TNPSC CURRENT AFFAIRS PDF – 4th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 4 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Chief Minister M.K. Stalin will on August 5, 2021 launch ‘Makkalai thedi maruthuvam’, an initiative to take healthcare services to the doorstep of the people, in Samanapalli, Krishnagiri district, said Health Minister Ma. Subramanian.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

2.Tamil Nadu Chief Minister paid floral tributes to the portrait of freedom fighter Thiru Dheeran Chinnamalai on his 216th death anniversary on August 3, 2021.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216-வது நினைவு நாள் ஆகஸ்டு 3, 2021 அன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

3.The Madras High Court on August 3, 2021 struck down part II of the Tamil Nadu Gaming and Police Laws (Amendment) Act of 2021, through which the legislature had imposed a blanket ban on rummy, poker and all other games played online for a wager, bet, money or other stake irrespective of it being a game of skill or a game of chance.

ஆன்லைன் ரம்மி, புரோக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து, 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இச்சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

4.The Union Home Ministry on August 3, 2021 informed the Lok Sabha that no proposal for the bifurcation of any state, including Tamil Nadu, is currently under consideration.

தமிழ்நாடு உட்பட எந்த மாநிலத்தையும் இரண்டாக பிரிக்கக் கூடிய திட்டம் ஏதும் இல்லை என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India

5.Union Minister for Youth Affairs and Sports Anurag Thakur launched the theme song “Kar De Kamaal Tu” for the Indian Paralympic contingent on August 3, 2021 in New Delhi. The song “Kar De Kamaal Tu” is composed and sung by a Divyang cricket player Sanjeev Singh who is a resident of Lucknow.

‘கர் தே கமால் து’ எனும் இந்திய பாராலிம்பிக் (மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்) அணிக்கான தீம் பாடலை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் அவர்கள் புதுதில்லியில் ஆகஸ்டு 3, 2021 அன்று வெளியிட்டார். லக்னோவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரான சஞ்சீவ் சிங்கால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட இப்பாடல், விளையாட்டு வீரர்கள் மட்டுமில்லாது, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

6.Freight services between India and Bangladesh via the Haldibari–Chilahati rail route were restored on August 1, 2021 after 56 years. The Haldibari-Chilahati rail link between India and Bangladesh was operational till 1965.

இந்தியா – வங்கதேசம் இடையிலான ஹல்திபாரி-சிலாஹாட்டி சரக்கு ரயில் சேவை 56 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 1, 2021 அன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை கடந்த 1965-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.

7.Researchers from University of Delhi have named a newly-discovered frog species after former vice chancellor and renowned plant geneticist Prof. Deepak Pental. The new species, Minervarya Pentali (Pental’s Minervaryan frog), was discovered from the globally recognised Western Ghats biodiversity hotspot.

டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்திற்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் புகழ்பெற்ற தாவர மரபியலாளருமான பேராசிரியர் தீபக் பென்டல் அவர்களின்  பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, மினெர்வார்யா பென்டலி என்று பெயரிடப்பட்டுள்ளது.

International 

8.The Eighth Meeting of Ministers of Justice of the Shanghai Cooperation Organization (SCO) Member States will be attended by the Union Minister of Law & Justice Kiren Rijiju on 6th August, 2021.

ஆகஸ்ட் 6, 2021 அன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 8 வது நீதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்கள் கலந்து கொள்கிறார்.

9.The All India Institute of Ayurveda (AIIA), an autonomous body under the Ministry of Ayush, and the U.K.’s London School of Hygiene and Tropical Medicine (LSHTM) have signed a Memorandum of Understanding to conduct a study on ‘Ashwagandha’ for promoting recovery from COVID-19. ‘Ashwagandha’ (Withania somnifera), commonly known as ‘Indian winter cherry’, is a traditional Indian herb that boosts energy, reduces stress and makes the immune system stronger.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், இங்கிலாந்தின் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளியுடன் இணைந்து கொரோனா சிகிச்சையில் அஸ்வகந்தா எந்தளவு பயன் தருகிறது என்பது குறித்து சோதனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அஸ்வகந்தா (விதானியா சோம்னிஃபெரா) என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமான மூலிகையாகும். இது 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தா வேர் பொதுவாக இந்திய ஜின்ஸெங், குளிர்கால செர்ரி என்றும் அழைக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Where is the ‘Makkalai thedi maruthuvam’ scheme launched by the Chief Minister?

A.Dharmapuri

B.Krishnagiri

C.Thiruvallur

D.Thiruvarur

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் முதலமைச்சர் அவர்களால் எங்கே தொடங்கப்படுகிறது?

A.தருமபுரி

B.கிருஷ்ணகிரி

C.திருவள்ளூர்

D.திருவாரூர்

2.The 216th death anniversary of Dheeran Chinnamalai was observed on

A.August 1, 2021

B.August 2, 2021

C.August 3, 2021

D.August 4, 2021

தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்பட்டது?

A.ஆகஸ்ட் 1, 2021

B.ஆகஸ்ட் 2, 2021

C.ஆகஸ்ட் 3, 2021

D.ஆகஸ்ட் 4, 2021

3.What is Minervarya Pentali?

A.Crocodile

B.Snake

C.Bird

D.Frog

மினெர்வார்யா பெண்டலி என்பது என்ன?

A.முதலை

B.பாம்பு

C.பறவை

D.தவளை

4.Who launched the theme song “Kar De Kamaal Tu” for the Indian Paralympic contingent?

A.Arjun Munda

B.Anurag Thakur

C.Kiren Rijiju

D.Deepak Mishra

இந்திய பாராலிம்பிக் குழுவினருக்காக “கர் தே கமல் து” என்ற தீம் பாடலை அறிமுகப்படுத்தியவர் யார்?

A.அர்ஜுன் முண்டா

B.அனுராக் தாக்கூர்

C.கிரண் ரிஜிஜு

D.தீபக் மிஸ்ரா

5.Which is also called as Indian winter cherry?

A.Shatavari

B.Punarnava

C.Musli

D.Ashwagandha

இந்திய குளிர்கால செர்ரி என்று அழைக்கப்படுவது எது?

A.சதவாரி

B.புனர்நவா

C.முஸ்லி

D.அஸ்வகந்தா

6.Who is participating in the Eighth Meeting of Ministers of Justice of the Shanghai Cooperation Organization representing India?

A.Arjun Munda

B.Anurag Thakur

C.Kiren Rijiju

D.Deepak Mishra

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எட்டாவது நீதி அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா சார்பில் யார் பங்கேற்கிறார்?

A.அர்ஜுன் முண்டா

B.அனுராக் தாக்கூர்

C.கிரண் ரிஜிஜு

D.தீபக் மிஸ்ரா

7.Haldibari–Chilahati rail route is between India and

A.UK

B.Nepal

C.Bangladesh

D.Myanmar

ஹால்திபாரி – சிலாஹாட்டி ரயில் பாதை இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயானது?

A.இங்கிலாந்து

B.நேபாளம்

C.வங்கதேசம்

D.மியான்மர்

8.With which country, India has signed an MoU to conduct a study on Ashwagandha?

A.UK

B.Nepal

C.Bangladesh

D.Myanmar

அஸ்வகந்தா குறித்து ஆய்வு செய்ய இந்தியா எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?

A.இங்கிலாந்து

B.நேபாளம்

C.வங்கதேசம்

D.மியான்மர்

DOWNLOAD  Current affairs -4 August- 2021 PDF

 

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: