TASMAC Exam Date
டாஸ்மாக் தேர்வு எப்போது – TASMAC Junior Assistant
‘டாஸ்மாக்’ இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 500 காலியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதற்கான எழுத்து தேர்வு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்றைய செய்தி தாள்களில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டாஸ்மாக்’ அலுவலக பணிகளுக்கு, 500 ஊழியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு, லோக்சபா தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ளது.
தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவன மதுக் கடைகளில், 26 ஆயிரம் ஊழியர்கள், தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
இவர்களில், இளநிலை பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு, சிறப்பு தேர்வு நடத்தி, 500 பேரை, அலுவலக பணிகளில், இளநிலை உதவியாளர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்தது.
எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு, 2018 ஆகஸ்டில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க, செப்., 14 வரை அவகாசம் தரப்பட்டது.
8,800 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
தேர்வுக்கு, நிர்ணயித்த கல்வி தகுதியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணியாளர் தேர்வு அறிவிப்பிற்கு, 2018 அக்டோபரில், இடைக்கால தடை விதித்தது.
இந்தத் தடையை நீக்கக்கோரி, டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, சமீபத்தில், விசாரணைக்கு வந்தது.அப்போது, தடையை நீக்கிய உயர் நீதிமன்றம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கல்வித் தகுதி அடிப்படையில், எழுத்துத் தேர்வை நடத்தலாம் என, உத்தரவிட்டது.
இதனால், எழுத்து தேர்வு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஊழியர்களிடம் எழுந்துள்ளது.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் தேதி, விரைவில் வெளியாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நடத்தை விதிகள் அமலுக்கு வரும்; அப்போது, அரசு துறையில், ஆட்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ள கூடாது.
எனவே, தேர்தல் முடிந்ததும், எழுத்து தேர்வு நடத்தி, 500 ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Junior Assistant Job Post Official Notification : Download
Junior Assistant Job Post Application Form : Click Here
Junior Assistant Job Post Website Address : Visit Here
All Jobs : Click Here
