டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து உறுப்பினராக உள்ள சி.முனியநாதன், முழு கூடுதல் பொறுப்பாக அந்த பொறுப்பை கவனித்து வருகிறார். தலைவர் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே முரண்பாடு நிலவுவதால் இன்னும் அந்த பதவி காலியாகவே இருக்கிறது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி செயலராக இருந்த பி.உமா மகேஸ்வரி, திடீரென சென்னை வணிக வரித் துறை இணை ஆணையராக கடந்த நவ. 21-ம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அந்தப் பொறுப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ், கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது டிஎன்பிஎஸ்சி செயலராக ஐஏஎஸ் அதிகாரி ச.கோபால சுந்தரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்புடிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
