Athiyaman Academy
நல்ல தமிழ் எழுதுவோம்
போட்டித் தேர்வுகளுக்கான இலக்கணக் கையேடு
TNPSCTETTNUSRBTRB
அத்தியாயம் 5பழமொழி
தேர்வில் 4 வினாக்கள். அடிக்கடி வரும் வடிவம்: ஒரு திருக்குறளைக் கொடுத்து, அதே கருத்தைத் தரும் பழமொழியைப் பொருத்தச் சொல்வது. எனவே குறளின் கருத்தை அறிந்தால் போதும் — பழமொழியை மனப்பாடம் செய்யத் தேவையில்லை.
5.1 குறள் ↔ பழமொழி பொருத்துதல்
| குறள் கருத்து | பொருந்தும் பழமொழி |
|---|---|
| எல்லார்க்கும் நன்மை தரும் பணிவு — “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” | அடக்கம் ஆயிரம் பொன் தரும் |
| ஙகரம் போல் சுற்றத்தைச் சுற்றி வாழ் — “ஙப்போல் வளை” | கூடி வாழ்ந்தால் கோடி நன்மை |
| ஈகையால் யாரும் கெட்டதில்லை | இட்டுக் கெட்டாருமில்லை, ஈயாமல் வாழ்ந்தாருமில்லை |
| கடன் உறவைக் கெடுக்கும் | உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது |
5.2 அடிக்கடி கேட்கப்படும் பழமொழிகள்
| பழமொழி | கருத்து |
|---|---|
| அடக்கம் ஆயிரம் பொன் தரும் | பணிவே பெரும் செல்வம் |
| கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | ஒற்றுமையின் பயன் |
| ஆழம் தெரியாமல் காலை விடாதே | அறியாத செயலில் இறங்காதே |
| சொல்லாமல் கொடுப்பது தான் தானம் | பிரதிபலன் எதிர்பாராத ஈகை |
| வருமுன் காப்பது அறிவு | முன்னெச்சரிக்கை |
| ஒரு பொய்யை மறைக்க நூறு பொய் | பொய்யின் விளைவு |
| கற்றது கை அளவு, கல்லாதது உலக அளவு | அறிவின் எல்லை |
| நாய் வாலை நிமிர்த்த முடியாது | இயல்பு மாறாது |
5.3 மேலும் பழமொழிகள்
| பழமொழி | கருத்து |
|---|---|
| அகத்தின் அழகு முகத்தில் தெரியும் | உள்ளக் குணம் வெளிப்படும் |
| ஆலும் வேலும் பல்லுக்குறுதி | பழக்கவழக்கத்தின் பயன் |
| இளமையில் கல் | கல்விக்கு உரிய பருவம் |
| உள்ளங்கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைதல் | அருகில் உள்ளதை அறியாமை |
| ஊரோடு ஒத்து வாழ் | சமூகத்தோடு இணைந்து வாழ்தல் |
| எறும்பு ஊர கல்லும் தேயும் | விடாமுயற்சியின் வெற்றி |
| ஒற்றுமையே பலம் | இணைவின் வலிமை |
| காலம் தவறினால் கோலம் குலையும் | காலத்தின் முக்கியத்துவம் |
| சிறு துளி பெரு வெள்ளம் | சிறிது சிறிதாகச் சேர்வதன் பயன் |
| தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் | இளமைப் பழக்கம் நீடித்தல் |
பயிற்சி — அத்தியாயம் 5
- “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” — பொருந்தும் பழமொழி?
(அ) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (ஆ) வருமுன் காப்பது அறிவு (இ) அடக்கம் ஆயிரம் பொன் தரும் (ஈ) ஆழம் தெரியாமல் காலை விடாதே - “ஙப்போல் வளை” — பொருந்தும் பழமொழி?
(அ) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (ஆ) அடக்கம் ஆயிரம் பொன் தரும் (இ) நாய் வாலை நிமிர்த்த முடியாது (ஈ) ஒரு பொய்யை மறைக்க நூறு பொய் - இட்டுக் கெட்டாருமில்லை, ஈயாமல் வாழ்ந்தாருமில்லை — கருத்து?
(அ) கடனின் தீமை (ஆ) ஈகையால் யாரும் கெடவில்லை (இ) ஒற்றுமை (ஈ) பணிவு - உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது — கருத்து?
(அ) ஈகை (ஆ) கடன் உறவைக் கெடுக்கும் (இ) பணிவு (ஈ) முன்னெச்சரிக்கை - நாய் வாலை நிமிர்த்த முடியாது — கருத்து?
(அ) இயல்பு மாறாது (ஆ) முயற்சி வெல்லும் (இ) ஒற்றுமை (ஈ) அறிவின் எல்லை - கற்றது கை அளவு, கல்லாதது உலக அளவு — கருத்து?
(அ) கல்வி தேவையில்லை (ஆ) அறிவின் எல்லை உணர்தல் (இ) ஈகை (ஈ) பணிவு
▸ விடைகள்
- இ
- அ
- ஆ
- ஆ
- அ
- ஆ
முழு எடுத்துக்காட்டுத் தொகுப்பு
பழமொழிகள் — 352
நூலில் இடம்பெற்ற பழமொழிகள் அனைத்தும், அகர வரிசையில்.
352 பழமொழிகள்
“பழமொழியின் பொருள் யாது?” வகை வினாக்களுக்கு இதுவே அடிப்படை.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அடக்கம் ஆயிரம் பொன் தரும்.
அடாது செய்பவர் படாது படுவர்.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்.
அடியாத மாடு படியாது.
அதிக ஆசை அதிக நஷ்டம்.
அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்.
அந்தியில் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை.
அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.
அலை ஓய்வது எப்போது?
தலை முழுகுவது எப்போது?
அலை மோதும்போது தலை முழுக வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்.
அறையில் ஆடி அம்பலத்தில் ஆடு.
அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்.
அள்ளாது குறையாது; சொல்லாது பிறவாது.
அன்னம் இட்டவர்கள் வீட்டில் கன்னமிடலாமா?
அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்.
அழுகிற பிள்ளை பால் குடிக்கும்.
ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்.
ஆடி விதை; தேடி நடு.
ஆடு கொழுக்கிறது இடையனுக்கு லாபம்.
ஆள்பாதி; ஆடை பாதி.
ஆடையில்லாதவன் அரை மனிதன்.
ஆட்டுக்கு வால் அளவாய் அளந்து வைத்திருக்கிறது.
ஆடிக் கறப்பதை ஆடிக் கற; பாடிக் கறப்பதைப் பாடிக் கற.
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆத்திரக்காரனுக்குச் சாத்திரம் உண்டா?
ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர்.
ஆபத்துக்குப் பாவமில்லை.
ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.
ஆமை புகுந்த கிணறும் அமீனா நுழைந்த வீடும் ஆகா.
ஆயிரம் கலம் நெல்லுக்கு ஓர் அந்துப் பூச்சி போதும்.
ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
ஆரும் அற்றதே தாரம்; ஊரில் ஒருவனே தோழன்.
ஆழம் அறியாமல் காலை விடாதே.
ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.
ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்.
ஆனைக்கும் அடி சறுக்கும்.
ஆனைக்கும் ஒரு காலம்; பூனைக்கும் ஒரு காலம்.
ஆனை ஏறியும் திட்டி வாசல் நுழைவதா?
(திட்டி வாசல் – சிறு நுழைவு வாசல்) ஆனை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இடறின காலே இடறும்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இமயஞ் சேர்ந்த கருங்காக்கை பொன்னிறமாகும்.
இளமையிற் கல்வி முதுமையில் காக்கும்.
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை.
இலங்கணம் பரம ஒளஷதம்.
(இலங்கணம் – பட்டினி போடுதல்) இல்லாதவனோ பொல்லாதவனோ.
இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது.
இளைத்தவன் ஏழு வருஷத்திற்கு எள் விதைக்க வேண்டும்.
ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈயிடம் நோயிடம்.
உருவு திரு ஊட்டும்.
(திரு – செல்வம்) உலகம் பலவிதம்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
உதிரம் உறவு அறியும்.
உண்ட இளைப்பு தொண்டருக்கும் உண்டு.
(தொண்டர் – காவல் காப்பவர்)
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது.
உற்ற நண்பன் உயிருக்கு அமிர்தம்.
உத்தியோகம் புருட லட்சணம்.
ஊமை ஊரைக் கெடுக்கும்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
ஊன்றக் கொடுத்த தடி உச்சியைப் பிளக்கிறது.
ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
எச்சில் இலை எடுக்கச் சொன்னார்களா?
எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?
எட்டி பழுத்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன?
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?
எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எருது ஈனும் என்னும் முன்னே என்ன கன்று என்று கேட்பதா?
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்யும்.
ஏட்டுச் சுரைக்காய் கறி சமைக்க உதவாது.
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
ஏழை சொல் அம்பலத்துக்கு ஏற்குமா?
ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஐந்தும் ஆறும் இருந்தால் அறியாத பெண்ணும் கறி சமைப்பாள்.
ஐந்து பெண் இருந்தால் அரசனும் ஆண்டி.
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுகிறது.
ஒருவர் அறிந்தால் இரகசியம்; இருவரறிந்தால் அம்பலம்.
ஒருவர் பொறை இருவர் நட்பு.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒழுங்கு ஊராளும்.
ஒற்றுமையே பலம்.
கங்கையில் முழுகினாலும் காக்கை அன்னமாகுமா?
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ் சிநேகம் பகை காட்டும்.
கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?
கடித்த பாக்குக் கொடாத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வந்து வழி விட்டானாம்.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம்.
கட்டோட போனால் கனத்தோடே வரலாம்.
கண்டது கற்கப் பண்டிதனாவான்.
கண்ணின் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?
கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி.
கம்புக்குக் களையெடுக்கப் போய்த் தம்பிக்குப் பெண் கேட்டானாம்.
கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
கல்லுளி மங்கன் போனவழி காடு மேடெல்லாம் தவிடுபொடி.
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
கள்ள மனம் துள்ளும்
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காக்கை நிறத்தை மாற்றினாலும் கடன் வாங்குங் குணத்தை மாற்ற முடியாது.
காட்டுக்குப் போனாலும் கூட்டுறவு கூடாது.
காடிக் கஞ்சியென்றாலும் மூடிக் குடி.
(காடி-புளிப்பு) கார்த்திகைக்கு மேல் மழையும் இல்லை, கர்ணனுக்கு மேல் கொடையும் இல்லை.
காலம் போகும்; வார்த்தை நிற்கும்.
கால விளம்பனம் சாலவும் தீதே.
(விளம்பனம் – தாமதம்) காலையில் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும்.
காலைச் சுற்றிய பாம்பு காலைக் கடிக்காமல் விடாது.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது.
கிட்ட நெருங்க முட்டப்பகை.
கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுக்கவா?
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
குப்பையிலே கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
குரைக்கும் நாய் வேட்டைக்கு உதவாது.
குருவியின் தலையில் பனங்காய் வைத்தால் தாங்குமா?
குறையச் சொல்லி நிறைய அள.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில், கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானைப் பிளந்து வைகுண்டம் காட்டுவது எப்படி?
கெஞ்சிடில் மிஞ்சுவர்; மிஞ்சிடில் கெஞ்சுவர்.
கெடுவான் கேடு நினைப்பான்.
கெட்டிகாரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
கை தொடின் மஞ்சளும் கரியாகும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கைக்காடையை விட்டுவிட்டுக் காட்டுக் காடையைப் பிடிப்பதா?
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கொல்லான் தெருவில் ஊசி விலை போகுமா?
கொல்லான் பட்டறையில் நாய்க்கு என்ன வேலை?
கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.
கொடிக்குக் காய் கனக்குமா?
கொடுத்தால் கட்டபொம்பு கொடுக்க வேண்டும்; விளைந்தால் கரிசல் காடு விளையவேண்டும்.
கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு; பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
கோல் எடுத்தால் குரங்கும் ஆடும்.
கோழி மிதித்துக் குஞ்சு முடமாகுமா?
கோழி போனதுமல்லாமல் குரலும் போயிற்று.
சகுனம் நன்றாக இருந்தாலும் விடிய விடியத் திருடாதே.
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
சட்டி சுட்டது கைவிட்டது.
சனமொழி தெய்வமொழி (சனம் – மக்கள்) சற்சனர் உறவு சர்க்கரைப்பாகு.
சனம் சனத்தோடு சேரும்; சந்தனத்தோடு கருப்பூரம் சேரும்.
சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் என்ன செய்யும்?
சிதம்பரத்துப் பிள்ளைக்குத் திருவாசகம் ஓத வேண்டுமா?
சித்திரமும் கைப்பழக்கம்: செந்தமிழும் நாப்பழக்கம்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
சுண்டைக்காய் காற்பணம்; சுமைகூலி முக்காற் பணம்.
சுத்தம் சோறு போடும்.
சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்?
சுவரோடாயினும் சொல்லியழு.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானம் ஆண்டி.
சூடு கண்ட பூனை அடுப்படிக்குப் போகாது.
செங்கோலுக்கு முன்னே சங்கேதமா?
(சங்கேதம் – முன்னேற்பாடு) செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகிறது.
செத்தவன் கண் செந்தாமரை
சேரப் போனால் செடியும் பகை.
சொல்லாது பிறவாது.
அள்ளாது குறையாது.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
சொப்பனத்தில் கண்ட அரிசி, சோற்றுக்கு ஆகுமா?
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
சோழியன் குடுமி சும்மா ஆடாது.
தகப்பன் வெட்டின கிணறு என்று தலைகீழாய் விழலாமா?
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.
தருமம் தலை காக்கும்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்.
தவிட்டுக்கு வந்த கைதான் தனத்துக்கும் வரும்.
தடியெடுத்தவன் தம்பிரான்.
தனக்கு மிஞ்சியல்லவோ தருமம்?
தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
தனி மரம் தோப்பாகாது.
தாய்க்குப் பின் தாரம்.
தாய்க்கு ஒளித்த சூலா?
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.
தாயும் மகளுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
திட்டிச் செத்தாரும் இல்லை; வாழ்த்தி வாழ்ந்தாரும் இல்லை.
தினை விதைத்தவன் தினையையே அறுப்பான்.
வினை விதைத்தவன் வினையையே அறுப்பான்.
தின்றவன் தின்றால் திருக்கணங்குடியான் தண்டம் இறுப்பானா?
தீவட்டிக்காரனுக்குக் கண் தெரியாது.
துட்டரைக் கண்டால் தூர விலகு.
துணிந்தவனுக்குத் துக்கமில்லை.
துள்ளின மாடு பொதி சுமக்காது.
துறவிக்கு வேந்தன் துரும்பு.
தூர இருந்தால் சேர உறவு
தென்னைமரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி பிடித்ததாம்.
தேளுக்கு மணியம் கொடுத்தால்,
நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டுமாம்.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.
தொட்டுப் பார்த்தால் தோட்டியும் உறவு.
தோட்டி போல உழைத்துத் துரை போலச் சாப்பிட வேண்டும்.
நகைவிரும்பாத பெண்களும் இல்லை;
குகை விரும்பாத இருளும் இல்லை.
நடந்தால் நாடெல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.
நம் வீட்டு விளக்கென்று முத்தமிட்டுக் கொள்ளுகிறதா?
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு; நல்ல பெண்ணிற்கு ஒரு சொல் நல்லினத்திலும் நட்பு வலிது.
நல்ல செயலுக்கு நானூறு இடையூறு வரும்.
நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?
நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயினும் இன்றைக்குக் கிடக்கும் களாக்காய் மேல்.
நாள் செய்வது நல்லோர் செய்யார்.
நாமே ஆற்றிக் கொள்ளாத துன்பத்தை நாள் ஆற்றி விடும்.
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்.
நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
நிழலருமை வெயிலில் போனால் தெரியும்.
நிறை குடம் நீர் தளும்பாது.
நீராழம் கண்டாலும் நெஞ்சாழம் காண முடியாது.
நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
நீரடித்து நீர் விலகாது.
நெய்வேலியில் போய் நிலக்கரி விற்பதா?
நெருப்பையும் கறையான் அரிக்குமோ?
நேசமில் வதுவை (திருமணம்) நாச காரணம்.
நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும்.
நூலைப் போலச் சேலை; தாயைப் போலப் பெண்.
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு;
இரவில் எருமை மாடு தெரியுமா?
பசித்தவன் தின்னாததும் இல்லை;
பகைத்தவன் சொல்லாததும் இல்லை.
பட்டப் பகலிலே பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே.
பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்.
பணக்காரர் பின்னால் பத்துப் பேர்.
பணம் இல்லாதவன் பாய்மரம் இல்லாத கப்பலைப் போன்றவன்.
(ஜப்பானியப் பழமொழி)
பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
பதறாத காரியம் சிதறாது.
பல நாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல துளி பெரு வெள்ளம்.
பல்லில் பழுது ஏற்பட்டால் பாடைக்கு முன்பணம் கொடுப்பது போலாகும்.
(சீனப் பழமொழி)
பலாப் பழத்துக்கு ஈ பிடித்து விடவா?
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.
பன்றியுடன் கூடும் கன்றும் கெடும்.
பாம்பென்றால் படையும் நடுங்கும்.
பாம்பறியும் பாம்பின கால்.
(பாம்பின – பாம்பினுடைய) பாராத காரியம் பாழ்.
பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி.
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
பாவம் ஓரிடத்தில்; பழி ஓரிடத்தில்.
பாழாய்ப் போகிறது பசுவின் வயிற்றிலே.
பாழூருக்கு நரி ராசா.
பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்.
பிள்ளைச் சீர் கொள்ளக் கிடைக்குமா?
புத்திமானே பலவான்.
புலி வேட்டைக்கு அடிக்கும் தவிலடியை எலி வேட்டைக்கு அடிக்கலாமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
பூவோடும் சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பூனைக்குக் கொண்டாட்டம்; எலிக்குத் திண்டாட்டம்.
பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு உபாத்தியாயரும்.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண் புத்தி பின் புத்தி.
பெற்ற தாய் செத்தால், பெற்ற அப்பன் சிற்றப்பன்.
பெற்றதெல்லாம் பிள்ளையா?
இட்டதெல்லாம் பயிரா?
பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.
பெற்றவளுக்கு தெரியும் பிள்ளை அருமை; பெறாத மலடிக்கு என்ன தெரியும்?
பேசாதிருந்தால் பிழை ஒன்றுமில்லை.
பேசப் புகுந்தாயோ சாகப் புகுந்தாயோ?
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.
மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடப்பது போல இருக்கிறது.
மந்திரத்தால் மாங்காய் விழுமா?
மந்திரம் கால்; மதி முக்கால்.
மயிலே மயிலே, என்றால் இறகு கொடுக்குமா?
மரம் இல்லாத நிலம் உறவினர் இல்லாத ஊர் மாதிரி.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மலை கல்லி எலி பிடிக்கிறதா?
மலைக்குப் போனாலும் மைத்துனன் உறவு வேண்டும்.
மலையில் விளைந்தாலும் உரலில்தான் மசிய வேண்டும்.
மனமிருந்தால் வழி உண்டு.
மனக்கவலை பலக்குறைவு.
மாடு மேய்க்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது.
மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மாமியார் மெச்சிய மருமகள் இல்லை; மருமகள் மெச்சிய மாமியார் இல்லை.
மார்கழி பனி மச்சு வீட்டைத் துளைக்கும்.
தைப் பனி தரையைப் பிளக்கும்.
மின்னுக்கெல்லாம் பின்னே மழை.
மின்னுவன எல்லாம் பொன்னா?
மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?
முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை; முழுதும் கெட்டவனுக்குத் துக்கம் இல்லை.
முட்டாளுக்குக் கோபம் முக்கின் மேலே.
முதற் கோணம் முற்றும் கோணல்.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.
முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.
முள்ளின் மேலே சீலையைப் போட்டால் மெள்ள மெள்ள வாங்க வேண்டும்.
முழுப் பூச்சுணைக் காயைச் சோற்றில் வைத்து மறைக்க முடியுமா?
முழுதும் நனைந்தவளுக்கு முக்காடு வேண்டுமா?
முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்.
முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறமாம்.
யானைப் பசிக்குச் சோளப் பொரியா?
வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த திண்ணை வீடு மேல்.
வடித்த வட்டிச் சோற்றைப் பங்கிட்டாலும் தன் வாழ்க்கையைப் பங்கிடமாட்டாள் பெண்.
(வட்டி – கூடை) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
வளரும் காய் பிஞ்சிலே தெரியும்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
வளமுடன் வாழ இளமையிலே கல்.
வணங்கின புல் தழைக்கும்.
வாயில் இருக்கிறது வழி.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாய் வாழைப்பழம்; கை கருணைக் கிழங்கு.
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயிலேதான்.
வாழ்வு சில காலம்; தாழ்வு சில காலம்.
வாயு பாதி; வண்ணான் பாதி.
வாழ்வதோ வீழ்வதோ அவரவர் குணத்தாலே வாய்க்கிறது.
வித்துவான் அருமை, வித்துவான் அறியவேண்டும்.
விதை ஒன்று போடச் சுரை ஒன்று காய்க்குமா?
விரதம் கெட்டாலும் சுகம் தக்க வேண்டும்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
விளையாட்டே வினையாகும்.
விருந்தும் மருந்தும் மூன்று வேளை.
வீட்டுக்கு வாய்த்தது எருமை; மேட்டுக்கு வாய்த்தது போர்.
(போர் – வைக்கோற் போர்)
வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டாமா?
வெளுத்ததெல்லாம் பாலா?
வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?
வேலியே பயிரை மேய்ந்தால் தெய்வமே காவல்.
வைரத்தைக் கொண்டே வைரத்தை அறுக்க வேண்டும்.
வௌவாலுக்கு மரமே கதி; அதன் குஞ்சுக்கும் அதுவே கதி.
