ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 1 / 15ர – ற வேறுபாடு
தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்
ஒலி மயக்கத்தால் மிகுதியாகப் பிழை நேரும் இடம். ஆண்டுதோறும் வினா கேட்கப்படும் பகுதி.
257இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).
விதிகள்
ற் தன் வரிசையோடு சேரும்; ர் சேராது
ற் என்னும் மெய்யெழுத்து ற வரிசை உயிர்மெய்யோடு சேர்ந்து வரும். ர் அவ்வாறு வராது.
குற்றம்விற்றான்நெற்றிபுற்று
ன் மெய்க்குப் பின் ற வரும், ர வராது
னகர மெய்க்குப் பின் றகரம் வரும்; ரகரம் வருவதில்லை.
குன்றம்தின்றான்பன்றிகன்று
ர, ற சொல்லுக்கு முதலில் வராது
தமிழ்ச் சொற்களில் ர-வும் ற-வும் முதலெழுத்தாக வருவதில்லை. ர-வில் தொடங்கும் வடசொற்களை எழுதும்போது அ, இ, உ ஆகிய உயிர்களில் ஏற்ற ஒன்றை முதலில் சேர்த்து எழுத வேண்டும்.
ரங்கன் → அரங்கன்ரவி → இரவிராமன் → இராமன்ரத்தம் → இரத்தம்
ற் சொல்லின் ஈற்றில் வராது; ர் வரும்
றகர மெய் ஒரு சொல்லின் கடைசி எழுத்தாக வராது. ரகர மெய் வரும்.
நீர்புதர்மலர்கார்ஊர்
ன், ல் ஈறுகள் வல்லினம் சேரும்போது ற் ஆகும்
னகர, லகர மெய்யை ஈற்றில் உடைய சொற்கள் வல்லெழுத்தை முதலில் உடைய சொல்லோடு சேரும்போது அந்த ஈற்று மெய் ற் ஆகத் திரியும்; ர் ஆகத் திரியாது.
பொன் + கொல்லன் = பொற்கொல்லன்கல் + கு = கற்குபல் + கள் = பற்கள்சொல் + படி = சொற்படி
ற், ர் மெய்களுக்குப் பின் வரும் எழுத்துகள்
ற் மெய்க்குப் பின் க, ச, ப, ற ஆகிய நான்கு வரிசை உயிர்மெய்களே வரும். ர் மெய்க்குப் பின் க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங ஆகிய பத்து வரிசைகள் வரும்.
ற் → பொற்கலம், கற்சிலை, கற்பு, உற்றார்ர் → கார்காலம், பார்த்தான், சேர்ந்தான், ஊர்வலம்
தனிக்குறிலுக்குப் பின் ர் நிற்காது; ற் நிற்கும்
தனி உயிர்க் குற்றெழுத்தின் பின்னும், தனி உயிர்மெய்க் குற்றெழுத்தின் பின்னும் ர் மெய் நிற்காது; ற் மெய் நிற்கும்.
உற்றார்கற்றார்பெற்றான்
வடசொல் வடிவங்களைத் தமிழ் வடிவில் எழுதுதல்
அர்ச்சனை, கர்ப்பம், தர்ப்பை என்பன வடசொற்கள். தமிழ் இலக்கண நூற்படி இவை மாறி வழங்கும்.
அர்ச்சனை → அருச்சனைகர்ப்பம் → கருப்பம்தர்ப்பை → தருப்பை
ற் மெய்க்குப் பின் மெய்யெழுத்து வராது
ற் மெய்க்குப் பின் உயிர்மெய் எழுத்தே வரும், மெய்யெழுத்து வராது. ர் மெய்க்குப் பின் மெய்யும் உயிர்மெய்யும் வரும்.
கற்கண்டுகற்சிலைசிற்பம்ஆர்க்கும்
ஓசை வேறுபாடு
ற வரப்பெற்ற தமிழ்ச் சொற்கள் அழுத்தமான ஓசையை உடையனவாக இருக்கும். ர வரப்பெற்ற சொற்கள் வன்மையும் மென்மையும் அல்லாத நடுத்தர ஓசையை உடையனவாக இருக்கும்.
அரம் (நடுத்தர ஓசை) — அறம் (அழுத்த ஓசை)அரை — அறைஆர — ஆற
ற் தமிழுக்கே சிறப்பு
றகரம் தமிழ் மொழிக்கே சிறப்பானது. ரகரம் பல மொழிகளுக்கும் பொதுவானது.
சொற்கள் (257)
அறா — தற்
இறங்கு — கிழே இறங்கு
அரம் — ஒர் ஆயுதம்
அறம் — தருமம்
அரமனை — அரசன் வீடு
அறமனை — தருமசாலை
அரி — விஷ்ணு, அரி
அறி — தெரிந்துகொள்
அரிவை — பெண்
அறிவை — அறிவாய்
அரு — அருமையான
அறு — துண்டி
அருகு — சமீபம்
அறுகு — அறுகம்புல்
அருந்து — சாப்பிடு
அறுந்து — அறுபட்டு
அருவி — மலையருவி
அறுவி — அறச்செய்
அரை — பாதி
அறை — வீட்டின் அறை
அலரி — ஒருவகைப் பூ
அலறி — கதறி
ஆர — நிறைய
ஆற — தணிய
ஆரல் — ஒருவகை மீன்
ஆறல் — தணிதல்
இர — யாசி
இற — கட; சாகு
இரகு — ரகு அரசன்
இறகு — பறவையின் இறகு
இரங்கு — மனம் இரங்கு
இறங்கு — கீழிறங்கு
இரத்தல் — பிச்சை எடுத்தல்
இறத்தல் — சாதல்; கடத்தல்
இரப்பு — யாசித்தல்
இறப்பு — சாதல்
இரவு — இராத்திரி; இரத்தல்
இறவு — சாதல்
இரு — உட்கார்
இறு — ஒடி; வடிகட்டு
இருக்கு — வேதங்களுள்ஒன்று
இறுக்கு — அழுந்தக்கட்டு
இருப்பு — நிலைமை
இறுப்பு — குடியிறை
இரும்பு — இரும்பு
இறும்பு — சிறுமலை
இரை — ஆகாரம்; ஒலி
இறை — வரி; அரசன்
ஈறு — முடிவு
உரல் — உரலு
உறல் — அடைதல்
உரவு — வலிமை
உறவு — சொந்தம்
உரி — மரவுரி; பட்டை
உறி — பண்டங்கள்
உரிய — உரிமையான;
உரு — உருவம்
உருக்கு — இளகச்செய்
உறுக்கு — கோபி
உருமு — இடி
உறுமு — கர்ச்சி
உருவி — நாயுருவி
உரை — சொல்; தேய்
ஊர — நகர; பரவ
ஏரி — பெரிய குளம்
ஒரு — ஒன்றாகிய
ஒறு — தண்டி
ஒருத்தல் — ஆண்யானை
ஒறுத்தல் — கோபித்தல்
கர — ஒளி; கரவருடம்
கற — (பால்) கற
கரி — யானை; அடுப்புக்கரி
கறி — கடி; (காய்) கறி
கருத்து — எண்ணம்
கருப்பு — பஞ்சம்
கறுப்பு — கருமைநிறம்
கருவல் — கறுப்பானது
கறுவல் — கோபித்தல்
கருவி — ஆயுதம்
கறுவி — கோபித்து
கரை — ஒரம்; கரை
கறை — குற்றம்; மாசு
கரையான் — கடற்கறையி
கறையான் — செல்
கவர் — அபகரி
கவறு — சூதாடுகருவி
காரல் — ஒரு வகை மீன்
காறல் — (கால்-தல்)
(காறி — உமிழ்தல்)
கார் — மேகம்
காறு — கொழு
கிரி — மலை
கிறி — பொய்; வழி
கீரி — ஒரு வகைப் பிராணி
கீறி — கிழித்து
குரங்கு — வானரம்
குறங்கு — தொடை
குரஞ்சி — ஒர் இராகம்
குறஞ்சி — செம்முள்ளி
குரத்தி — தலைவி
குறத்தி — குறிஞ்சி
குரம் — குளம்பு
குறம் — குறச்சாதி,குறி
குரல் — தொனி
குறள் — ஒருவகைப் பா
குரவர் — பெரியோர்
குறவர் — ஒருவகை
குரவை — கூத்து
குறவை — ஒருவகை மீன்
குரு — ஆசான்
குறு — குறுகிய
குருகு — நாரை குறு
குரை — ஒலி குறை
கூர — நிறைய
கூற — சொல்ல
கூரிய — கூர்மையான
கூறிய — சொல்லிய
கூரை — வீட்டின் கூரை
கூறை — புடைவை
கோரல் — விரும்புதல்
கோறல் — (கொல்–தல்)
சாரு — சார்ந்திரு, கிளி
சாறு — இரசம்
சிரை — தலையைச் சிரை
சிறை — காவல்
சீரிய — பெருமை பொருந்திய
சீறிய — கோபித்த
சுரா — கள்
சுறா — ஒருவகை மீன்
சுருக்கு — சுருங்கச் செய்
சுறுக்கு — வேகம், விரைவு
சுரை — ஒருவகைக் கொடி
சுறை — கொத்தான் செடி
சுவர் — மதில்
சுவறு — வற்று
சூரல் — பிரம்பு
சூறல் — (சூல்தல்) குடைதல்
சூரன் — வீரன்,சூரியன்
சூறன் — மூஞ்சுறு
செரித்தல் — சீரணித்தல்
செறித்தல் — நெருக்குதல்
செரு — போர்
செறு — வயல் ச்
சேரல் — கிட்டல்
சொரி — பொழி
சொறி — ஒருவகை நோய்
சோர் — தளர்
சோறு — சாதம்
தரி — அணிந்துகொள்
தறி — வெட்டு
இறுக — விடு
திரம் — நிலை
திறம் — வல்லமை
திறை — கப்பம்
துரவு — கிணறு
துறவு — துறத்தல்
துரத்தல் — செலுத்துதல்
துறத்தல் — நீக்குதல்
துரு — இரும்பில் பிடிக்கும் துரு
துறு — நெருங்கு
துருவல் — தேடுதல்
துறுவல் — நெருங்கல்
துரை — தலைவன்
துறை — நீர்த்துறை, வழி
தூர் — வண்டல், நிரப்பு
தூறு — பழிச்சொல்
தெரித்தல் — தெரிவித்தல் த
ெறித்தல் — துள்ளுதல்
தேர — ஆராய
தேற — தெளிய
தேர் — ரதம்
தேறு — தெளிவு அடை
நருக்கு — நசுக்கு
நறுக்கு — துண்டி
நரை — வெண்மயிர்
நறை — வாசனை
நிருத்தம் — நடனம் ந
ிறுத்தம் — நிறுத்துதல்
நிரை — வரிசை
நிறை — நிறைவு
நீர் — ஜலம்
நீறு — விபூதி
நெரி — நொறுங்கு, தகர்
நெறி — வழி, நீதி
பரந்த — பரவிய
பரவை — கடல்
பறவை — பட்சி
பரி — தாங்கு, குதிரை
பறி — பிடுங்கு, பொன், பை
பரை — பார்வதி
பறை — தம்பட்டம்
பாரை — கடப்பாரை
பாறை — கற்பாறை
பிரதேசம் — இடம்
பிறதேசம் — அந்நிய நாடு
பிரை — மோர்ப்பிரை
பிறை — இளஞ்சந்திரன்
புரணி — ஊன்
புறணி — புறங்கூறல்
புரம் — பட்டணம்
புறம் — பக்கம்
புரவு — காத்தல்
புறவு — புறா
பெரு — பெரிய
பேறு — புண்ணியம்
பொரி — நெற் பொரி
பொறி — இயந்திரம்
பொரித்தல் — பொரியச்
பொறித்தல் — சித்திரம்
பொரு — சண்டைசெய்
பொறு — போறுத்துக்கொள்
பொருப்பு — மலை
பொறுப்பு — கடமை
மறம் — கோபம், பாவம்
மறல் — யமன்
மரி — சா
மறி — ஆட்டுக்குட்டி
மரு — வாசனை
மறு — குற்றம்
மருகல் — ஒர் ஊர்
மறுகல் — சுழலல்
மருகி — மருமகள்
மறுகி — மயங்கி
மருகு — மகர வாழை
மறுகு — நெடுந்தெரு
மருவல் — பொருந்துதல்
மறுவல் — கஸ்தூரி மிருகம்
மாரி — மழை
மாறி — மாறுத லடைந்து
முரி — ஒடி
முறி — தளிர்
முருக்கல் — உருக்குதல்
முறுக்கல் — திருகுதல்
முருக்கு — கலியாண
முறுக்கு — தின்பண்டம்
மெய்யுரை — உண்மைச்சொல்
மெய்யுறை — கவசம்
வருத்தல் — துன்பப்படுத்துதல்
வறுத்தல் — காய்களை
வரை — மலை
வறை — துவட்டற்கறி
வர்க்கம் — இனம்
வற்கம் — குதிரைக்கயிறு
விரகு — தந்திரம்
விறகு — விறகு
விரலி — நீண்ட விரலினை
விறலி — கருத்து
விரல் — கைவிரல்
விறல் — வலிமை
விரைத்தல் — விதைத்தல்
விறைத்தல் — மரத்துப்போ
வீரி — காளி
வீறி — ஒங்கி
வெரு — பயம்
வெறு — வெறுப்பு அடை
வேர் — மரம் முதலியவற்றின்
வேறு — பிறிது