தமிழ்நாடு வன சீருடைப் பணி
எதிர்பார்ப்பு கேள்வி மற்றும் பதில்
Forester / Forest Guard Frequently Asked Questions
2018 ம் ஆண்டு தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்ட எதிர்பார்ப்பு கேள்விகளும் அதற்கான பதில்களும் (Forest Guard Application Doubts) இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.
1.விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை அஞ்சல் ஆணை மூலம்
செலுத்தலாமா?
செலுத்த இயலாது. தேர்வுக் கட்டணத்தை இணைய வழி (பற்று அட்டை/கடன் அட்டை/இணைய
வங்கி சேவை) மற்றும் இந்தியன் வங்கி செலுத்துச்சீட்டின் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
Can the examination fee be sent through postal order?
No. The examination fee shall be paid either through Online (Debit Card/Credit Card/Net
banking) or through Indian Bank by Challan.
2.நான் தமிழை பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து
படிக்கவில்லை. வனவர் தேர்விற்கு நான் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம். ஆனால் தேர்ச்சி பெற்று பதவியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் முழுமையான
வெற்றி பெற வேண்டும்.
I have not studied the language “Tamil” as one of the subjects either in Xth or XIIth
standard. Can I apply for the post of Forester or Forest Guard?
Yes, you can apply for the said posts, provided that after getting selected for appointment you
should pass Second class Language Test in Tamil (full test) conducted by the TNPSC within
two years from the date of appointment.
3.முன்னாள் இராணுவத்தினர் வனவர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாமா ?
விண்ணப்பிக்கலாம். அப்பதவிக்கான அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள கல்வித்தகுதிகள் மற்றும் வயது
வரம்பு மற்றும் பிற தகுதிகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம். வனவர் பதவிக்கு முன்னாள்
இராணுவத்தினருக்கான இட ஒதுக்கீடு கிடையாது.
Whether Ex – Servicemen can apply for the post of Forester?
Yes, eligible candidate can apply for the said post provided that the candidate possess the
required Educational qualification, age and other requirements mentioned in the Notification.
There is no reservation for Ex-Servicemen for the post of Forester.
4.இணையவழித் தேர்வு எழுதிய பின்பு நான் எழுதியவற்றை நகல் எடுத்துச் செல்ல இயலுமா?
இயலாது.
Is it possible to take a copy of Answer Paper after completing the Online examination?
No.
5.இணையவழித் தேர்வில் ஒருமுறை “SUBMIT” செய்த பிறகு மீண்டும் திருத்தமோ மாற்றமோ செய்ய
இயலுமா?
செய்ய இயலாது.
After clicking the “SUBMIT” Button is it possible to carry out any modification in the responses
in Online Examination?
No. It is not possible.
6.தேர்வில் கணக்கீடு செய்வதற்கு தனியே தாள் வழங்கப்படுமா?
வழங்கப்படும்.
Whether rough sheet will be provided in the Examination Hall?
Yes.
7.தேர்வில் கலந்துகொள்வதற்கு நுழைவுச் சீட்டு அனுப்புவீர்களா?
இணையவழித் தேர்வு என்பதால் நுழைவுச் சீட்டு தமிழ்நாடு வனத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Whether Admit Card will be sent to the candidates for Online Examination?
No. As it is an Online Examination admit card will be uploaded in the Tamil Nadu Forest
Department’s Website and candidates shall download the same.
8.வனவர் பதவிக்கான இணையவழித் தேர்வில் எதிர்மறை மதிப்பெண் இருக்கிறதா?
இல்லை.
Is there is any negative marking in the Online examination?
No
9.நான் பத்தாம் வகுப்பு, மூன்றாண்டு பட்டயப்படிப்பு மற்றும் இரண்டாண்டு இளங்கலை அறிவியல்
பட்டம் பெற்றுள்ளேன். நான் வனவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
If a candidate had passed Xth Std, 3 years Diploma and 2 years Degree course. Can
the candidate apply for the post of Forester?
Yes
10.நான் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சான்று வைத்துள்ளேன். வனவர்,
வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கு விளையாட்டு
பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாமா?
இது குறித்த அனைத்து விபரங்களும் தமிழ்நாடு வனத்துறையின் இணையதளத்தில்
(www.forests.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள “தகவல் சிற்றேடு” என்ற தலைப்பின் கீழ்
பத்தி 6.5ல் குறிப்பிடப்பட்டுள்ளன.
I have a Certificate in District Level Tournament. Can I apply for the post of Forester
under Sports Quota ?
All details have been furnished at Para.6.5 of “INFORMATION BROCHURE” uploaded in the
Tamil Nadu Forest Department’s Website (www.forests.tn.gov.in)
11.அறிவிக்கையில் உள்ள மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாமா?
ஆம். விண்ணப்பதாரர் மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்,
விண்ணப்பிக்கும்போது வனவர் பதவிக்குத் தனியாகவும், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர்
உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்குத் தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ
விண்ணப்பிக்கலாம்.
Can a candidate apply for all the three posts mentioned in the Advertisement
No.1/2018 ?
Yes, a candidate can apply for all the three posts. Candidate has to apply for the post of
Forester separately while the candidate can apply for the post of Forest Guard and Forest
Guard with Driving Licence either separately or together.
12.வனவர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகளுக்கான வினாத்தாள்கள் எந்த மொழியில் இருக்கும்?
வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.
In which language the question paper would be ?
The questions will be both in Tamil and English languages.
13.விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை இணைத்து இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமா?
முன்னாள் இராணுவத்தினர் / விளையாட்டு தகுதி / ஆதரவற்ற விதவை / தமிழ்வழிக் கல்வித்தகுதி
/ மூன்றாம்பாலினத்தவர் ஆகியவற்றின் கீழ் இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள் மட்டும்
சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
Whether candidates need to upload the Certificates along with the Online application
form for the TNFUSRC recruitment?
Only candidates claiming for reservation or concessions under Ex-servicemen/ Sports /
Destitute Widow/ PSTM/Transgender quota have to upload the document in support of their
claims.
14.குறிப்பிட்ட பாடங்கள் தவிர்த்து நான் பிறபாடத்தில் இளநிலைஅறிவியல் (Bachelor Degree in Science)
படித்துள்ளேன். நான் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம். ஆனால், அக்க�����்வித்தகுதி இப்பதவிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு
நிகரானது என நிரூபிக்கும் பொறுப்பு விண்ணப்பதாரரையே சாரும்.
I am a Graduate in B.sc. degree other than the prescribed qualification. Can I apply for
the post?
Yes can apply. But the candidate must produce the proper evidence for equivalence.
15. SSLC, HSC இரண்டிலுமே நான் தமிழை ஒரு பாடமாகப் படித்துள்ளேன். தமிழில் தகுதியாக
நான் எதைக் குறிப்பிட வேண்டும் ?
தமிழில் தேர்ச்சி பெற்ற எந்த ஒரு பாடத்தையும் தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்றதற்கு ஆதாரமாகக்
குறிப்பிடலாம்.
I have studied Tamil as one of the Subject in SSLC and HSC. Can it be mentioned for
qualification in Tamil in Online application?
The candidates can furnish the SSLC / HSC certificate for the said purpose
16. நான் இளம்பொறியியல் பட்டப்படிப்பினை 10 + 3 + 3 என்ற முறையில் பயின்றுள்ளேன். நான்
வனவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
I am a Graduate with B.E., Degree and have studied in the order of 10 + 3 + 3.
Can I apply for the post of Forester?
Yes.
Forester / Forest Guard Paid Video Course
Video Class Details Click Here

12 th economic applay pannalama ,forest guard kku
Sir my hight 154 can I apply this post I am completed BE EEE .MBc