குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில்தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள் பார்த்தசாரதி, வீரராஜ் இன்று கைது செய்யப்பட்டனர். குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரியாக இருந்துள்ளனர்.

தேர்வர்கள் கப்பி அடிக்கவும், தேர்வு பதில் தாள் (OMR sheet) மாற்றிய குற்றச்சாட்டில் கைது சிபிசிஐடியால் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: