TNUSRB 2019 Admit Card

TN SI 2019 Exam Hall Ticket Released

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுவில் இருந்து நடத்தப்படும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வருகின்ற ஜனவரி 11,12 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இதற்கான நுழைவுச் சீட்டு தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் எஸ்.ஐ பணிக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் காவலர், எஸ்.ஐ போன்ற நேரடி பணி நியமனங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், காவல் துறையில் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்காக அறிவிப்பை சீருடைப் பணியார் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. ஆன்லைன் மூலம் இதற்காக பல பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 12-ம் தேதி நடக்க இருக்கிறது. மேலும், காவலர்களாக இருந்து இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 11-ம் தேதி நடக்க இருக்கிறது.

எழுத்துத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் இந்த இணையதளத்தில் சென்று யூசர் ஐடி எண் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு ஜனவரி இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாகதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகியவற்றில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேர்வு வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு 11 ஆம் தேதியும், பொது விண்ணப்பதாரர்களுக்கு 12 ஆம் தேதியும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெற உள்ளன.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள், தங்களுடைய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை www.tnusrbonline.org என்ற இணையளத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.

RECRUITMENT FOR THE POST OF

SUB-INSPECTOR OF POLICE(TK, AR, TSP) – 2019

LOGIN FOR WRITTEN EXAM HALL TICKET 

TNUSRB Taluk SI test Batch 

TALUK SI Video Course 

Current Affairs

Free Online Test 

Athiyaman Team Best Online Coaching Center in Tamilnadu for all competitive exams. Join Video Course &Test Batch for TNPSC, TNUSRB, RRB & Forest Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: