TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 3 August 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC August Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.The President of India Ram Nath Kovind participated and addressed in the centenary celebrations of Tamil Nadu Legislature as the Chief Guest. It was presided over by the Governor of Tamil Nadu Banwarilal Purohit.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். இவ்விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்கள் தலைமை தாங்கினார்.
2.President Ram Nath Kovind unveiled the portrait of five-time Tamil Nadu Chief Minister Kalaignar M Karunanidhi at St Fort George in Chennai. The portrait is accompanied by a wooden board with the slogan: Kaalam Pon Pondrathu! Kadamai Kann Pondrathu! (Time is Golden! Duty is like Eyes!).
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார். உருவப்படத்துக்கு கீழே, “காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது” என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. இது கலைஞர் அவர்களால் அவ்வப்போது கூறப்படும் வாசகம் ஆகும்.
3.Chief Minister MK Stalin will chair the State Cabinet meeting on August 4, 2021.
தமிழ்நாடு மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆகஸ்டு 4, 2021 அன்று நடைபெற உள்ளது.
4.Renowned classical musician and playback singer Kalyani Menon passed away in Chennai on August 2, 2021.
பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
5.Wild elephant Rivaldo, who was in captivity for around three months in the buffer zone of the Mudumalai Tiger Reserve (MTR), was freed from captivity on August 2, 2021.
நீலகிரியில் மரக்கூண்டில் கடந்த 88 நாட்களாக அடைத்து சுவாச பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த ரிவால்டோ யானை, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சென்று விடப்பட்டது. அதனை ரேடியோ காலர் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
India
6.Prime Minister Narendra Modi launched digital payment solution e-RUPI, a person and purpose specific digital payment solution, today via video conference. e-RUPI is a cashless and contactless instrument for digital payment.
இ-ருபி எனும் நபர் மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டண தீர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இ-ருபி என்பது டிஜிட்டல் கட்டணத்திற்கான பணமில்லா மற்றும் தொடர்பில்லா கருவியாகும்.
7.Azadi ka Amrit Mahotsav is being celebrated across the nation to commemorate India’s 75 years of Independence. As a part of Azadi ka Amrit Mahotsav, the Ministry of Culture has launched a unique programme in which the people have been invited to sing the National anthem and upload the video on website www.RASHTRAGAAN.IN. The compilation of the National Anthem will be shown live on 15th August, 2021. The initiative was announced by the Prime Minister Narendra Modi in Mann Ki Baat dated 25th July.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் ‘ஆசாதி கா அமிரித் மஹோத்ஸவ்’ என்ற விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, கலாச்சார அமைச்சகம் www.RASHTRAGAAN.IN என்கிற இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அந்த இணையதளத்தில் மக்கள் தேசிய கீதம் பாடும் வீடியோவை பதிவேற்றினால். அதன் தொகுப்பு ஆகஸ்ட் 15, 2021 அன்று நேரலையில் ஒளிபரப்பப்படும். இதை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜூலை 25 தேதி நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
8.University Grants Commission organised a National Webinar on Multidisciplinary and Holistic Education on August 2, 2021.
பல்கலைக்கழக நல்கை ஆணையம் ஆகஸ்ட் 2, 2021 அன்று பல்வகை மற்றும் முழுமையான கல்வி குறித்த தேசிய இணைய கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியது.
9.Minister of Tribal Affairs Arjun Munda inaugurated a ‘Three day National level Virtual Training of Trainers Programme on Forest Rights Act, 2006,’ as part of Azadi ka Amrit Mahotsav/Parv in New Delhi on 2nd August, 2021.
‘ஆசாதி கா அமிரித் மஹோத்ஸவ்’ விழாவின் ஒரு பகுதியாக, வன உரிமைகள் சட்டம், 2006 குறித்த மூன்று நாள் தேசிய அளவிலான பயிற்சியாளர்களின் மெய்நிகர் பயிற்சித் திட்டத்தை பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அவர்கள் ஆகஸ்ட் 2, 2021 அன்று புதுடில்லியில் தொடங்கி வைத்தார்.
International
10.Myanmar’s military ruler Min Aung Hlaing has taken on the role of Prime Minister in a newly formed caretaker government.
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய 6 மாதங்களுக்கு பிறகு தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. தேசிய நிர்வாக கவுன்சிலின் தலைவரும் ஆயுதப் படைகளின் தளபதியுமான மின் ஆங் ஹலைங் இடைக்கால அரசின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who presided over the centenary celebrations of Tamil Nadu Legislature?
A.Arjun Munda
B.Narendra Modi
C.Banwarilal Purohit
D.Ramnath Kovind
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவிற்கு யார் தலைமை தாங்கியது?
A.அர்ஜுன் முண்டா
B.நரேந்திர மோடி
C.பன்வாரிலால் புரோகித்
D.ராம்நாத் கோவிந்த்
2.How many times has Kalaignar M Karunanidhi been elected as the Chief Minister of Tamil Nadu?
A.3
B.4
C.5
D.6
கலைஞர் மு கருணாநிதி அவர்கள் எத்தனை முறை தமிழ்நாடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
A.3
B.4
C.5
D.6
3.Who unveiled the portrait of Kalaignar M Karunanidhi in Tamil Nadu Legislative Assembly?
A.Arjun Munda
B.Narendra Modi
C.Banwarilal Purohit
D.Ramnath Kovind
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்துவைத்தவர் யார்?
A.அர்ஜுன் முண்டா
B.நரேந்திர மோடி
C.பன்வாரிலால் புரோகித்
D.ராம்நாத் கோவிந்த்
4.Which ministry launched the website www.RASHTRAGAAN.IN?
A.Ministry of Education
B.Ministry of Health
C.Ministry of Defence
D.Ministry of Culture
எந்த அமைச்சகம் www.RASHTRAGAAN.IN என்கிற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது?
A.கல்வி அமைச்சகம்
B.சுகாதார அமைச்சகம்
C.பாதுகாப்பு அமைச்சகம்
D.கலாச்சார அமைச்சகம்
5.Who launched the digital payment solution e-RUPI?
A.Arjun Munda
B.Narendra Modi
C.Banwarilal Purohit
D.Ramnath Kovind
இ-ருபி எனும் டிஜிட்டல் கட்டண தீர்வை யார் அறிமுகப்படுத்தியது?
A.அர்ஜுன் முண்டா
B.நரேந்திர மோடி
C.பன்வாரிலால் புரோகித்
D.ராம்நாத் கோவிந்த்
6.Which organisation organised a National Webinar on Multidisciplinary and Holistic Education?
A.MCI
B.BCI
C.ICA
D.UGC
பல்வகை மற்றும் முழுமையான கல்வி குறித்த தேசிய இணைய கருத்தரங்கத்தை எந்த அமைப்பு ஏற்பாடு செய்தது?
A.MCI
B.BCI
C.ICA
D.UGC
7.Who inaugurated a ‘Three day National level Virtual Training of Trainers Programme on Forest Rights Act, 2006’?
A.Arjun Munda
B.Narendra Modi
C.Banwarilal Purohit
D.Ramnath Kovind
வன உரிமைகள் சட்டம், 2006 குறித்த மூன்று நாள் தேசிய அளவிலான பயிற்சியாளர்களின் மெய்நிகர் பயிற்சி திட்டத்தை யார் தொடங்கி வைத்தார்?
A.அர்ஜுன் முண்டா
B.நரேந்திர மோடி
C.பன்வாரிலால் புரோகித்
D.ராம்நாத் கோவிந்த்
8.Who is the new Prime Minister of Myanmar?
A.Lotay Tshering
B.Aung san suu kyi
C.Ibrahim Mohammed
D.Min Aung Hlaing
மியான்மரின் புதிய பிரதமர் யார்?
A.லோட்டே ஷெரிங்
B.ஆங் சான் சூகி
C.இப்ராகிம் முகமது
D.மின் ஆங் ஹலைங்
DOWNLOAD Current affairs -3 August- 2021 PDF
JULY MONTH FULL CURRENT AFFAIR PDF