Daily Current Affairs – October 24th to 27th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Oct 24th to 27th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  October 24th to 27th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

விராட் கோலி உலக சாதனை :-

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 259 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்கள் கடந்ததே சாதனையாக இருந்தது.

ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வு :-

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் :-

சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்டை சவுரவ் கோத்தாரி பிரிட்டன் லீட்ஸில் நடைபெற்ற போட்டியில் வீழ்த்தி 2018 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

ஐசிசி எலைட் பேனலின் இரண்டாவது உறுப்பினர் :-

300 ஒருநாள் போட்டிகளில் நடுவராக பணிபுரிந்த ஐசிசி எலைட் பேனலின் இரண்டாவது உறுப்பினரானார் இங்கிலாந்தின் கிறிஸ் பிராட்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :-

பூஜா தண்டா ஹங்கேரியிலுள்ள புடாபஸ்டில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்கள் ஃப்ரீ ஸ்டைல் ​​57 கிலோ எடைபிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி :-

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அரை இறுதிப்போட்டியில் இந்தியா ஜப்பான் அணியை மஸ்கட்டில் எதிர்கொள்கிறது.

 

முக்கியமான நாட்கள்

 

அக்டோபர் 24 – ஐக்கிய நாடுகள் தினம் :-

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி மற்றும் பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்குவதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு சபையே ஐக்கிய நாடுகள் சபை. ஐ.நாவின் பொதுசபை (General Assembly) நியூயார்க்கில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 1945 உருவாக்கப்பட்டது.

அக்டோபர் 24 – உலக அபிவிருத்தி தகவல் தினம் :-

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உலக அபிவிருத்த தகவல் தினமானது அக்டோபர் 24 ம் தேதி உலக அபிவிருத்திக்கான பிரச்சனைகளுக்கு உலகளாவிய பொது அபிப்பிராயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வதற்கும், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அவற்றை தீர்க்கவும் அனுசரிக்கப்படுகிறது.

அக்டோபர் 24 – உலக போலியோ தினம் 2018 :-

உலகளாவிய போலியோ தினம் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் போலியோ அழிக்கப்படுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உலக சுகாதார அமைப்பின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் முயற்சி, ஒழிப்புக்கு உறுதியளித்த மற்ற தொண்டர்களின் பங்களிப்புக்காக அனுசரிக்கப்படுகிறது.

உலக போலியோ தினம் தீம் 2018 :- “End Polio Now”

விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் :-

சர்தார் வல்லபாய் பட்டேல் (அக்டோபர் 31) பிறந்த நாள் கொண்டாடும் வாரத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரமாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சி.வி.சி) அனுசரிக்கிறது.

29 அக்டோபர் – 3நவம்பர் வரை விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரம் 2018 அனுசரிக்கப்படும்

இந்த ஆண்டிற்கான தீம் :-   ‘Eradicate Corruption-Build a New India’

அக்டோபர் 27 – உலக பாரம்பரிய ஆடியோகாட்சி தினம் :-

அக்டோபர் 27 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய ஆடியோகாட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒலி மற்றும் ஒலிவாங்கல் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, 2005ம் ஆண்டில் இருந்து யுனெஸ்கோ (ஐ.நா. கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாட்சார அமைப்பு) மூலம் இந்த நினைவு நாள் தேர்வு செய்யப்பட்டது. 

தீம் :- “Your Story is Moving”

உலக செய்திகள்

 

ஐ.நா. தின கச்சேரி :-

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையக பொது சபை மண்டபத்தில் 2018 ஐ.நா. தின கச்சேரி நடைபெறுகிறது.

இந்த ஆண்டு கச்சேரியின் தீம் :- “Traditions of Peace and Non-violence”

 

16 லட்சம் தபால் சேமிப்புக் கணக்கு :-

சுகன்யா சம்ரிதி யோஜனாவின் கீழ் 16 லட்சம் தபால் சேமிப்புக் கணக்குகளை திறந்து தமிழ்நாடு ஒரு தேசிய சாதனை படைத்துள்ளது.

 

மாநாடுகள்

 

உலக விவசாய தலைமை உச்சி மாநாடு 2018 :-

உலக விவசாய தலைமை உச்சி மாநாடு 2018 புது டெல்லியில் தொடங்கப்பட்டது . உலக விவசாய

தலைமை உச்சிமாநாட்டின் தீம் :- Connecting Farmers to Market’

 

சர்வதேச ஆரிய மஹாசம்மேளன்  – 2018 :-

இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சர்வதேச ஆரிய மஹாசம்மேளன் 2018 (அக்டோபர் 25, 2018)ஐ டெல்லியில் தொடங்கி வைத்தார்.

 

10 வது அணு சக்தி கூட்டமைப்பு :-

டாக்டர் ஜிதேந்திர சிங் புது டெல்லியில் 10 வது அணு சக்தி கூட்டமைப்பை தொடங்கி வைத்தார். 

தீம் : ‘Nuclear Power- Towards a Clean & Base Load Energy’

கைகா அணு மின் நிலைய அலகு 895 நாட்களுக்கு தடையின்றி இயங்கிய அழுத்தம் நிறைந்த கன நீர் உலை [PHWR] எனும் உலக சாதனை படைத்தது.

