அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி துறைதயாரித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

 

Latest News 2019-100 Degree Courses அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை

தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?

பெரியார் பல்கலை: எம்.காம்., – கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது

அழகப்பா பல்கலை: எம்.எஸ்சி., ‘இன்பர்மேஷன் டெக்னாலஜி’ படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை

சென்னை பல்கலை: எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை

பாரதியார் பல்கலை: எம்.எப்.டி., என்ற, ‘மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்’ மற்றும் எம்.காம்., ‘இன்டர்நேஷனல் வணிகம்’ ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை.

எம்.எஸ்சி., படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல

பாரதிதாசன் பல்கலை: எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ – காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை

அண்ணாமலை பல்கலை: எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்: எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி – எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.

இந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள் உட்பட பலருக்கு அனுப்பப்பட்டுஉள்ளது.

 

Latest News 2019-100 Degree Courses அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை

One thought on “அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன

  1. Hi Team, I Completed MCA in Anna University Chennai. I am Eligible for to get a govenmet job Please Reply…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us