டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பற்றி ஒரு முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பற்றி ஒரு முக்கிய அறிவிப்பு

Tnpsc Latest News

டிஎன்பிஎஸ்சி மூலம் காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெற்ற சிலர் இன்னும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் இதைப் பற்றிய வழக்கிற்கான முடிவை நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது அதைப் பற்றிய தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை வைத்து காலி பணியிடங்களை நிரப்பாமல் புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த பரமானந்தம் என்பவர் இந்த வழக்கை கொடுத்து இருந்தார். அவர் 2014ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் காலிப்பணியிடம் இருந்தால் மனுதாரரை பணியில் நியமிக்க பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அடுத்த அறிவிப்பை வெளியிடும் முன் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் எனவும் இதனை சரியாக பின்பற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

TNPSC Annual Planner : Download 

Monthly Current Affairs in Tamil 2019 : Download

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading