Daily Current Affairs – October 28th to 31st – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Oct 28th to 31st)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  October 28th to 31st

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி :-

ஓமனில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவருக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்தியாவின் புதிய நம்பர் 1 டென்னிஸ் வீரர்:-

சமீபத்திய ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ரோகன் போபண்ணாவை பின்னுக்குத் தள்ளி 38வது இடத்துக்கு முன்னேறி திவிஜ் சரண் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புதிய நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஆனார்.

வாலென்சியா போட்டி :-

கென்யாவின் தூர ஓட்டக்காரரான ஆபிரகாம் கிப்டம் வாலென்சியா போட்டியில் வென்றார், அரை மராத்தான் போட்டியில் 58 நிமிடம் 18 நொடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்தார்.

பானாசோனிக் ஓபன் இந்தியா கோல்ஃப் :-

இந்திய கோல்ப் வீரர் காலின் ஜோஷி பானாசோனிக் ஓபன் இந்தியா கோல்ஃப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ITTF சேலஞ்சு பெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ் :-

ITTF சேலஞ்சு பெல்ஜியம் ஓபன் தொடரில் 21 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் அயிகா முகர்ஜி வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் :-

மும்பையில் நடைபெற்ற 4 வது ஒருநாள் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து இந்தியா, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் என்று முன்னிலை வகிக்கிறது.

ஐஸ்லே ஆஃப் மேன் சர்வதேச சதுரங்க போட்டி :-

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐஸ்லே ஆஃப் மேன் சர்வதேச சதுரங்க போட்டியில் இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்சை வென்றார் கிராண்ட்மாஸ்டர் அதிபன். இதன்மூலம் மூன்றாவது இடம் பிடித்தார்.

ஆசிய ஸ்னூக்கர் டூர் போட்டி :-

சீனாவின் ஜினான் நகரில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் டூர் போட்டியில் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றார்.

 

முக்கியமான நாட்கள்

 

அக்டோபர் 30 – டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்த நாள் விழா

அக்டோபர் 30 – இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் பாபா, பல முக்கிய நிறுவனங்களுக்கு அடித்தளத்தை அமைத்தார்.

அக்டோபர் 31 – உலக நகர தினம்

சீனாவின் ஷாங்காய் நகரில் முதல் உலக நகர தினம் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. உலகளாவிய நகரமயமாக்கத்தில் உள்ள சர்வதேச சமூகத்தின் நலன்களை நாடுகள் மற்றும் நகரங்களுக்கிடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், நிலையான நகர அபிவிருத்திக்கு பங்களிப்பதற்கும் இந்த நாள் மிகுந்த ஆதரவை அளிக்கின்றது.

தீம் :- Better City, Better Life.

 

உலக செய்திகள்

 

உலகின் உயரமான வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் கேவடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேலை கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.

உலகின் மிக உயரமான, இந்தியாவின் இரும்பு மனிதன் என்றழைக்கப்படும் வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் சிலை அவரது 143 வது பிறந்த நாள் விழாவில் திறக்கப்பட்டது.

 

ரோ–பேக்ஸ் ஃபெர்ரி சேவை

குஜராத்தில், கோகா மற்றும் தஹெஜிற்கு இடையில் ஒரு தனிப்பட்ட ரோ-பேக்ஸ் ஃபெர்ரி சேவையை முதலமைச்சர் விஜய் ரூபனி தொடங்கி வைத்தார்.

 

அறிவியல் செய்திகள்

 

உமிழ்வு சோதனை வசதி :-

CSIR-NEERIல் ஒரு உமிழ்வு சோதனை வசதி நிறுவப்பட்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறினார், இதன் மூலம் வழக்கமான மற்றும் பசுமை பட்டாசுகளின் உமிழ்வு மற்றும் ஒலியை கண்காணிக்க விரிவான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

SWAS, SAFAL மற்றும் STAR :-

CSIR விஞ்ஞானிகள் குறைவாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பட்டாசுக்களை உருவாக்கியுள்ளனர், அவை சுற்றுப்புற சூழலுக்கு நட்பாக மட்டுமல்லாமல், வழக்கமான பட்டாசுக்களைவிட 15-20% மலிவானவை ஆகும்.

பாதுகாப்பான நீர் வெளியீட்டாளர் (SWAS), பாதுகாப்பான குறைந்த அலுமினியம் (SAFAL) மற்றும் பாதுகாப்பான தெர்மாய்ட் பட்டாசு (STAR) என்று இந்த பட்டாசுகள் பெயரிடப்பட்டுள்ளன.

 

திட்டங்கள்

 

அம்ருத் திட்டம் :-

மத்திய அரசின் அம்ருட் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சென்னை மற்றும் அதன் 8 புறநகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  

இந்த திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் இதன் புற நகரங்களான அம்பத்தூர், ஆலந்தூர், மாதவரம், பல்லாவரம், தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மற்றும் கோயமுத்தூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அசாம் அரசு, பிரம்மபுத்திரா ஆற்றை முக்கிய மூலமாக வைத்து மாநிலத்தின் நகர்ப்புற வீடுகளுக்கு குடிநீர் வசதிகளை AMRUT திட்டத்தின் கீழ் வழங்க திட்டமிட்டுள்ளது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

இந்தியா, ஜப்பான் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்து

டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஷின்சோ அபே தலைமையிலான 13 வது ஆண்டு இருதரப்பு உச்சி மாநாட்டிற்குப் பின்னர் இந்தியா மற்றும் ஜப்பான் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்து மற்றும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டன.

 

செயலிகள்

 

பிக் அப் மற்றும் டிராப் வசதி

கர்நாடக தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகளுக்கு பிக் அப் மற்றும் டிராப் வசதியளிப்பை ‘Chunavana’ மொபைல் செயலி மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த செயலியில் நவம்பர் 1 நள்ளிரவு வரை முன்பதிவு செய்யலாம்.

 

பொருளாதார செய்திகள் 

 

ஜப்பான் 316 பில்லியன் யென் கடனளிக்க ஒப்புதல்

இந்தியாவில் ஏழு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 316 பில்லியன் யென் கடன் வழங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில், டெல்லி, வடகிழக்கு மற்றும் சென்னை ஆகியவை இதில் அடங்கும்.

இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சி மாநாடு

புதுதில்லியில் 30.10.2018 நடைபெற்ற இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இத்தாலி பிரதமர் திரு. கியூஸெப் கோண்டேவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

மாநாட்டில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா – இத்தாலி தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் அடுத்த கட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தார். இத்திட்டம் இந்திய தொழில் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் புதிய பொருட்களை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் என்றார்.

பொது சுகாதார பராமரிப்பு பற்றிய 5வது தேசிய உச்சி மாநாடு

இந்தியாவில் பொது சுகாதாரத் திட்டத்தில் சிறந்த மற்றும் பிரதிபலன் சேவைகள், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த 5-வது தேசிய உச்சிமாநாட்டை மாநில முதலமைச்சர் திரு. சர்பானந்தா சோனாவால் முன்னிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா அசாம் மாநிலம், காஸிரங்காவில் தொடங்கி வைத்தார்.

உலக அளவிலான சுகாதார சேவை தொடர்பான சிறந்த சேவைகள், நடவடிக்கைக்கான ஆதாரம் குறித்த Coffee Table புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

 

விருதுகள்

 

பெண்கள் கல்வியை ஊக்குவித்ததற்காக 2018 கிளெய்ட்ஸ்மேன் [Gleitsman] விருதை மலாலா யூசப்சாய் [Malala Yousafzai]  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்.

 

நியமனங்கள்

 

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் ஜெயிர் பொல்சொனாரோ வெற்றி பெற்றார்.

மைக்கேல் டி ஹிக்கின்ஸ் என்பவர் இரண்டாம் முறையாக ஐரிஷ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதிபதி ஏ.எஸ். போபண்ணா என்பவர் கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மேரி கோம் AIBA உலக சாம்பியன்ஷிப் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் என்பவர்  பாம்பே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 


Download Daily Current Affairs [2018- Oct – 28 to 31]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: