சிறப்பாசிரியர்(Special Teachers) தேர்வுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்
இன்று வெளியாகிறது-2018
தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டி யலை ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) இன்று வெளியிடுகிறது.
தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட நிலை யில் அடுத்த நிலையான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை இன்று வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
பணிநியமன அறிவிக்கையில் குறிப்பிட்டபடி, “ஒரு காலியிடத்துக்கு 2 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர் வர்கள் அழைக்கப்பட உள்ள னர்.
சான்றிதழ் சரிபார்ப்புப் பணி அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நடத்துவதற்கான பணி கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (District Primary Education Officer)அலுவலகங்களில் மும்முர மாக நடைபெற்று வருகின்றன.
சான்றிதழ் சரிபார்ப்பில் தேவை யான சான்றிதழ்களுடன் (கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், தமிழ்வழி கல்வி சான்றிதழ் போன்றவை) தேர்வர்கள் கலந்து கொள்ளும் வகையில் 2 வாரங்கள் அவகாசம் அளிக்கவும் சான்றிதழ் சரிபார்ப்பை ஒரேநாளில் நடத்தி முடிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் அடுத்த சில தினங்களில் இறுதி தேர்வுப் பட்டியல் பெயர், பதி வெண், எழுத்துத்தேர்வு மதிப் பெண், பதிவுமூப்பு மதிப்பெண், இடஒதுக்கீடு உள்ளிட்ட விவ ரங்களுடன் வெளியிடப்படும்.
