Athiyaman Academy
நல்ல தமிழ் எழுதுவோம்
போட்டித் தேர்வுகளுக்கான இலக்கணக் கையேடு
TNPSCTETTNUSRBTRB
அத்தியாயம் 9அரைப்புள்ளி & நிறுத்தற் குறியீடுகள்
தேர்வில் 2 வினாக்கள். எளிய பகுதி, முழு மதிப்பெண் பெறக்கூடியது — ஆனால் பல மாணவர்கள் கவனிக்காமல் விடுகிறார்கள்.
9.1 அரைப்புள்ளி ( ; ) — அமையும் இடம்
முதன்மை விதி: ஒரே எழுவாய்க்கு பல பயனிலைகள் வரும்போது, அவற்றை இணைக்க அரைப்புள்ளி பயன்படும்.
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சர் ஆனார்; அணைகள் பல கட்டினார்; தொழிற்சாலைகள் பல திறந்தார்; இலவசக் கல்வி வழங்கினார்.
இங்கே எழுவாய் ஒன்றே — காமராஜர். பயனிலைகள் நான்கு. எனவே அரைப்புள்ளி.
இரண்டாம் விதி: தனித்தனியே முழுமையான இரு தொடர்கள் கருத்தால் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால், முற்றுப்புள்ளிக்குப் பதிலாக அரைப்புள்ளி.
மனித வாழ்க்கை, ஓர் ஆறு; குளம் அன்று.
9.2 நிறுத்தற் குறியீடுகள் — முழுப் பட்டியல்
| குறி | பெயர் | பயன் |
|---|---|---|
| . | முற்றுப்புள்ளி | தொடர் முடிவு |
| , | காற்புள்ளி | ஒரே வகைச் சொற்களைப் பிரிக்க |
| ; | அரைப்புள்ளி | ஒரு எழுவாய் + பல பயனிலை |
| : | முக்காற்புள்ளி | விளக்கம்/பட்டியல் தொடங்க |
| ? | வினாக்குறி | வினாத் தொடர் |
| ! | வியப்புக்குறி | வியப்பு, உணர்ச்சி |
| “ ” | மேற்கோள் குறி | பிறர் கூற்று, நூற்பெயர் |
| – | இணைப்புக்கோடு | சொற்களை இணைக்க |
| ( ) | அடைப்புக் குறி | கூடுதல் விளக்கம் |
| … | வில்லைக் குறி | விடுபட்ட பகுதி |
9.3 ஒவ்வொரு குறியீடும் — எடுத்துக்காட்டுடன்
| குறி | பெயர் | எடுத்துக்காட்டு |
|---|---|---|
| . | முற்றுப்புள்ளி | கண்ணன் பள்ளிக்குச் சென்றான. |
| , | காற்புள்ளி | மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள். |
| ; | அரைப்புள்ளி | அவன் படித்தான; வென்றான; பெருமை பெற்றான். |
| : | முக்காற்புள்ளி | முக்கனிகள் மூன்று: மா, பலா, வாழை. |
| ? | வினாக்குறி | நீ எங்கே சென்றாய? |
| ! | வியப்புக்குறி | என்ன அழகு! |
| “ ” | மேற்கோள் குறி | வள்ளுவர் “அகர முதல” என்றார். |
| – | இணைப்புக்கோடு | தமிழ்–ஆங்கில அகராதி |
| ( ) | அடைப்புக் குறி | திருவள்ளுவர் (திருக்குறள் ஆசிரியர்) |
| … | வில்லைக் குறி | அவன் சொன்னான… ஆனால் முடிக்கவில்லை. |
பயிற்சி — அத்தியாயம் 9
- அரைப்புள்ளி அமையும் முதன்மை இடம்?
(அ) பல எழுவாய், ஒரு பயனிலை (ஆ) ஒரு எழுவாய், பல பயனிலை (இ) வினாத் தொடர் (ஈ) பிறர் கூற்று - மனித வாழ்க்கை, ஓர் ஆறு; குளம் அன்று. — இங்கு அரைப்புள்ளியின் பயன்?
(அ) வினா (ஆ) வியப்பு (இ) நெருங்கிய தொடர்புள்ள இரு தொடர்களை இணைத்தல் (ஈ) பட்டியல் - : — இதன் பெயர்?
(அ) அரைப்புள்ளி (ஆ) காற்புள்ளி (இ) முக்காற்புள்ளி (ஈ) முற்றுப்புள்ளி - பிறர் கூற்றைக் குறிக்கும் குறி?
(அ) அடைப்புக் குறி (ஆ) மேற்கோள் குறி (இ) இணைப்புக்கோடு (ஈ) வில்லைக் குறி - , — பயன்?
(அ) தொடர் முடிவு (ஆ) ஒரே வகைச் சொற்களைப் பிரித்தல் (இ) வியப்பு (ஈ) விளக்கம்
▸ விடைகள்
- ஆ
- இ
- இ
- ஆ
- ஆ