 

ஆரம்ப சுகாதார பராமரிப்பு 2 வது சர்வதேச மாநாடு :-

உலகளாவிய ஆரோக்கிய பராமரிப்பு [UHC] மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு[SDG]களை நோக்கிய ஆரம்ப சுகாதார பராமரிப்பு பற்றிய 2 வது சர்வதேச மாநாட்டில் ஸ்ரீ ஜே பி நடா பங்கேற்றார். இது அஸ்தானா, கஜகஸ்தானில் நடைபெற்றது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

இந்தியா மற்றும் மலாவி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் :-

இந்தியா மற்றும் மலாவி இடையே குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பிஅனுப்புதல் குறித்த உடன்படிக்கை ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பயங்கரவாதிகள், பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இந்தியாவில் இருந்து மலாவிக்கும் மலாவியில் இருந்து இந்தியாவிற்கும் திருப்பி அனுப்புவது குறித்த சட்டக் கட்டமைப்பை உருவாக்க இந்த ஒப்பந்தம் வழங்கும்.

 இந்தியத் திறன் நிறுவனம் ஒப்புதல் :-

அரசு தனியார் பங்களிப்பு மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியத் திறன் நிறுவனம் அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் தேவை மற்றும் உட்கட்டமைப்பு வசதி அடிப்படையில் இந்திய திறன் நிறுவனத்தை மேம்படுத்தும் வாய்ப்புகள் ஆராயப்படும்.

பிரிக்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் :-

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் புதுதில்லியில் (24.10.2018) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரேசில், ரஷ்ய கூட்டமைப்பு, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் சுற்றுசுழல், சமூக மற்றும் தொழிலாளர் நலத்துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியா – சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் :-

இந்தியா – சிங்கப்பூர் இடையே நிதி சார்ந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு இணை பணிக்குழு அமைப்பது தொடர்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய – ஆப்கானிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் :-

“ஆப்கானிஸ்தான் கணக்கியல் வாரியத்தின்” திறன் கட்டமைப்பில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்படுத்துவதையும், அறிவுப் பரிமாற்றத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் ஐ.டி திறன் மற்றும் தரத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதையும், மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பரிமாற்றத்தையும், பரஸ்பரம் பயனளிக்கும் கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டு செயல்பாடுகளையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிலைநிறுத்தும்.

தாய்பெய் – இந்தியா இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் :-

தாய்பெயில் உள்ள இந்திய தாய்பெய் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரு தரப்பு முதலீடுகளை ஒப்பந்தம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தாய்பெய் கழகம் மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான பரஸ்பர முதலீடுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்

இந்திய கடலோரக் காவல்படை 17 டோர்னியர் விமானம் :-  

இந்திய கடலோரக் காவல்படையின் 17 டோர்னியர் விமானம் 950 மில்லியன் ரூபாய் செலவில் மேம்பாட்டிற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் மூலம் மேம்படுத்தப்படும்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : –

இந்தியா மற்றும் வங்கதேச வர்த்தக மற்றும் கப்பல் இயக்கங்களுக்கான உள்நாட்டு மற்றும் கடலோர நீர் இணைப்புகளை மேம்படுத்துவதற்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா (PKVY)

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா (PKVY) நாட்டில் கரிம வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான ஒரு நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

விருதுகள்

 

2018 ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசு :-

 பிரதமர் நரேந்திர மோடியின் சர்வதேச பங்களிப்பு மற்றும் உலக பொருளாதார வளர்ச்சியையில் அவரது பங்கிற்காக 2018 ம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சியோலில் நடைபெற்ற 24 வது ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் 1990 ஆம் ஆண்டு சியோலின் அமைதிக்கான பரிசு முதல் முறையாக வழங்கப்பட்டது.

சிறந்த சுரங்க கருவி விற்பனையாளர் விருது :-

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்), மினி ரத்னா பொதுத்துறை செயல்திட்டம், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சிறந்த போட்டியாளர் மற்றும் சிறந்த சுரங்க கருவி விற்பனையாளர் விருது பெற்றது.

ஐ.நா மனித உரிமை பரிசு:-

மனித உரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகள் சபை பரிசு மனித உரிமைகக்காக சிறந்த சாதனை செய்ததற்காக கௌரவ விருது வழங்கப்படும்.

இந்த விருது உலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ம் தேதி விருது வழங்கும் விழா நியூயார்க்கில் நடைபெறும்.

பரிசு பெறுபவர்கள்

1) பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் அஸ்மா ஜஹாங்கீர் [மரணத்திற்கு பின்]

2) தான்சானியாவின் ரெபேக்கா க்யுமி

3) பிரேசிலின் முதல் உள்நாட்டு வழக்கறிஞர் ஜோனீயா வாபிச்சானா

4) அயர்லாந்தின் மனித உரிமை அமைப்பு முன்னணி பாதுகாவலர்கள்

 

செயலிகள் & போர்ட்டல்

 

“மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) :-

“மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் துவக்கிவைத்தார். “பொதுசேவையில் நான்” என்ற மையப்பொருளுடன் செயல்படவிருக்கும் இந்த இணையப்பக்கம் தகவல் தொழில்நுட்ப துறைகளில் ஈடுபட்டிருப்போர் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களின் முயற்சிகளை சமூக நோக்கங்கள், சமூக சேவை என்ற ஒரே தளத்திற்கு கொண்டுவர உதவும்.

 

கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுறவை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் இணைய -போர்டல் (SPARC) :-

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர், “கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுறவை மேம்படுத்துவதற்கான (SPARC) திட்டம்” என்ற வலைத் தளத்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.

 

இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2018 :-

டிஜிட்டல் தகவல்தொடர்பு தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் பயன்பாடுகளில் சமீபத்திய மற்றும் சிறந்தவற்றைக் காண்பிக்கும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) எதிர்கால எல்லைகளை நிறுவுதல் டெல்லியில் தொடங்கியது.

தீம் :- “New Digital Horizons – Connect. Create. Innovate.”

 

பாதுகாப்பு செய்திகள்

 

நேட்டோவின் மிகப்பெரிய இராணுவப்பயிற்சி :-

பனிப்போருக்குப் பிறகு நடக்கும் நேட்டோவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சி நார்வேயில் தொடங்கியது.

 

அறிவியல் செய்திகள்

 

முதல் சோயுஸ் ராக்கெட் :- 

ரஷ்யா முதன்முறையாக சோயுஸ் ராக்கெட்டை அக்டோபர் 26 அன்று  வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

உலகின் மிகச்சிறிய ஆப்டிகல் கைரோஸ்கோப் :-

உலகின் மிகச்சிறிய ஆப்டிகல் கைரோஸ்கோப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் – வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு 3D இடங்களில் அவற்றின் நோக்குநிலைக்கு இது உதவுகிறது.

தண்ணீரில் இருந்து எண்ணெயை நீக்க புதிய முறை :-            

ஐ.ஐ.டி கவுகாத்தி ஆய்வாளர்கள் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய நுண்ணிய எண்ணெய்-விரும்பி பொருட்களை (oleophilic) அலோ வேரா ஜெல் பயன்படுத்தி எண்ணெய் விலக்கிகளாக மாற்றியுள்ளனர்.

புதிய இலைப் பறவை இனம்:-

இந்தோனேசியாவின் ரோட் எனும் உலர்ந்த இந்தோனேசிய தீவில் மட்டுமே காணக்கூடிய ஃபைலோஸ்கோபஸ் ரோடியென்ஸிஸ் எனப்படும் புதிய இலைப் பறவை இனம் கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய கெக்கோ பல்லி இனங்கள்L-

இந்தியாவின் ஊர்வன விலங்கினங்களில் சமீபத்திய சேர்க்கைகளாக மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளான அகஸ்தியமலை மற்றும் ஆனைமலை மலைத்தொடர்களில் மட்டுமே காணப்படும் ஸ்பாட்-கழுத்து டே கெக்கோ பல்லிகள் மற்றும் ஆனைமுடி கெக்கோ பல்லி சேர்க்கப்பட்டுள்ளது.

தரவரிசை 

 

பேட்மின்டன் உலகக் கூட்டமைப்பு தரவரிசை :-

1) சீன தைபேயின் தாய் ட்சூ யிங்

2) இந்தியாவின் பி.வி. சிந்து

 

மாநாடுகள்

 

22 வது தேசிய அளவிலான கூட்டம் ;-

இந்தியா மற்றும் மியான்மர் இடையேயான 22 வது தேசிய அளவிலான கூட்டம் 25 முதல் 26 அக்டோபர் 2018 வரை நடந்தது. இரு நாடுகளும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கவும், சர்வதேச எல்லைக்குள்ளாக மக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஒப்புக்கொண்டது.

இந்திய பெண்கள் தேசிய கரிம விழா 2018 ;-

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி புது தில்லியில் இந்திய பெண்கள் தேசிய கரிம விழா 2018 5வது பதிப்பை திறந்துவைத்தார்.

13 வது ஆண்டு இருதரப்பு உச்சி மாநாடு :-

பிரதமர் நரேந்திர மோடி இந்தியா – ஜப்பான்  இடையே நடக்கும் 13-வது ஆண்டு இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார்.

திட்டங்கள்

 

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா (PKVY):-

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா (PKVY) நாட்டில் கரிம வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான ஒரு நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

தர்பன் திட்டம் :-

இந்தியாவில் கிராமப்புற தபால் அலுவலகங்கள் டிஜிட்டல் முன்னேற்றம் பெறுவதற்காக தர்பன் திட்டம் தொடங்கப்பட்டது.

க்ரிஷி கும்பா – 2018 :-

பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 2018 ஆம் ஆண்டு க்ரிஷி கும்பாவை தொடங்கி வைத்தார். மோடியின் கனவுத்திட்டமான 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கு நாட்டின் உணவு உற்பத்தியாளர்கள் விதைப்பது முதல் விற்பது வரை அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

நியமனங்கள்

மஹிந்தர ராஜபக்சே என்பவரே இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்

 


 Download Daily Current Affairs [2018- Oct – 24 to 27]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: