சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், இருபதாம் நூற்றாண்டின் மதம் மற்றும் தத்துவத்தின் புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார். மிக உயரிய பாரத ரத்னா விருதை பெற்ற ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975
ஒரு தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி.
நாட்டின் முதல் துணை குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.
இருபதாம் நூற்றாண்டின் அறிஞர்களில் ஒப்பிடுகையில், மதம் மற்றும் தத்துவத்தின் மிகவும் புகழ்பெற்ற ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இந்து மதம் குறித்த புரிதலை வடிவமைப்பதில் இவரது பங்களிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1954-ம் ஆண்டில் நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான “பாரத ரத்னா” விருதைப் பெற்றார்.
1963-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ராயல் ஆர்டர் ஆஃப் மெரிட் அமைப்பின் கெளரவ உறுப்பினர் ஆனார்.
“ஆசிரியர்கள் நாட்டிலேயே சிறந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும்” என்று நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான், இந்தியாவில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி “ஆசிரியர் தினமாக” கொண்டாடப்படுகிறது.
• 1975-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார்.