப்படுகிறது.
2. OBC சான்று யாருக்கு கிடைக்காது?
பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும ; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவினர்களுக்கு இந்த சான்று கிடைக்கும். தமிழ்நாட்டில் BC & MBC பட்டியலில் உள்ள ஜாதிகளில் ஒரு சில ஜாதிகள் இன்னும் மத்திய அரசின் OBC பட்டியலில் சேர்க்கப்படவில்லை . அந்த ஜாதிகளுக்கு OBC சான்று கிடைக்காது. இது பற்றிய விவரங்களை www.ncbc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

3. OBC சான்று எந்த அதிகாரியால் வழங்கப்படுகிறது?
இந்த OBC சான்று BC மற்றும் MBC சான்று வழங்கும் அதே வட்டாட்சியரால் தான் வழங்கப்படுகிறது. OBC சான்று பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

4. OBC சான்றுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இதனை பெறுவதற்கு முதலில் தமிழக அரசு வழங்கும் ஜாதிச்சான்றிதழ் (BC/MBC) பெற்றிருக்க வேண்டும். பின்னரே OBC விண்ணபபிக்க முடியும். தற்போது தமிழக அரசு www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக சான்றிதழ்கள் விண்ணப்பிக்கவும் பெறவும் வழிவகை செய்துளளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அருகிலுள்ள தமிழக அரசின் இ-சேவை மையங்களையோ அல்லது Computer Centre-களையோ அனுகி விண்ணபபிக்க முடியும்.

5. OBC சான்று விண்ணபபித்த எத்தனை நாளில கிடைக்கும்.?.
குறைந்த பட்சம் 1 வாரத்திலிருந்து அதிகபட்சமாக 1 மாதம் வரை ஆகும்.

6. OBC சான்றுக்கு எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
OBC சான்று பெற்றோரின் வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதால் 1 ஆண்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

7. OBC சான்று காலாவதி ஆகும் பட்சததில் என்ன செய்வது?
OBC சான்று காலாவதி(ஓராண்டு முடிந்திருப்பின்) ஆகியிருப்பின் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். முதன் முதலில் OBC சான்று பெறுவதற்கு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு மததிய அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை OBC சான்றினை புதுபபித்து வைத்துக்கொள்வது நல்லது.

8. OBC சான்று விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
A) பெற்றோரின் வருமானச்சான்று
B) ரேஷன் கார்டு
C) ஆதார் கார்டு
D) ஜாதிச்சான்றிதழ்

9. மத்திய அரசு அல்லது பொதுததுறை பணிகளுக்கு OBC பிரிவில் விண்ணப்பிததுவிட்டு OBC சான்று சமர்பபிக்கவில்லை எனில் என்ன நிகழும ;?
OBC பிரிவில் விண்ணப்பித்துவிட்டு OBC சான்று சமர்பபிக்காத பட்சத்தில் தாங்கள்
பொதுப்பிரிவினராக((General/Un-reserved) ) கருதப்படுவீர். பொதுப்பிரிவினராக கருதப்படுவதால் இடஒதுக்கீடு கிடைக்காது. இதனால் தங்களுக்கு அந்த வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி சேர்க்கை கிடைக்காமல் போவதற்கு வாய்பபுள்ளது. தாங்கள் OBC பிரிவினர் எனில் OBC-ல் விண்ணப்பிப்பதே சிறந்தது.

10. OBC சான்றிதழ பெறுவதற்கு கட்டணம் எவ்வளவு?
தமிழக அரசு இச்சான்று பெற நிர்ணயித்துள்ள தொகை RS.60.00(அருபது ரூபாய்) மட்டுமே.(ஆன்லைன் மூலம்)

11. OBC சான்றிதழை விரைவாக பெற ஏதேனும் வழி உண்டா?
விரைவாக பெறுவதற்கு என எதுவும் சிறப்பு வழிவகை இல்லை. தொடர்ந்து விண்ணப்பத்தின் நிலையை கண்கானிப்பதன் விரைவில் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

12. வேறு ஏதும் OBC சான்றிதழில் கவணிக்க வேண்டியவிஷயம உள்ளதா?
OBC சானறு விண்ணப்பிக்கும் படிவததில் தங்களுடைய பெயர் மற்றும் தந்தை பெயர் உள்ளிட்ட
தங்களுடைய விவரங்களை எழுதும பொழுது எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வேண்டும. பொதுவாக இந்த வேலைகளை நாம செய்வதில்லை மாவட்ட இ-சேவை மைய பணியாளர்களோ அல்லது computer center களிலோ தான் செய்கினறனர். இதனால் சில நேரங்களில் நமது பெயர் உள்ளிட்ட சில முக்கிய விவரங்களில் பிழை ஏற்படலாம். மேலும் obc சான்று பெற ஆறபின் ஒருமுறை நமது விவரங்கள் பிழை இல்லாமல் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும். மத்திய அல்லது பொதுததுறை நிறுவனங்களில் தாங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுதோ அல்லது பயிறசிக்கு சேரும பொழுதோ சான்றிதழ சரிபார்ப்பில் பிழை இருப்பது தெரியவந்தால் தாங்கள் நிராகரிக்கப்படலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: