TNPSC CURRENT AFFAIRS PDF – 5th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 5 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The President of India Ram Nath Kovind addressed the Student Officers of the 77th Staff Course of the Defence Services Staff College, Wellington in Tamil Nadu on August 4, 2021.

தமிழ்நாட்டில் உள்ள  வெல்லிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த பயிற்சி அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் அவர்கள் ஆகஸ்ட் 4, 2021 உரையாற்றினார்.

2.Governor Banwarilal Purohit has summoned the Tamil Nadu Legislative Assembly under Article 174 on August 13 in Kalaivanar Arangam, assembly secretary K Srinivasan said in an official release issued on August 4, 2021.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள், இந்திய அரசமைப்பு பிரிவு 174-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, ஆகஸ்ட் 13 அன்று கலைவாணர் அரங்கத்தில் கூட்டியுள்ளார், என்று பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் அவர்கள் ஆகஸ்ட் 4, 2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.The Tamil Nadu government has announced to present its revised budget for 2021-22 on August 13th 2021. The decision was taken in the meeting of the Council of Ministers on August 4, 2021. Finance and Human Resources Minister PTR Palanivel Thiaga Rajan will present a revised Budget. This is the first budget of the newly elected government headed by MK Stalin.

ஆகஸ்டு 4, 2021 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2021-2022-ம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பொது நிதிநிலை அறிக்கை 13-8-2021 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான முதல் நிதி நிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

4.Finance and Human Resources Minister PTR Palanivel Thiaga Rajan will release a 120-page white paper on the assets and liabilities of the State on August 9.

ஆகஸ்டு 9-ம் தேதி, 120 பக்கங்கள் கொண்ட நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார்.

India

5.To boost agricultural and processed food products exports especially from Karnataka, the Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) signed a Memorandum of Understanding (MoU) with University of Agricultural Science (UAS) Bangalore.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதிகளை, குறிப்பாக கர்நாடகாவில், ஊக்குவிப்பதற்காக பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (அபேடா) கையெழுத்திட்டது.

6.The Cabinet Committee on Economic Affairs, chaired by Prime Minister Narendra Modi, has given its approval for continuation of the revised Samagra Shiksha Scheme for a period of five years i.e., from 2021-22 to 2025-26.

பள்ளி கல்விக்கான முழுமையான கல்வி (சமக்ரா சிக்‌ஷா ) திட்டத்தை 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது.

International 

7.The Government of India on August 4, 2021 signed a $250 million loan agreement with the World Bank for the Second Phase of Dam Rehabilitation and Improvement Project (DRIP Phase II) to make existing dams and communities safe and resilient across India.

இந்தியாவில் உள்ள அணைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (DRIP கட்டம் II) இரண்டாம் கட்டத்திற்காக ஆகஸ்ட் 4, 2021 அன்று இந்திய அரசு உலக வங்கியுடன் 250 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

8.The Union Cabinet chaired by the Prime Minister Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) between Indian Institute of Space science and Technology (IIST) and The Delft University of Technology (TU Delft), Netherland for carrying out the Academic programmes and Research activities.

கூட்டு ஆராய்ச்சி தொடர்பாக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (IIST) மற்றும் நெதர்லாந்தின் டெல்ப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்  ஆகியவை செய்து கொண்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு  ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Sports

9.Boxer Lovlina Borgohain has bagged a Bronze Medal in women’s boxing 69-kilogram category in Tokyo Olympics after she lost to World Champion Busenaz Surmeneli of Turkey in the semi-finals. This is the third medal for the country.

மல்யுத்த வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், 69 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற துருக்கி வீராங்கனை பஸ்செனாஸ் சுர்மெனேலியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இது நாட்டின் மூன்றாவது பதக்கமாகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

DOWNLOAD  Current affairs – 5 August- 2021 PDF

1.Where is the Defence Services Staff College located in Tamil Nadu?

A.Chennai

B.Kanyakumari

C.Coimbatore

D.Nilgiris

தமிழ்நாட்டில் இராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி எங்கே உள்ளது?

A.சென்னை

B.கன்னியாகுமரி

C.கோயம்புத்தூர்

D.நீலகிரி

2.Which article of the Indian Constitution gives power to summon the legislative assembly?

A.159

B.160

C.174

D.180

இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு சட்டமன்ற பேரவையை கூட்டும் அதிகாரத்தை அளிக்கிறது?

A.159

B.160

C.174

D.180

3.Samagra Shiksha Scheme has been extended up to

A.2024-25

B.2025-26

C.2026-27

D.2027-28

சமக்ரா சிக்‌ஷா திட்டம் எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

A.2024-25

B.2025-26

C.2026-27

D.2027-28

4.Who has power to summon the state legislative assembly?

A.Governor

B.Speaker

C.Chief Minister

D.Leader of the House

மாநில சட்டமன்ற பேரவையை கூட்டும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

A.ஆளுநர்

B.சபாநாயகர்

C.முதலமைச்சர்

D.அவை முன்னவர்

5.With which institution, University of Agricultural Science (UAS) Bangalore has signed an MoU to boost exports?

A.IFGTB

B.CLRI

C.APEDA

D.IIST

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் (UAS) எந்த நிறுவனத்துடன் ஏற்றுமதியை அதிகரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?

A.IFGTB

B.CLRI

C.APEDA

D.IIST

6.Who chairs the Cabinet Committee on Economic Affairs?

A.President

B.Prime Minister

C.Home Minister

D.Finance Minister

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் தலைவர் யார்?

A.குடியரசுத் தலைவர்

B.பிரதமர்

C.உள்துறை அமைச்சர்

D.நிதி அமைச்சர்

7.Who won the Bronze Medal in the women’s boxing 69-kilogram category in the Tokyo Olympics?

A.Mirabai Chanu

B.Lovlina Borgohain

C.P V Sindhu

D.Mary Kom

டோக்கியோ ஒலிம்பிக்கில் 69 கிலோ பெண்கள் பிரிவு குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றவர் யார்?

A.மீராபாய் சானு

B.லவ்லினா போர்கோஹெய்ன்

C.பிவி சிந்து

D.மேரி கோம்

8.With which institution, Delft University of Technology (TU Delft) has signed an MoU to conduct joint research activities?

A.IFGTB

B.CLRI

C.APEDA

D.IIST

டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளை நடத்துவதற்கு எந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?

A.IFGTB

B.CLRI

C.APEDA

D.IIST

DOWNLOAD  Current affairs -5 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: