அத்தியாயம் 3 — ன – ந – ண வேறுபாடு | தமிழ்ச் சொல் விளக்கம்

ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 3 / 15

ன – ந – ண வேறுபாடு

தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்

மூன்று மெல்லின எழுத்துகளின் வேறுபாடு. மொழி முதல், மொழி இறுதி விதிகளோடு சேர்த்துப் படிக்க வேண்டியது.

135இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).

விதிகள்

மொழிக்கு முதலில் ந மட்டுமே வரும்

ந-கரம் சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும். ன-கரமும் ண-கரமும் தமிழ்ச் சொல்லுக்கு முதலில் வருவதில்லை.

நாடுநிலம்நெல்நீர்

ண் மெய்க்குப் பின் ட, ண வரிசை வரும்

ணகர மெய்க்குப் பின் ட வரிசையும் ண வரிசையும் வரும்.

கண்டான்மண்ணைபண்டம்எண்ணம்

ன் மெய்க்குப் பின் ற, ன வரிசை வரும்

னகர மெய்க்குப் பின் ற வரிசையும் ன வரிசையும் வரும்.

குன்றம்பொன்னைதின்றான்என்னை

ந் மெய்க்குப் பின் த வரிசை வரும்

நகர மெய்க்குப் பின் த வரிசை உயிர்மெய் வரும்.

வந்தான்சிந்தைஉந்துசந்தை

உச்சரிப்பு வேறுபாடு

ண-கரம் நாநுனி மேல்வாயை வளைந்து தொட்டு ஒலிக்கும் மூர்த்தனிய ஒலி. ன-கரம் நாநுனி பல்லடியைத் தொட்டு ஒலிக்கும் தந்திய ஒலி. ந-கரம் மூக்கொலி கலந்து ஒலிக்கும்.

அனை — அணைகனம் — கணம்ஆனி — ஆணி

சொற்கள் (135)

அரன் — சிவன்
அரண் — மதில்
அனு — கதுப்பு பின்
அணு — சிறுமை
அனை — ஒர்மீன்;ஒத்த
அன்னம் — சாதம்
அண்ணம் — மேல்வாப்
அன்னாள் — அவள் அ
ந்தாள் — அந்தநாள்
ஆனி — ஆனிமாதம்; இடையூறு
ஆணி — இருப்பாணி
ஆனை — யானை
ஆணை — சத்தியம்
ஆன் — பசு
ஆண் — ஆண்பாற்பொருள்
இனை — வருந்து
இணை — ஒப்ழ் சேர்
இதன் — இதனுடைய
உன்னி — நினைத்து
உண்ணி — நாயுண்ணி
உன் — நினை
உண் — சாப்பிடு
ஊன் — மாமிசம்
என் — என்னுடைய
எண் — எண்ணு
என்ன — என்றுசொல்ல
எண்ண — நினைக்க
என்னாள் — என் நாள்
எந்நாள் — எந்தநாள்
ஏனம் — பன்றி
ஏணம் — மான்
ஏனை — ஏனைய; மற்றைய
ஏணை — புடவைத்தொட்டில்
கனம் — பாரம்
கணம் — கூட்டம்
கனி — பழம்
கணி — வேங்கை மரம்
கனை — கனைப்பாய்
கன்னி — குமாரி
கண்ணி — தலையில்
கானம் — காடு
காணம் — பொன்
கான் — காடு
காண் — பார்
குனி — வளை; வில்
குணி — ஊமை, வில்
கோன் — அரசன்
கோண் — வளைவு
சனம் — ஜனம்
சணம் — க்ஷணம்
சானம் — பெருங்காயம்
சாணம் — சாணி
சுனை — நீர்ச்சுனை
சுணை — அபிமானம்;ரோஷம்
சுன்னம் — பூஜ்யம்
சுண்ணம் — சுண்ணாம்பு
சேனம் — பருந்து
சேணம் — கல்லணை;மெத்தை
சோனை — விடாமழை
சோணை — சோணாசலம்
தனி — தனிமையான
தணி — தணிவாய்; தணிப்பாய்
தன்னம் — அற்பம்
தண்ணம் — மழு
தன்னாள் — தனது நாள்
தந்நாள் — தமது நாள்
தன்மை — சுபாவம்
தண்மை — குளிர்ச்சி
தன் — தன்னுடைய
தண் — குளிர்ச்சி
தினை — ஒருவகைத்தானியம்
திணை — நிலம்;ஜாதி
தின் — சாப்பிடு
திண் — வல்லமை
தின்மை — தீமை
திண்மை — வலிமை
துனி — துன்பம்
துணி — வஸ்திரம்;வெட்டு
துனை — வேகம்
துணை — சகாயம்;உதவி
தூனம் — வருத்தம், அசைவு
தூணம் — தூண்
நன்னுதல் — நல்லநுதல்;
நண்ணுதல் — பொருந்துதல்
நானம் — வாசனை
நாணம் — வெட்கம்
நான் — யான்
நாண் — வெட்கம்
நுனி — முனை
நுணி — நுட்பம்
பனி — பனி; குளிர்ச்சி
பணி — வேலை; கட்டளை
பனை — பனைமரம்
பணை — பெருமை; பருமை
பன் — பேசு
பண் — இசைப்பாட்டு;செய்
பன்மை — பன்மைச்சொல்
பண்மை — தகுதி
பரன் — மேலானவன்
பரண் — மேல்தட்டு
பானம் — குடிக்கத்தக்க து
பாணம் — அம்பு
பானி — பருகுவோன்
பாணி — தாமதம்; அழகு; கை
பான் — பத்து(இருபானாள்)
பாண் — இசைப்பாட்டு
புனரி — புனலித்தண்டு
புணரி — அலை; கடல்
புனை — அலங்கரி
புணை — தெப்பம்
பூனை — பூனை
பூணை — முல்லை நிலம்
பேன் — சீலைப்பேன்
பேண் — காப்பாற்று
மனம் — மனசு
மணம் — வாசனை;கலியாணம்
மனை — வீடு
மணை — பலகை
மன் — அரசன்;பெருமை;
மண் — பூமி
மன்மகள் — அரசன் மகள்
மண்மகள் — பூமாதேவி
மன்னுதல் — நிலைபெறுதல்
மானம் — பெருமை;குற்றம்
மாணம் — மாட்சிமை
மான் — மான்
மாண் — மாட்சிமை
முனை — யுத்தம்;பகை
முணை — மிகுதி
முன்னாள் — முன் நாள்
முந்நாள் — மூன்று நாள்
வன்னம் — நிறம்
வன்மை — வலிமை
வானம் — மழை;ஆகாயம்
வாணம் — அம்பு;நெருப்பு
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop