அத்தியாயம் 4 — வல்லினம் மிகும் இடங்கள் | தமிழ்ச் சொல் விளக்கம்

ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 4 / 15

வல்லினம் மிகும் இடங்கள்

தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்

தொடர் சொற்களில் க், ச், த், ப் மிகும் இடங்கள். ஒவ்வொரு தேர்விலும் இடம்பெறும்.

100இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).

சொற்கள் (100)

அந்த + காளை = அந்தக்காளை
இந்த + பசு = இந்தப்பக
எந்த + தட்டு = எந்தத் தட்டு
அது தவிர + தேடினான் = அது தவிரத் தேடினான்
அதுபோல + கூறினான் = அதுபோலக் கூறினான்
பைய + சென்றான் = பையச் சென்றான்
மெல்ல + பேசினான் = மெல்லப் பேசினான்
மிக + சொன்னான் = மிகச் சொன்னான்
வருவதாக + கூறினான் = வருவதாகக் கூறினான்
போவதாக + சொன்னான் = போவதாகச் சொன்னான்
பாடென + கொடுத்தான் = பாடெனக் கொடுத்தான்
தேடென + சொன்னான் = தேடெனச் சொன்னான்
அவனைவிட + பெரியவன் = அவனைவிடப் பெரியவன்
காணா + காட்சி = காணாக் காட்சி
பொல்லா + காலம் = பொல்லாக் காலம்
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை
பறவா + கிளி = பறவாக் கிளி
தேடா + பொருள் = தேடாப் பொருள்
பொய்யா + கொடுக்கும் = பொய்யாக் கொடுக்கும்
கூவா + சேவல் = கூவாச்சேவல்
புறா + கூடு = புறாக்கூடு
சுறா + துண்டம் = சுறாத் துண்டம்
அப்படி + செய் = அப்படிச் செய்
இப்படி + கூறினான் = இப்படிக் கூறினான்
எப்படி + போனான் = எப்படிப் போனான்
உப்பின்றி + தின்றான் = உப்பின்றித் தின்றான்
தேடி + சென்றான் = தேடிச் சென்றான்
கூடி + பேசினான் = கூடிப் பேசினான்
பாதி + துணி = பாதித் துணி
நாழி + பழம் = நாழிப்பழம்
கூலி + தொழில் = கூலித் தொழில்
பழி + சொல் = பழிச்சொல்
மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்
பனி + காலம் = பனிக்காலம்
ஈ + கால் = ஈக்கால்
உ + பக்கம் = உப்பக்கம்
அங்கு + போ = அங்குப்போ
இங்கு + செல் = இங்குச்செல்
எங்கு + கண்டாய் = எங்குக் கண்டாய்
ஆங்கு + கேட்டான் = ஆங்குக் கேட்டான்
ஈங்கு + பார்த்தான் = ஈங்குப் பார்த்தான்
யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான்
ஆண்டு + சென்றான் = ஆண்டுச் சென்றான்
ஈண்டு + போந்தான் = ஈண்டுப் போந்தான்
யாண்டு + கூறினான் = யாண்டுக் கூறினான்
மற்று + சிறியன் = மற்றுச் சிறியன்
அதற்கு + கொடு = அதற்குக் கொடு
அவனுக்கு + சொல் = அவனுக்குச் சொல்
கொக்கு + கால் = கொக்குக் கால்
கற்று + கொடு = கற்றுக் கொடு
சற்று + பொறு = சற்றுப்பொறு
எட்டு + தலை = எட்டுத் தலை
பத்து + பனை = பத்துப்பனை
திரு + குளம் = திருக்குளம்
திரு + புகழ் = திருப்புகழ்
புது + கோட்டை = புதுக்கோட்டை
கன்று + குட்டி = கன்றுக்குட்டி
இரும்பு + பூண் = இரும்புப்பூண்
அம்பு + தலை = அம்புத்தலை
செம்பு + தண்ணீர் = செம்புத் தண்ணீர்
அரவு + தோல் = அரவுத் தோல்
இரவு + காலம் = இரவுக்காலம்
புறவு + தலை = புறவுத்தலை
பூ + பறி = பூப்பறி
பூ + பூத்தது = பூப்பூத்தது
ஏ + கடிது = ஏக்கடிது
இவ்வகை + கற்றான் = இவ்வகைக் கற்றான்
மற்றை + பொருள் = மற்றைப் பொருள்
என்னை + தேடினான் = என்னைத் தேடினான்
பொருளை + பெற்றான் = பொருளைப் பெற்றான்
மலையிடை + பிறவா = மலையிடைப் பிறவா
தலை + சுமை = தலைச் சுமை
கலை + கோயில் = கலைக்கோயில்
சிறை + கூடம் = சிறைக்கூடம்
பறவை + கூடு = பறவைக்கூடு
வாழை + பழம் = வாழைப்பழம்
பனை + கை = பனைக்கை
கோடை + காலம் = கோடைக்காலம்
எவ்விதம் + தீமை = எவ்விதத் தீமை
எல்லாம் + சொற்களும் = எல்லாச் சொற்களும்
எல்லாம் + படியாலும் = எல்லாப்படியாலும்
பணம் + பை = பணப்பை
கமலம் + கண் = கமலக்கண்
மரம் + கட்டில் = மரக்கட்டில்
நிலம் + பனை = நிலப்பனை
குளம் + கரை = குளக்கரை
படம் + காட்சி = படக்காட்சி
நாய் + தலை = நாய்த்தலை
வாய் + பேச்சு = வாய்ப்பேச்சு
போய் + சொல் = போய்ச்சொல்
தயிர் + குடம் = தயிர்க்குடம்
பயிர் + தொழில் = பயிர்த்தொழில்
மயிர் + கம்பளம் = மயிர்க்கம்பளம்
நார் + கட்டில் = நார்க்கட்டில்
நகர் + புறம் = நகர்ப்புறம்
மலர் + சோலை = மலர்ச்சோலை
நீர் + பாம்பு = நீர்ப்பாம்பு
ஊழ் + பயன் = ஊழ்ப்பயன்
கீழ் + குலம் = கீழ்க்குலம்
கீழ் + காற்று = கீழ்க்காற்று
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop