TNPSC குரூப் 4 அறிவிக்கை 2026 வெளியீடு — 6,574 காலிப்பணியிடங்கள், தேர்வு 10.01.2027

TNPSC Group 4 notification 2026 out with 6,574 vacancies, last date 05.11.2026 and written examination on 10.01.2027 - Athiyaman Academy

TNPSC குரூப் 4 (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV) 2026 அறிவிக்கை 06.10.2026 அன்று வெளியாகிவிட்டது. அறிவிக்கை எண் 11/2026, விளம்பர எண் 747. மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.11.2026; எழுத்துத் தேர்வு 10.01.2027 அன்று நடைபெறும்.

6,574காலிப்பணியிடங்கள்
05.11.2026விண்ணப்பிக்க கடைசி நாள்
10.01.2027எழுத்துத் தேர்வு
—தேர்வுக்கு மீதமுள்ள நாட்கள்
⚠️ தேர்வு நாள் மாறியுள்ளது — கவனியுங்கள். TNPSC ஆண்டுத் திட்ட அட்டவணையில் (Annual Planner) குரூப் 4 எழுத்துத் தேர்வு டிசம்பர் 20, 2026 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இறுதி அறிவிக்கையின்படி தேர்வு ஜனவரி 10, 2027 அன்று நடைபெறும். அதாவது தயாரிப்புக்கு கூடுதலாக மூன்று வாரங்கள் கிடைத்துள்ளன. உங்கள் படிப்புத் திட்டத்தை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.

முக்கியத் தேதிகள் — TNPSC Group 4 2026

அறிவிக்கை எண் 11 / 2026 (விளம்பர எண் 747)
தேர்வின் பெயர் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி IV பணிகள்)
அறிவிக்கை நாள் 06.10.2026
விண்ணப்பம் தொடங்கும் நாள் 06.10.2026
விண்ணப்பிக்க கடைசி நாள் 05.11.2026 — இரவு 11.59
விண்ணப்பத் திருத்தச் சாளரம் 09.11.2026 (12.01 மு.ப) முதல் 11.11.2026 (11.59 பி.ப) வரை
எழுத்துத் தேர்வு 10.01.2027 — காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை
விண்ணப்பிக்கும் இணையதளம் http://www.tnpscexams.in
மொத்தக் காலிப்பணியிடங்கள் 6,574 (46 வகைப் பதவிகள்)

எத்தனை பணியிடங்கள் — எதிர்பார்ப்பும் உண்மையும்

அறிவிக்கைக்கு முன் 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இறுதி அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 6,574. எதிர்பார்ப்பை எட்டவில்லை என்றாலும், இது சமீபத்திய குரூப் 4 சுழற்சிகளைவிட அதிகமான எண்ணிக்கை.

இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்:

  • அறிவிக்கையில் உள்ள காலிப்பணியிட எண்ணிக்கை தோராயமானது — கலந்தாய்வு தொடங்கும் முன் மாற்றியமைக்கப்படலாம் என TNPSC-யே குறிப்பிட்டுள்ளது.
  • பதவி வாரியான முழுப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது; துறை / அலகு வாரியான பகிர்மானம் மட்டும் பின்னர் அறிவிக்கப்படும்.

பதவி வாரியான முழு காலிப்பணியிடப் பட்டியல் (46 பதவிகள்)

அறிவிக்கையின் பிரிவு 3-ல் உள்ள முழு அட்டவணை. மொத்தம் 6,574 பணியிடங்கள், 46 வகைப் பதவிகள், 20-க்கும் மேற்பட்ட துறைகள் மற்றும் கழகங்களில்.

ஒரே பதவி 2,610 இடங்கள். இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு அல்லாத) — பதவிக் குறியீடு 2600 — ஒன்றிலேயே 2,610 இடங்கள் உள்ளன. அதாவது மொத்த அறிவிப்பில் கிட்டத்தட்ட 40%. அடுத்தபடியாக தட்டச்சர் (2200) 856, இளநிலை உதவியாளர் – கணக்கு (3848) 422, தட்டச்சர் (4200) 377.

பதவி வகை வாரியான தொகுப்பு

பதவி வகை இடங்கள் பங்கு
இளநிலை உதவியாளர் (அனைத்து வகையும்)
Junior Assistant — all variants
3,743 56.9%
தட்டச்சர்
Typist
1,572 23.9%
சுருக்கெழுத்து தட்டச்சர் / தனிப்பட்ட எழுத்தர்
Steno Typist / Personal Clerk
464 7.1%
கிராம நிர்வாக அலுவலர் (VAO)
Village Administrative Officer
291 4.4%
தாசில்தார் பிரிவு — வரி / பில் / வருவாய் உதவியாளர்
Tax, Bill and Revenue Assistant
300 4.6%
இளநிலை நிர்வாக உதவியாளர்
Junior Administrative Assistant
55 0.8%
செயல் அலுவலர் (HR&CE)
Executive Officer
46 0.7%
வன காவலர் / வனக் காவலர்
Forest Watcher and Forest Guard
41 0.6%
ஆய்வக உதவியாளர் (மூத்த உட்பட)
Laboratory Assistant
24 0.4%
பதிவேட்டு எழுத்தர்
Record Clerk
19 0.3%
விற்பனை உதவியாளர்
Sales Assistant
10 0.2%
கூட்டுறவு இளநிலை ஆய்வாளர்
Junior Inspector of Co-operative Societies
8 0.1%
தொலைபேசி இயக்குநர்
Telephone Operator
1 0.0%
மொத்தம் 6,574 100%
இதிலிருந்து தெரிவது: மொத்த இடங்களில் 86% இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளிலேயே உள்ளன. தட்டச்சு / சுருக்கெழுத்து தகுதி உள்ளவர்களுக்கு 2,036 இடங்கள் (தட்டச்சர் + சுருக்கெழுத்து தட்டச்சர்) திறந்திருக்கின்றன — இன்னும் தகுதி பெறவில்லை என்றால் இப்போதே தொடங்குவது மதிப்புள்ளது.

முழு அட்டவணை

வ.எண் பதவியின் பெயர் குறியீடு பணி / நிறுவனம் இடங்கள் ஊதிய நிலை
1 கிராம நிர்வாக அலுவலர் (VAO)
Village Administrative Officer
2025 Tamil Nadu Ministerial Service 291 8
2 இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு)
Junior Assistant (Security)
2400 Tamil Nadu Ministerial Service 28 8
3 பில் வசூலிப்பாளர்
Bill Collector
2500 Tamil Nadu Ministerial Service 59 8
4 இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு அல்லாத)
Junior Assistant (Non Security)
2600 Tamil Nadu Ministerial Service 2,610 8
5 இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு அல்லாத)
Junior Assistant (Non Security)
4600 Tamil Nadu Judicial Ministerial Service 252 8
6 இளநிலை உதவியாளர்
Junior Assistant
3842 Tamil Nadu Municipal Council Service 119 8
7 வருவாய் உதவியாளர்
Revenue Assistant
3843 Tamil Nadu Municipal Council Service 96 8
8 இளநிலை உதவியாளர்
Junior Assistant
3840 Tamil Nadu Municipal Corporation Service 70 8
9 இளநிலை உதவியாளர்
Junior Assistant
3512 TN Adi Dravidar Housing and Development Corporation 43 8 EPF
10 இளநிலை உதவியாளர்
Junior Assistant
3851 TN Municipal Corporation Service (Greater Chennai) 134 8
11 வரி வசூலிப்பாளர்
Tax Collector
3854 TN Municipal Corporation Service (Greater Chennai) 107 8
12 இளநிலை உதவியாளர்
Junior Assistant
3521 TN Small Industries Development Corporation 25 8 EPF
13 இளநிலை உதவியாளர்
Junior Assistant
3788 TN Handloom Weavers Co-operative Societies 20** 17000-54060 EPF
14 இளநிலை உதவியாளர்
Junior Assistant
3816 TN Police Housing Corporation 5 8 EPF
15 இளநிலை உதவியாளர்
Junior Assistant
3520 TN Power Finance and Infrastructure Development Corp 3 8 EPF
16 இளநிலை உதவியாளர்
Junior Assistant
3321 TN Medicinal Plant Farms and Herbal Medicine Corp 6 8 EPF
17 இளநிலை உதவியாளர் (கணக்கு)
Junior Assistant (Accounts)
3848 TN Power Distribution Corporation 422 3 (19500-62000)
18 பில் வசூலிப்பாளர்
Bill Collector
3214 TN Urban Habitat Development Board 38 3 (16600-52400)
19 இளநிலை நிர்வாக உதவியாளர்
Junior Administrative Assistant
3835 TN State Legal Services Authority 42 8
20 இளநிலை நிர்வாக உதவியாளர் (கணினி இயக்குநர்)
Junior Administrative Assistant (Computer Operator)
3836 TN State Legal Services Authority 13 8
21 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்
Junior Assistant cum Typist
3804 Electronic Corporation of Tamil Nadu 6 8 EPF
22 தட்டச்சர்
Typist
2200 TN Ministerial / Legislative Assembly / Secretariat Service 856% 8
23 தட்டச்சர்
Typist
4200 Tamil Nadu Judicial Ministerial Service 377% 8
24 தட்டச்சர்
Typist
3834 TN Small Industries Development Corporation 15 8 EPF
25 தட்டச்சர்
Typist
3846 Tamil Nadu Waqf Board 6 8
26 தட்டச்சர்
Typist
3844 Tamil Nadu Municipal Council Service 260 8
27 தட்டச்சர்
Typist
3852 TN Municipal Corporation Service (Greater Chennai) 56% 8
28 தட்டச்சர்
Typist
3817 TN Police Housing Corporation 2 8 EPF
29 சுருக்கெழுத்து தட்டச்சர் (தரம் III)
Steno Typist (Grade III)
2300 Tamil Nadu Ministerial Service 209% 10
30 சுருக்கெழுத்து தட்டச்சர் (தரம் III)
Steno Typist (Grade III)
4300 Tamil Nadu Judicial Ministerial Service 145% 10
31 சுருக்கெழுத்து தட்டச்சர் (தரம் III)
Steno Typist (Grade III)
3837 TN Adi Dravidar Housing and Development 1 10 EPF
32 சுருக்கெழுத்து தட்டச்சர் (தரம் III)
Steno Typist (Grade III)
3838 TN Small Industries Development Corporation 2 10 EPF
33 சுருக்கெழுத்து தட்டச்சர் (தரம் III)
Steno Typist (Grade III)
3847 Tamil Nadu Waqf Board 2 8
34 சுருக்கெழுத்து தட்டச்சர் (தரம் III)
Steno Typist (Grade III)
3672 Chennai Metropolitan Development Authority 1@ 10
35 சுருக்கெழுத்து தட்டச்சர்
Steno Typist
3845 Tamil Nadu Municipal Council Service 16 10
36 தனிப்பட்ட எழுத்தர்
Personal Clerk
3841 Tamil Nadu Municipal Corporation Service 60 10
37 சுருக்கெழுத்து தட்டச்சர் (தரம் III)
Shorthand Typist (Grade III)
3853 TN Municipal Corporation Service (Greater Chennai) 28% 10
38 தொலைபேசி இயக்குநர்
Telephone Operator
3822 TN Forensic Science Subordinate Service 1 8
39 செயல் அலுவலர் (தரம் IV)
Executive Officer (Grade IV)
1655 TN Hindu Religious and Charitable Endowments 46 8
40 கூட்டுறவுச் சங்க இளநிலை ஆய்வாளர்
Junior Inspector of Co-operative Societies
1095 TN Co-operative Subordinate Service 8 10
41 பதிவேட்டு எழுத்தர் (தரம் III)
Record Clerk (Grade III)
3839 TN Industrial Investment Corporation 19 3 EPF
42 மூத்த ஆய்வக உதவியாளர்
Senior Laboratory Assistant
3746 Arasu Rubber Corporation Limited 1 10 EPF
43 ஆய்வக உதவியாளர்
Laboratory Assistant
3103 TN Forensic Science Subordinate Service 23 8
44 விற்பனை உதவியாளர்
Sales Assistant
3806 TN Handicrafts Development Corporation 10$ 8 EPF
45 வன காவலர்
Forest Watcher
3319 Tamil Nadu Forest Subordinate Service 40# 3
46 வனக் காவலர் (ஓட்டுநர் உரிமத்துடன்)
Forest Guard with Driving Licence
3318 Tamil Nadu Forest Subordinate Service 1 5
மொத்தம் 6,574

குறிப்புகள்: % பின்தங்கிய (backlog) காலிப்பணியிடங்கள் உட்பட · @ backlog காலிப்பணியிடம் மட்டும் · # சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு உட்பட · $ விற்பனை உதவியாளர் (3806) பணியிடம் புது தில்லி, கொல்கத்தா அல்லது தமிழ்நாட்டின் எப்பகுதியிலும் இருக்கலாம் · ** இளநிலை உதவியாளர் (3788) இந்தியாவின் எப்பகுதியிலும் பணியமர்த்தப்படலாம் · EPF — ஊழியர் வருங்கால வைப்பு நிதி. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் பொருந்தும் இடங்களில் கழிக்கப்பட்டுள்ளன.

⚠️ இன்னும் வெளியாகாதது: துறை / அலகு வாரியான காலிப்பணியிடப் பகிர்மானம் (Department / Unit-wise distribution) பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மேலும், இங்குள்ள எண்ணிக்கை தோராயமானது — கலந்தாய்வு தொடங்கும் முன் மாற்றியமைக்கப்படலாம்.

தேர்வு முறை (Exam Pattern)

ஒரே தாள், ஒரே அமர்வு — 200 வினாக்கள், 300 மதிப்பெண், 3 மணி நேரம், OMR முறையில். பாடத்திட்டக் குறியீடு 496.

பகுதி பாடம் தரம் வினா மதிப்பெண்
அ தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 10ஆம் வகுப்பு 100 150
ஆ பொது அறிவு 10ஆம் வகுப்பு 75 150
இ திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் 10ஆம் வகுப்பு 25
மொத்தம் 200 300
தமிழ்த் தாளில் 40% கட்டாயம். பகுதி அ (தமிழ்) தேர்வில் 150-க்கு குறைந்தபட்சம் 60 மதிப்பெண் பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறாதவர்களின் பகுதி ஆ மற்றும் பகுதி இ விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது. அதே நேரத்தில் தமிழ்த் தாளின் மதிப்பெண் தரவரிசைக்கும் எடுத்துக் கொள்ளப்படும் — எனவே இது வெறும் தகுதித் தேர்வு அல்ல, மதிப்பெண் தேர்வும் கூட.

மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு மட்டும் தமிழ்த் தாளுக்குப் பதிலாக General English (SSLC தரம், 100 வினா / 150 மதிப்பெண்) எழுதும் வாய்ப்பு உண்டு. அதற்கும் 40% குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை பொருந்தும்.

பகுதி அ — தமிழ் (100 வினா)

அலகு பகுதி வினாக்கள்
I இலக்கணம் 25
II சொல்லகராதி 15
III எழுதும் திறன் 15
IV கலைச் சொற்கள் 10
V வாசித்தல் — புரிந்து கொள்ளும் திறன் 15
VI எளிய மொழி பெயர்ப்பு 5
VII இலக்கியம், தமிழ் அறிஞர்கள், தமிழ்த் தொண்டு 15
மொத்தம் 100

பகுதி ஆ — பொது அறிவு (75 வினா)

அலகு பாடம் வினாக்கள்
I பொது அறிவியல் 5
II புவியியல் 5
III இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் 10
IV இந்திய ஆட்சியியல் 15
V இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் 20
VI தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக–அரசியல் இயக்கங்கள் 20
மொத்தம் 75
எங்கே மதிப்பெண் இருக்கிறது என்பதைப் பாருங்கள். பொது அறிவில் 75-ல் 40 வினாக்கள் இரண்டே அலகுகளிலிருந்து வருகின்றன — அலகு V (பொருளாதாரம் + TN வளர்ச்சி நிர்வாகம்) 20, அலகு VI (தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள்) 20. இந்த இரண்டையும் விட்டுவிட்டு பொது அறிவியலில் நேரத்தைச் செலவிடுவது பலர் செய்யும் தவறு.

பகுதி இ — திறனறிவு (25 வினா)

அலகு பகுதி வினாக்கள்
I திறனறிவு — சுருக்குதல், விகிதம், வட்டி, பரப்பு, கொள்ளளவு, காலம் மற்றும் வேலை 15
II காரணவியல் — தருக்கம், புதிர்கள், பகடை, எண்/எழுத்து வரிசை 10
மொத்தம் 25

தகுதி விவரங்கள்

கல்வித் தகுதி

இந்த அறிவிக்கையில் 46 வகையான பதவிகள் உள்ளன. பதவிக்கேற்ப தகுதி 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மாறுபடுகிறது. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பெரும்பாலான பதவிகளுக்கு SSLC அடிப்படைத் தகுதி. சில பதவிகளுக்கு தட்டச்சு / சுருக்கெழுத்து தகுதி, ஓட்டுநர் உரிமம், உடற்தகுதி (வனக் காவலர்) போன்ற கூடுதல் நிபந்தனைகளும் உண்டு.

கூட்டுறவுத் துறை சார்ந்த சில பதவிகளுக்குக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் படிப்பு தேவை. உங்கள் பதவிக்கான சரியான தகுதியை அறிவிக்கையின் பிரிவு 4.2-ல் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு (01.07.2026 நிலவரப்படி)

பிரிவு குறைந்தபட்சம் அதிகபட்சம்
ஏனையோர் (Others) 18 30
SC, SC(A), ST, MBC/DC, BC(OBCM), BC(M) 18 32 / 35 (பதவி வாரியாக)
கிராம நிர்வாக அலுவலர் (VAO) உள்ளிட்ட சில பதவிகள் 21 30 / 40
வனக் காவலர் 25 35 / 45

மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தனிச் சலுகை உண்டு; 01.07.2026 அன்று 60 வயதைத் தாண்டக் கூடாது.

கட்டண விவரம்

ஒருமுறைப் பதிவுக் கட்டணம் (OTR) ₹150 — பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்
தேர்வுக் கட்டணம் ₹100

தேர்வுக் கட்டண விலக்கு:

  • ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் — முழு விலக்கு
  • மாற்றுத்திறனாளிகள் — முழு விலக்கு
  • ஆதரவற்ற விதவைகள் — முழு விலக்கு
  • MBC/DC, BC, BC(M) — 3 முறை இலவச வாய்ப்பு
  • முன்னாள் படைவீரர்கள் — 2 முறை இலவச வாய்ப்பு
இலவச வாய்ப்புகளை நீங்களே கணக்கிட்டு வையுங்கள். முந்தைய விண்ணப்பங்களில் பயன்படுத்திய இலவச வாய்ப்புகளை மறைத்து மீண்டும் கட்டண விலக்கு கோரினால், விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன் ஒரு வருடத்திற்குத் தேர்வு எழுத விலக்கி வைக்கப்படுவீர்கள். தன்விவரப் பக்கத்தின் Application History-ஐ மட்டும் நம்பாமல், சொந்தக் கணக்கும் வைத்திருங்கள் என TNPSC-யே அறிவுறுத்துகிறது.

விண்ணப்பிப்பது எப்படி

  1. http://www.tnpscexams.in சென்று ஒருமுறைப் பதிவு (OTR) செய்யுங்கள். ஆதார் எண் இணைப்பது கட்டாயம்.
  2. புகைப்படம் — வெள்ளைப் பின்னணி, 4.5 × 3.5 செ.மீ. முகம், இரு காதுகள், கழுத்துப் பகுதி தெளிவாகத் தெரிய வேண்டும். படத்தின் கீழே பெயரும் படம் எடுத்த தேதியும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். 200 DPI, 20KB–50KB, கோப்புப் பெயர் “Photograph.jpg”.
  3. கையொப்பம் — வெள்ளைத் தாளில் 6.0 × 2.0 செ.மீ கட்டம் வரைந்து, நீலம் அல்லது கருப்பு மை பேனாவில் கையொப்பமிடுங்கள். 200 DPI, 10KB–20KB, “Signature.jpg”.
  4. அறிவிக்கைப் பக்கத்தில் APPLY அழுத்தி விண்ணப்பத்தை நிரப்புங்கள்.
  5. இரண்டு தேர்வு மைய மாவட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம் (மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்று மட்டும்).
  6. PREVIEW-ல் முழுமையாகச் சரிபார்த்து, கட்டணம் செலுத்தி SUBMIT செய்யுங்கள்.
⛔ இந்தப் புகைப்படங்கள் ஏற்கப்படாது: செல்ஃபி, கைபேசியில் எடுத்த படம், ஜெராக்ஸ் நகல், குடும்ப விழா அல்லது சுற்றுலாப் படங்கள், மரம் / செடி / கொடி / கட்டடம் பின்னணியில் எடுத்த படங்கள். புகைப்பட ஸ்டூடியோவில் எடுத்த கடவுச்சீட்டு அளவு வண்ணப் புகைப்படம் மட்டுமே. விதிமீறல் என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தேர்வுக்குப் பிறகு என்ன நடக்கும்

  • உத்தேச விடைக்குறிப்பு தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 வேலை நாட்களுக்குள் வெளியிடப்படும்.
  • விடைக்குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க 7 நாட்கள் அவகாசம் — இணையவழியில் மட்டுமே.
  • தரவரிசைப் பட்டியலுக்குப் பிறகு கணினிவழித் திரை சான்றிதழ் சரிபார்ப்பு (onscreen certificate verification).
  • அதன் பின் கலந்தாய்வு. கலந்தாய்வின்போது தேர்ந்தெடுத்த பதவியை பின்னர் மாற்ற இயலாது.
தேர்வுக் கூடத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாதவை: கைபேசி, பேஜர், ஸ்மார்ட் வாட்ச், பென்டிரைவ், நினைவகக் குறிப்புகள், ஸ்மார்ட் கண்ணாடி, ப்ளூடூத் சாதனங்கள், கணிதம் மற்றும் வரையும் கருவிகள், மடக்கை அட்டவணைகள், குறிப்பேடுகள், கைப்பைகள், பணப்பை. கருமை நிற மையுடைய பந்து முனைப் பேனா மட்டுமே அனுமதிக்கப்படும்.

இனி என்ன செய்வது — தயாரிப்பு வழிகாட்டி

தேர்வுக்கு — நாட்கள் உள்ளன. மூன்று மாதங்களுக்குச் சற்றே அதிகம். இந்தக் காலத்தை எப்படிப் பிரிப்பது என்பதற்கு ஒரு நடைமுறைத் திட்டம்:

கட்டம் கால அளவு கவனம்
முதல் கட்டம் அக். 7 – நவ. 15
40 நாட்கள்
பொது அறிவு அலகு V மற்றும் VI (40 வினா) + தமிழ் இலக்கணம் (25 வினா). மொத்த மதிப்பெண்ணில் மிகப் பெரிய பங்கு இவற்றிலேயே.
இரண்டாம் கட்டம் நவ. 16 – டிச. 15
30 நாட்கள்
ஆட்சியியல் (15), திறனறிவு + காரணவியல் (25), தமிழ் சொல்லகராதி மற்றும் எழுதும் திறன் (30).
மூன்றாம் கட்டம் டிச. 16 – ஜன. 9
25 நாட்கள்
மீதமுள்ள அலகுகள், முழு மாதிரித் தேர்வுகள், திருப்புதல். புதிய பாடம் இல்லை.
தமிழ்த் தாளை இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்காதீர்கள். 150 மதிப்பெண் — அதாவது மொத்தத்தில் பாதி — தமிழில்தான். 40% எட்டவில்லை என்றால் மற்ற 150 மதிப்பெண் மதிப்பீடே செய்யப்படாது. முதல் நாளிலிருந்தே தினமும் ஒரு மணி நேரம் தமிழுக்கு ஒதுக்குங்கள்.

அதிகாரப்பூர்வத் தகவல்

  • அறிவிக்கை மற்றும் விண்ணப்பம்: http://www.tnpscexams.in
  • தேர்வாணைய இணையதளம்: http://www.tnpsc.gov.in
  • கட்டணமில்லா உதவி எண்: 1800 419 0958 (வேலை நாட்களில் காலை 10.00 – மாலை 5.45)
  • மின்னஞ்சல்: helpdesk@tnpscexams.in · grievance.tnpsc@tn.gov.in

🎯 Group 4 2027 — அதியமான் அகாடமியுடன் தயாராகுங்கள்

2016 முதல் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட போட்டித் தேர்வு மாணவர்களுடன் பயணிக்கிறோம். குரூப் 4-க்கான முழுமையான தொகுப்பு:

  • ஆஃப்லைன் பேட்ச் (கோயம்புத்தூர்) — திங்கள் முதல் வெள்ளி, காலை 10 முதல் மதியம் 1 வரை
  • ஆன்லைன் டெஸ்ட் பேட்ச் — தலைப்பு வாரியான தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள், முழு மாதிரித் தேர்வுகள்
  • Aptitude & Mental Ability பேட்ச் — 25 தேர்வுகள், 625 வினாக்கள், ஒவ்வொன்றுக்கும் விளக்கத்துடன்
  • குரூப் 4 புத்தகத் தொகுப்பு — திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, பொதுத் தமிழ் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் உட்பட

📞 வகுப்பு & டெஸ்ட் பேட்ச்: 9994359181  ·  📚 புத்தகங்கள்: 8681859181
ஆதரவு நேரம்: காலை 9.30 – மாலை 7.00 · ₹1999-க்கு மேல் இலவச டெலிவரி

WhatsApp-ல் பேச புத்தகங்களைப் பார்க்க குரூப் 4 பாடத்திட்டம்

In Brief — English Summary

The TNPSC Group 4 (CCSE-IV) 2026 notification — Notification No. 11/2026, Advertisement No. 747 — was released on 06.10.2026 with 6,574 vacancies across 46 post categories. Online applications are open at http://www.tnpscexams.in until 05.11.2026, 11.59 PM, with a correction window from 09.11.2026 to 11.11.2026. The written examination will be held on 10.01.2027, 9.30 AM to 12.30 PM.

It is a single OMR paper of 200 questions / 300 marks over 3 hours: Part A Tamil Eligibility-cum-Scoring (100 questions, 150 marks, SSLC standard) and Parts B and C together worth 150 marks — General Studies 75 questions and Aptitude & Mental Ability 25 questions. A minimum of 40% (60 of 150) in the Tamil paper is compulsory; papers of candidates who fall below it are not evaluated. Differently abled candidates may write General English in place of Tamil. Registration is ₹150 for the OTR (valid five years) plus a ₹100 examination fee, with full exemption for SC/SC(A)/ST, differently abled and destitute widow candidates, three free attempts for MBC/DC, BC and BC(M), and two for ex-servicemen. Age is reckoned as on 01.07.2026.

Note the date change: the TNPSC annual planner had listed the exam for 20 December 2026; the final notification moved it to 10 January 2027.

இப்பதிவில் உள்ள அனைத்துத் தகவல்களும் TNPSC அறிவிக்கை எண் 11/2026 (06.10.2026) ஆவணத்திலிருந்து மட்டுமே எடுக்கப்பட்டவை. விண்ணப்பிக்கும் முன் www.tnpsc.gov.in இணையதளத்தில் உள்ள அசல் அறிவிக்கையை முழுமையாகப் படிக்கவும். துறை / அலகு வாரியான பகிர்மானம் வெளியானதும் இப்பக்கம் புதுப்பிக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop

Discover more from Athiyaman team

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading