தேசியபால் தினம் national milk day
வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ்குரியன் பிறந்தநாளை ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி தேசியபால் தினமாக மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை சிறப்பாக கொண்டாடி வருகிறது.
வர்கீஸ்குரியன் கோழிக்கோட்டில் 1921ஆம் ஆண்டு பிறந்தார்.இந்த ஆண்டு குரியனின் நூற்றாண்டு பிறந்த தினம்.
முதல் பால் தினமானது 26 நவம்பர் 2014 அன்று அனுசரிக்கப்பட்டது.
1970-ல் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தால் (NDDB – National Dairy Development Board) தொடங்கப்பட்ட “வெண்மைப் புரட்சியின்” வடிவமைப்பாளர் டாக்டர் குரியன் ஆவார்.
இந்த திட்டமானது இந்தியாவை மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றுவதற்கு வழி வகுத்தது. தற்போது இந்தியா தனது பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெற்றுள்ளது