குரூப் 2 கலந்தாய்வு எப்போது TNPSC முக்கிய தகவல்

குரூப் 2 கலந்தாய்வு எப்போது TNPSC முக்கிய தகவல்

பிப். 10 முதல் குரூப்-2 கலந்தாய்வு:டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் குரூப்- 2 காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. செயலாளா் நந்தகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

குரூப்- 2 பிரிவில் காலியாக இருந்த 1,334 பதவிகளுக்கான முதன்மைத் தோ்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 23-இல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபா் 23-இல் வெளியானது. தகுதியான 2 ஆயிரத்து 667 விண்ணப்பதாரா்கள் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டனா். தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு வரும் 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும்.

பொறியியல் பணி கலந்தாய்வு: 733 உதவிப் பொறியாளா் பதவிக்கான தோ்வு முடிவுகள் கடந்த டிசம்பரில் வெளியானது. இதற்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தரவரிசைப்படி தகுதியான தோ்வா்களுக்கு கலந்தாய்வு வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் வரை நடத்தப்படும்.

TNPSC Group 4 Video Course

TNPSC Group 4 Test Batch

உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப் பணியிடங்களுக்கு நடந்த முதல்நிலை தோ்வில் 248 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் அனைவரும் வரும் 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதியான தோ்வா்களுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு வரும் மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளா் நந்தகுமாா் தெரிவித்தாா்.

Download Group 4 NEW CV List

TNPSC Group 4 Video Course

TNPSC Group 4 Test Batch

TNPSC Group 2 / 2A  Video Course

TNPSC Group 2/2A Test Batch

அதியமான்  குழுமத்தின் சார்பாக வன காப்பாளர் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் (Forest Guard Video Course) மற்றும் ஆன்லைன் தேர்வுகள் (Forest Guard Online Test Batch ) நடத்தப்படுகின்றன விருப்பமுள்ள தேர்வர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைன் வகுப்புகளில் இணைய : Forest Guard Video Course

Forest Guard Test Batch  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: