அத்தியாயம் 5 — வல்லினம் மிகா இடங்கள் | தமிழ்ச் சொல் விளக்கம்

ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 5 / 15

வல்லினம் மிகா இடங்கள்

தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்

வல்லினம் மிகாத தொடர்கள். மிகும் இடங்களோடு ஒப்பிட்டுப் படித்தால் குழப்பம் நீங்கும்.

60இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).

சொற்கள் (60)

வந்த + காலம் = வந்த காலம்
வருகிற + காலம் = வருகிற காலம்
அண்ணா + கொடு = அண்ணா கொடு
அவனா + செய்தான் = அவனா செய்தான்
வாழ்க + கொற்றா = வாழ்க கொற்றா
சென்ற + பூனை = சென்ற பூனை
கரிய + பூனை = கரிய பூனை
வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்
போகும்படி + சொன்னான் = போகும்படி சொன்னான்
புலி + பாய்ந்தது = புலி பாய்ந்தது
புலி + பிடித்தான் = புலி பிடித்தான்
புளி + தின்றான் = புளி தின்றான்
வழி + தேடினான் = வழி தேடினான்
பொன்னி + கணவன் = பொன்னி கணவன்
அது + பெரிது = அது பெரிது
இது + கொடிது = இதுகொடிது
எது + சிறிது = எது சிறிது
எது + பெரிது = எது பெரிது
அடு + களிறு = அடுகளிறு
சுடு + சோறு = சுடு சோறு
ஒடு + குதிரை = ஒடு குதிரை
காது + கேளாது = காது கேளாது
மாடு + சீறாது = மாடு சீறாது
உலகு + பெரிது = உலகு பெரிது
வரகு + சிறிது = வரகு சிறிது
செய்து + கொண்டான் = செய்து கொண்டான்
பெய்து + பார்த்தான் = பெய்து பார்த்தான்
வந்து + சொன்னான் = வந்து சொன்னான்
பங்கு + பிரித்தான் = பங்கு பிரித்தான்
பந்து + பெரிது = பந்து பெரிது
அம்பு + தொடு = அம்பு தொடு
இரவு + கழிந்தது = இரவு கழிந்தது
செலவு + செய்தான் = செலவு செய்தான்
வரவு + பார்த்தான் = வரவு பார்த்தான்
அறிவு + பெற்றான் = அறிவு பெற்றான்
நாட்டு + புகழ் = நாட்டு புகழ்
அன்று + சொன்னான் = அன்று சொன்னான்
இன்று + கண்டான் = இன்று கண்டான்
என்று + தந்தான் = என்று தந்தான்
நன்று + சொன்னாய் = நன்று சொன்னாய்
அவ்வளவு + காலம் = அவ்வளவு காலம்
இவ்வளவு + துணிவு = இவ்வளவு துணிவு
எவ்வளவு + பொறுப்பு = எவ்வளவு பொறுப்பு
அதிலிருந்து + பெற்றான் = அதிலிருந்து பெற்றான்
அவனோடு + சேர்ந்தான் = அவனோடு சேர்ந்தான்
நாடு + சென்றான் = நாடு சென்றான்
கிணறு + மூழ்கினான் = கிணறு மூழ்கினான்
யானை + பெரிது = யானை பெரிது
அத்தனை + செடி = அத்தனை செடி
பிள்ளை + தேடினது = பிள்ளை தேடினது
அவை + பெரியன = அவை பெரியன
பறவை + கொன்றான் = பறவை கொன்றான்
ஒளவை + கண் = ஒளவை கண்
அதுவோ + போனது = அதுவோ போனது
மண் + பெரிது = மண்பெரிது
எவர் + பெரியவர் = எவர் பெரியவர்
குளிர் + காலம் = குளிர் காலம்
பயிர் + செய்தான் = பயிர் செய்தான்
நீர் + பாய்ச்சினான் = நீர் பாய்ச்சினான்
நீர் + குடித்தான் = நீர் குடித்தான்
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop