அத்தியாயம் 2 — ல – ழ – ள வேறுபாடு | தமிழ்ச் சொல் விளக்கம்

ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 2 / 15

ல – ழ – ள வேறுபாடு

தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்

ழ-கரம் தமிழுக்கே உரியது. இம்மூன்றின் மயக்கம் எழுத்துப் பிழைக்கும் பொருள் மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.

289இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).

விதிகள்

ழ தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து

ழகரம் தமிழிலும் மலையாளத்திலும் மட்டுமே உள்ள தனிச் சிறப்பு எழுத்து. ல, ள ஆகியவை பிற மொழிகளிலும் உள்ளன.

தமிழ்வாழ்கீழ்ஆழம்

உச்சரிப்பு இடம் வேறுபடுகிறது

ல-கரம் நாவின் நுனி மேல் வாய்ப் பல்லடியைத் தொட்டு ஒலிக்கும். ள-கரம் நாநுனி மேல்வாயை வருடி ஒலிக்கும். ழ-கரம் நாநுனி மேல்வாயைத் தொடாமல், நாவின் ஓரம் படியும்படி ஒலிக்கும். ஒலி மயக்கமே பிழைக்குக் காரணம்.

கலம் — களம் — கழம்வலி — வளி — வழிஅலகு — அளகு — அழகு

ல் ஈறு வல்லினம் சேரும்போது ற் ஆகும்

லகர மெய் ஈற்றுச் சொல் வல்லினத்தோடு சேரும்போது ற் ஆகத் திரியும்.

கல் + கு = கற்குபல் + கள் = பற்கள்சொல் + படி = சொற்படிநெல் + குதிர் = நெற்குதிர்

ள் ஈறு வல்லினம் சேரும்போது ட் ஆகும்

ளகர மெய் ஈற்றுச் சொல் வல்லினத்தோடு சேரும்போது ட் ஆகத் திரியும்.

நாள் + காலம் = நாட்காலம்ஆள் + கொல்லி = ஆட்கொல்லிமுள் + கரண்டி = முட்கரண்டிகோள் + பிழை = கோட்பிழை

ழ் ஈறு திரியாது

ழகர மெய் ஈற்றுச் சொல் புணரும்போது திரிபு அடையாது; அதனால் ழ-கரம் அவ்வாறே நிற்கும்.

வாழ் + நாள் = வாழ்நாள்கீழ் + மை = கீழ்மைதாழ் + வு = தாழ்வு

சொற்கள் (289)

அலகம் — யானைத்திப்பிலி
அளகம் — பெண்மயிர்
அலகு — பறவையின் மூக்கு ப துடைப்பம்
அழகு — சிறப்பு
அலகை — பிசாசம்
துளகை — அளகாபுரி
அலம் — கலப்பை
அளம் — உப்பளம்
அலி — பேடி
அழி — கெடு
அளி — வண்டு,கொடு
அலை — கடலின் அலை
அளை — வளை,தயிர்
அல் — இருள், மதில்
அள் — அள்ளு
அவல — ஓர் உணவு, பள்ளம்
அவள் — அப்பெண்
ஆலம் — விஷம்
ஆழம் — பள்ளம்
இலகு — இலேசு, ஒளிசெய்
இளகு — நெகிழ்
இழிவு — ஈனம், குற்றம்
இளிவு — நிந்தை
இலை — தழை
இழை — நூற்கிற நூல்
இளை — மெலி,வேலி
உலம் — திரண்டகல்
உளம் — உள்ளம்
உலர்தல் — காய்தல், வாடல்
உளர்தல் — தடவல், சுழலல்
உலவு — உலாத்து
உழவு — பயிர்த்தொழில்
உளவு — வேவு, இரகசியம்
உள — உள்ளன
உழி — இடம்; பக்கம்
உளி — தறிக்குங் கருவி
உலுக்கு — குலுக்கு; அசை
உளுக்கு — சுளுக்கு
உலை — கொல்லனுலை;நீருலை
உழை — பக்கம்; மான்
உளை — பிடரிமயிர்; சேறு
உள் — உட்புறம்
உல்கு — சுங்கம்
உள்கு — நினை
உல்லம் — ஓர் மீன்
உள்ளம் — மனம்
எலும்பு — எலும்பு
எழும்பு — உயர்
எல் — சூரியன்; பகல்
எள் — ஓர் தானியம்; நிந்தை
ஒலி — சத்தம்
ஒழி — நீங்கு
ஒளி — பிரகாசம்; அறிவு
ஒல் — முடிவிடம்; ஒலிக்குறிப்பு
ஒள் — அழகு
கலம் — பாத்திரம்; ஒரளவு
களம் — மிடறு; போர்க்களம்;
கலர் — கீழ்மக்கள்
களர் — களர்நிலம்
கலவு — கூட்டு
களவு — திருட்டு
கலி — ஒலி; வறுமை; ஒர்யுகம்
கழி — நீக்கு
களி — மகிழ்ச்சி
கலை — ஆண்மான்; மேகலை
கழை — கரும்பு; மூங்கில்
களை — அயர்வு; அழகு
கலைவு — குலைவு; பிரிவு
களைவு — களைதல்
கல் — கல்லு; மலை
கள் — மது; வண்டு
கல்லல் — கல்லுதல்
கள்ளல் — களவு செய்தல்
கல்லி — ஆமை, ஊர்க்குருவி
கள்ளி — ஓர்மரம்; திருடி
கல்வி — படிப்பு
கள்வி — திருடி
காலம் — சமயம்; பருவம்
காளம் — கருமை; நஞ்சு
காலி — பசுக்கூட்டம்
காளி — துர்க்கை
காலை — விடியற்காலம்
காளை — எருது; இளையோன்
கிலி — பயம்
கிழி — கிழிப்பாய்
கிளி — கிளிப்பிள்ளை
கீல் — கதவின்கீல்
கீழ் — கீழே
கீள் — கெளபீன உடை
குரல் — ஒலி
குறள் — குறுமை; ஒரு நூல்
குலம் — வமிசம்
குளம் — தடாகம்; நெற்றி
குழம்பு — சேறு; குழம்புக்கறி
குளம்பு — விலங்கின் குளம்பு
குலிசம் — வச்சிராயுதம்
குளிசம் — இரட்சாபந்தனம்
குலை — கொத்து
குழை — குண்டலம்; தளிர் இலை
கூலம் — கடைவீதி; தானியம்
கூலி — சம்பளம்
கூளி — பேய்; பெருங்கழுகு
கேழ் — ஒப்பு, ஒளி; நிறம்
கேள் — கேட்பாய்; உறவு
கேலி — பரிகாசம்
கேளி — மகளிர் விளையாட்டு
கொலு — நிமிர்ச்சி; சமூகம்
கொழு — காறு
கொளு — பாட்டின் கருத்தை
விளக்குஞ் — சொற்றொடர்
கொலை — கொல்லுதல்
கொளை — இசைப்பாட்டு
கொல் — கொல்லன்;கொல்லு
கொள் — தானியம்;வாங்கு
கொல்லி — ஒரு மலை
கொள்ளி — நெருப்புறுவிறகு
கொல்லை — தோட்டம்
கோலம் — அழகு;பன்றி
கோளம் — எ உருண்டை
கோலி — இலந்தை
கோழி — எ. கோழி
கோளி — அத்தி;ஆல்
கோல் — அம்பு; ஊன்றுகோல்
கோள் — புறங்கூறல்
சகலம் — எல்லாம்
சகளம் — உருவத்தோடுகூடியது
சலம் — அசைவு; ஜலம்
சளம் — மெ துன்பம்; மூர்க்கம்
சவலை — மெலிவு
சவளை — வங்கமணல்
சாலிகை — கவசம்
சாளிகை — வண்டு; பணப்பை
சுல்லி — அடுப்பு
சுள்ளி — சிறுவிறகு
சூலி — கருப்பிணி
சூழி — உச்சி
சூளி — ஆண்மயிர்
சூலை — ஒரு நோய்
சூளை — செங்கற் சூளை
சூல் — கர்ப்பம்
சூழ் — சுற்றுவாய்
செதில் — மரச் செதில்
செதிள் — மீன் செதிள்
செல்லு — கழிவு
செள்ளு — தெள்ளுப்பூச்சி
சொல்லல் — சொல்லுதல்
சொள்ளல் — காரியத்தாழ்ச்சி
சோலி — ஜோலி;காரியம்
சோளி — பிச்சைக்காரர் பை
தலம் — இடம்
தளம் — சேனை
தலை — சிரசு
தழை — இலை
தளை — விலங்கு; கட்டு
தவலை — பெரிய பாத்திரம்
தவளை — ஓர் விலங்கு
தாலம் — நா; கூந்தற்பனை
தாளம் — காலவளவு; ஒருவகை
தாலி — மங்கலநாண்
தாழி — குடம்; சாடி
தால் — தாலாட்டு
தாழ் — பணிவாய்
தாள் — கால்; முயற்சி
துலக்கம் — தெளிவு; பிரகாசம்
துளக்கம் — அசைவு; கலக்கம்
துலை — ஒப்பு; தராசு
தொலி — தோல்
தொளி — சேறு
தொலை — தூரம்
தொளை — துவாரம்
தொல்லை — தொந்தரரை; பழமை
தொள்ளை — தொளை; மரக்கலம்
தோல் — சருமம்; யானை
தோள் — புயம்
தோலி — ஓர் மீன்
தோழி — பாங்கி
தோளி — அவுரி
நலி — வருந்துவாய்
குளிர்; — நெருக்கம்
நல்ல — நேர்த்தியான
நள்ள — சிநேகிக்க
நல்லார் — நல்லவர்; மாதர்
நள்ளார் — பகைவர்
நால் — நான்கு
நாள் — தினம்; புதுமை
நீலம் — இருள்; நீல நிறம்;
நீளம் — நெடுமை
பலம் — ஓர் எடை
பழம் — கனி
பலபலெனல் — விடியற்குறிப்பு
பளபளெனல் — நிறக்குறிப்பு
பலி — பூசை; தேவருணவு
பழி — குற்றம்
பளிதம் — கருப்பூரம்
பல்லி — இடையரூர்; கெவுளி
பள்ளி — ஒரு சாதி; கோயில்;
பள்ளு — ஒருவகை நூல்
பசலை — வேறுபட்ட நிறம்
பசளை — வயலைக் கொடி
பால் — பாலு
பாழ் — அழிவு
பாலம் — நெற்றி; பூமி; வாராவதி
பாளம் — வெடிப்பு; தகட்டு வடிவம்
பாலை — பிரிதல்; பாலைநிலம்;
பாளை — தென்னை; கமுகு
புலி — வேங்கைமரம்; புலி
புளி — புளிப்பு; புளியமரம்
புல் — புல்லு; சோர்
புள் — பறவை;வளையல்
புல்லி — புறவிதழ்; சேர்ந்து
புள்ளி — பொறி; மறு;மதிப்பு
புழுகு — புனுகு
புளுகு — பொய்
பூழை — துவாரம்;வாயில்
பூளை — இலவம் பஞ்சு
பொலி — தூற்றா நெல்
பொழி — சொரி
பொளி — சுத்தியால் அடி
பொலிதல் — சிறத்தல்; மிகுதல்
பொளிதல் — கல்கொத்துதல்
பொல்லாத — தீங்குள்ள
பொள்ளாத — தொளையிடாத
போலி — ஒன்றனைப்போல்வது
போளி — ஒருவகை அப்பம்
மலை — பருவதம்
மழை — மழை; மேகம்
மல்லம் — கதுப்பு; மற்போர்
மள்ளம் — வலி
மல்லர் — மற்போர்செய்வோர்
மள்ளர் — உழவர்; படைவீரர்
மாலிகை — மாலை; கழுத்தணி
மாளிகை — மேல்மாடி
மாலுதல் — மயங்குதல்
மாளுதல் — இறத்தல்
மாலை — அந்திப்பொழுது
மாழை — அழகு; மாமரம்
மால் — மயக்கம்; திருமால்
மாள் — அழி
முழை — துடுப்பு; குகை
முளை — முளை; ஆப்பு
மூழி — பெட்டி; மத்து
மூளி — காதறை;
மூலை — கோணம்
முழை — அகப்பை; துடுப்பு
மூளை — தலைமூளை; எலும்பு
மெல்ல — மிருதுவாய்;மென்றுதின்ன
மெள்ள — மெதுவாய்
வலம் — வலப்பக்கம்; வலிமை
வளம் — அழகு; செல்வம்
வலவன் — சமர்த்தன்; தேர்ப்பாகன்
வளவன் — சோழன்
வலி — நோவு; வலிமை
வழி — பாதை; பழமை
வளி — காற்று
வலை — மீன்வலை
வழை — சுரபுன்னை மரம்
வளை — சங்கு; வளையல்
வல் — சீக்கிரம்; சூதாடுங்கருவி
வல்லி — கொடி; பெண்
வள்ளி — ஆபரணம்; வள்ளிக்கொடி
வல்லுரம் — காடு;வயல்; பூங்கொத்து
வள்ளுரம் — தசை
வல்லை — விரைவு
வள்ளை — ஒரு கொடி
வாலம் — வால்
வாளம் — வளைவு; வாள்;ஒர் மருந்து
வாலி — இந்திரன் மகனான
வாழி — வாழ்வாயாக
வாளி — ஒருவகைக் காதணி
வாலை — இளம்பெண்
வாழை — வாழைமரம்
வாளை — ஒர் மீன்
வாழ் — வாழ்ந்திரு
வாள் — வாளாயுதம்; ஒளி
விலக்கு — தவிர்
விளக்கு — தீபம்; விளங்கச்செய்
விலா — பழு, விலாவெலும்பு
விழா — திருவிழா
விளா — விளமரம்
விளி — ஓசை; அழைப்பு
விலை — கிரயம்
விளை — உண்டுபண்ணு; கொல்லை
வில் — தனு;ஒளி
விள் — பேசு;திற
வெல்லம் — கரும்பின் கட்டி
வெள்ளம் — நீர்ப்பெருக்கு
வலை — கடல்; தொழில்
காலம்; — ஒரு பூடு
வேள் — முருகக்கடவுள்; மன்மதன்
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop