மாதிரித் தேர்வு — முழுப் பாடத் தேர்வு — 50 வினாக்கள் | தமிழ் இலக்கணம்

Athiyaman Academy

நல்ல தமிழ் எழுதுவோம்

போட்டித் தேர்வுகளுக்கான இலக்கணக் கையேடு

TNPSCTETTNUSRBTRB

மாதிரித் தேர்வுமுழுப் பாடத் தேர்வு — 50 வினாக்கள்

அனைத்து அத்தியாயங்களையும் உள்ளடக்கிய தேர்வு. நேரம் 45 நிமிடம் வைத்துக்கொண்டு, புத்தகத்தைப் பார்க்காமல் முயலுங்கள். 40-க்கு மேல் சரியானால் இலக்கணப் பகுதியில் நீங்கள் தயார்.

பயிற்சி — மாதிரித் தேர்வு

  1. அறம் — பொருள்?
    (அ) இரும்புக் கருவி (ஆ) தருமம், நீதி (இ) வீரம் (ஈ) நதி
  2. மறம் — பொருள்?
    (அ) தாவரம் (ஆ) வீரம் (இ) மறதி (ஈ) தருமம்
  3. இறை — பொருள்?
    (அ) உணவு (ஆ) கடவுள், வரி (இ) அலை (ஈ) கரை
  4. புறம் — பொருள்?
    (அ) நகரம் (ஆ) வெளிப்பக்கம் (இ) உள்ளம் (ஈ) வீடு
  5. வளி — பொருள்?
    (அ) வேதனை (ஆ) காற்று (இ) பாதை (ஈ) வலிமை
  6. கழை — பொருள்?
    (அ) கல்வி (ஆ) களைச்செடி (இ) மூங்கில் (ஈ) இலை
  7. மூழை — பொருள்?
    (அ) கோணம் (ஆ) மூங்கில் (இ) அகப்பை (ஈ) காற்று
  8. ஆழி — பொருள் அல்லாதது?
    (அ) கடல் (ஆ) மோதிரம் (இ) சக்கரம் (ஈ) மலை
  9. உழை — பொருள்?
    (அ) கொல்லன் உலை (ஆ) குதிரை பிடரி மயிர் (இ) மான், உழைத்தல் (ஈ) அகப்பை
  10. காழ் — பொருள்?
    (அ) உறுப்பு (ஆ) வித்து, வைரம் (இ) கால்பங்கு (ஈ) மரம்
  11. நெட்டிலை — பிரித்து எழுதுக.
    (அ) நெடுமை + இலை (ஆ) நெட்டு + இலை (இ) நெடில் + ஐ (ஈ) நெட் + இலை
  12. கார்மேகம் — பிரித்து எழுதுக.
    (அ) கார் + மேகம் (ஆ) கருமை + மேகம் (இ) கரு + மேகம் (ஈ) காரி + மேகம்
  13. பொன் + தாமரை — சேர்த்து எழுதுக.
    (அ) பொன்தாமரை (ஆ) பொற்றாமரை (இ) பொன்னாமரை (ஈ) பொத்தாமரை
  14. முள் + கரண்டி — சேர்த்து எழுதுக.
    (அ) முள்கரண்டி (ஆ) முற்கரண்டி (இ) முட்கரண்டி (ஈ) முண்கரண்டி
  15. நாள் + காட்டி — சேர்த்து எழுதுக.
    (அ) நாள்காட்டி (ஆ) நாற்காட்டி (இ) நாட்காட்டி (ஈ) நாண்காட்டி
  16. கடல் + கரை — சேர்த்து எழுதுக.
    (அ) கடல்கரை (ஆ) கடற்கரை (இ) கடட்கரை (ஈ) கடன்கரை
  17. நான்கு + பத்து — சேர்ந்த வடிவம்?
    (அ) நான்பது (ஆ) நாற்பது (இ) நாலுபது (ஈ) நான்குபது
  18. ஆறு + பத்து — சேர்ந்த வடிவம்?
    (அ) ஆறுபது (ஆ) அறுபது (இ) ஆற்பது (ஈ) ஆறபது
  19. மரம் + வேர் → மரவேர் — எவ்வகை விகாரம்?
    (அ) தோன்றல் (ஆ) திரிதல் (இ) கெடுதல் (ஈ) இயல்பு
  20. பல் + பொடி → பற்பொடி — எவ்வகை விகாரம்?
    (அ) தோன்றல் (ஆ) திரிதல் (இ) கெடுதல் (ஈ) இயல்பு
  21. மரம் + கிளை → மரக்கிளை — எவ்வகை விகாரம்?
    (அ) தோன்றல் (ஆ) திரிதல் (இ) கெடுதல் (ஈ) இயல்பு
  22. இரட்டைக் கிளவி எது?
    (அ) வாவா (ஆ) நில் நில் (இ) பளபள (ஈ) போபோ
  23. நட — வினையாலணையும் பெயர் வடிவம்?
    (அ) நடந்த (ஆ) நடந்து (இ) நடந்தான் (ஈ) நடந்தவன்
  24. செல் — தொழிற்பெயர் வடிவம்?
    (அ) சென்ற (ஆ) செல்லுதல் (இ) சென்றவன் (ஈ) சென்று
  25. உண் — பிறவினை வடிவம்?
    (அ) உண்டான் (ஆ) உண்ணுதல் (இ) ஊட்டு (ஈ) உண்டு
  26. பயில் — பிறவினை வடிவம்?
    (அ) பயின்றான் (ஆ) பயிற்று (இ) பயிலுதல் (ஈ) பயின்று
  27. மாறு — பிறவினை வடிவம்?
    (அ) மாறினான் (ஆ) மாறுதல் (இ) மாற்று (ஈ) மாறிய
  28. நான் வந்த___ — சரியான விகுதி?
    (அ) ஆன் (ஆ) ஏன் (இ) ஆய் (ஈ) ஓம்
  29. மரங்கள் வளர்ந்த___ — சரியான விகுதி?
    (அ) ஆன் (ஆ) னர் (இ) ன (ஈ) ஆள்
  30. மாணவர்கள் வந்த___ — சரியான விகுதி?
    (அ) ஆன் (ஆ) னர் (இ) ன (ஈ) து
  31. ஒன்றன்பால் விகுதி எது?
    (அ) அன், ஆன் (ஆ) அள், ஆள் (இ) அர், ஆர் (ஈ) து, று
  32. மயில் — ஒலி மரபு?
    (அ) அகவும் (ஆ) கூவும் (இ) கரையும் (ஈ) பிளிறும்
  33. யானை — ஒலி மரபு?
    (அ) கனைக்கும் (ஆ) பிளிறும் (இ) உறுமும் (ஈ) முழங்கும்
  34. கழுதை — ஒலி மரபு?
    (அ) கனைக்கும் (ஆ) கத்தும் (இ) அகவும் (ஈ) கூவும்
  35. பார்ப்பு — எதன் இளமைப் பெயர்?
    (அ) ஆடு (ஆ) யானை (இ) பறவை (ஈ) புலி
  36. குருளை — எவற்றின் இளமைப் பெயர்?
    (அ) ஆடு, பசு (ஆ) புலி, சிங்கம், நரி (இ) நாய், குதிரை (ஈ) பறவை
  37. தென்னை — இலையின் மரபுப் பெயர்?
    (அ) இலை (ஆ) தாள் (இ) தோகை (ஈ) ஓலை
  38. சோளம் — இலையின் மரபுப் பெயர்?
    (அ) தோகை (ஆ) ஓலை (இ) இலை (ஈ) தாள்
  39. பூவின் நிலைகளின் சரியான வரிசை?
    (அ) அரும்பு–மலர்–போது–வீ (ஆ) அரும்பு–போது–மலர்–அலர் (இ) போது–அரும்பு–மலர்–வீ (ஈ) மலர்–அரும்பு–போது–செம்மல்
  40. செம்மல் — பொருள்?
    (அ) அரும்பு (ஆ) மலர்ந்தது (இ) உதிர்ந்தது (ஈ) வாடியது
  41. கல்லில் நார் உரித்தல் போல — பொருள்?
    (அ) எளிய செயல் (ஆ) முற்றிலும் இயலாத செயல் (இ) மிக அரிது (ஈ) இனிமை
  42. நீரில் எழுதிய எழுத்து போல — பொருள்?
    (அ) நிலையானது (ஆ) நிலையற்றது (இ) ஆழமானது (ஈ) தெளிவானது
  43. குருடர் யானை கண்டது போல — பொருள்?
    (அ) முழுமையாக அறிதல் (ஆ) ஒரு பகுதியை மட்டும் அறிதல் (இ) அச்சம் (ஈ) வியப்பு
  44. “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” — பொருந்தும் பழமொழி?
    (அ) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (ஆ) வருமுன் காப்பது அறிவு (இ) அடக்கம் ஆயிரம் பொன் தரும் (ஈ) ஆழம் தெரியாமல் காலை விடாதே
  45. அரைப்புள்ளி அமையும் முதன்மை இடம்?
    (அ) பல எழுவாய், ஒரு பயனிலை (ஆ) ஒரு எழுவாய், பல பயனிலை (இ) வினாத் தொடர் (ஈ) பிறர் கூற்று
  46. ற் — இதன் இன மெல்லினம்?
    (அ) ண் (ஆ) ந் (இ) ம் (ஈ) ன்
  47. இடையின எழுத்து அல்லாதது?
    (அ) ய் (ஆ) ழ் (இ) ள் (ஈ) ண்
  48. செந்தாமரை — எவ்வகைத் தொகை?
    (அ) வேற்றுமைத் தொகை (ஆ) பண்புத்தொகை (இ) வினைத்தொகை (ஈ) உவமைத்தொகை
  49. சுடுநீர் — எவ்வகைத் தொகை?
    (அ) பண்புத்தொகை (ஆ) உம்மைத்தொகை (இ) வினைத்தொகை (ஈ) அன்மொழித்தொகை
  50. முகநிலவு — எவ்வகை அணி?
    (அ) உவமை அணி (ஆ) உருவக அணி (இ) சிலேடை அணி (ஈ) தீவக அணி
▸ விடைகள் \x26amp; விளக்கம்
  1. ஆ — அரம் = கருவி; அறம் = தருமம்
  2. ஆ — மரம் = தாவரம்; மறம் = வீரம்
  3. ஆ — இரை = உணவு; இறை = கடவுள்/வரி
  4. ஆ — புரம் = நகரம்; புறம் = வெளி
  5. ஆ — வலி = வேதனை; வளி = காற்று; வழி = பாதை
  6. இ — கலை/களை/கழை
  7. இ — மூலை = கோணம்; மூழை = அகப்பை
  8. ஈ — ஆழி = கடல், மோதிரம், சக்கரம்
  9. இ — உலை/உளை/உழை
  10. ஆ — கால் = உறுப்பு; காழ் = வித்து
  11. அ — மை-விகுதி கெட்டு நெடு → நெட் திரிந்தது
  12. ஆ — கருமை → கார்
  13. ஆ — ன் → ற், த் → ற்
  14. இ — ள் → ட்
  15. இ — ள் → ட்
  16. ஆ — ல் → ற்
  17. ஆ — நான்கு → நாற்
  18. ஆ — ஆறு → அறு
  19. இ — ம் மறைந்தது ⇒ கெடுதல்
  20. ஆ — ல் → ற் ⇒ திரிதல்
  21. அ — க் புதிதாகத் தோன்றியது
  22. இ — பள தனியே பொருள் தராது
  23. ஈ — தனியே பெயராக நிற்கும்
  24. ஆ — தொழிலைப் பெயராகக் குறிப்பது
  25. இ — -ட்டு பிறவினை விகுதி
  26. ஆ — -ற்று பிறவினை விகுதி
  27. இ — -ற்று பிறவினை விகுதி
  28. ஆ — தன்மை ஒருமை ⇒ -ஏன்
  29. இ — பலவின்பால் ⇒ -அன
  30. ஆ — உயர்திணைப் பலர்பால் ⇒ -அனர்
  31. ஈ — து, று
  32. அ — மயில் அகவும்
  33. ஆ — யானை பிளிறும்
  34. ஆ — குதிரை கனைக்கும்; கழுதை கத்தும்
  35. இ — பறவையின் இளமைப் பெயர்
  36. ஆ — புலி, சிங்கம், நரி, கரடி
  37. ஈ — தென்னை, பனை ⇒ ஓலை
  38. அ — சோளம், கரும்பு ⇒ தோகை
  39. ஆ — அரும்பு–போது–மலர்–அலர்–வீ–செம்மல்
  40. ஈ — வாடிய நிலை
  41. ஆ — இயலாத செயல்
  42. ஆ — விரைந்து மறைவது
  43. ஆ — பகுதியை முழுமை எனக் கருதுதல்
  44. இ — பணிவின் பயன்
  45. ஆ — ஒரு எழுவாய் + பல பயனிலை
  46. ஈ — ற்–ன் இன இணை
  47. ஈ — ண் மெல்லினம்
  48. ஆ — சிவந்த (பண்பு) மறைந்தது
  49. இ — மூன்று காலத்திலும் பொருந்தும்
  50. ஆ — உவம உருபு இல்லை ⇒ உருவகம்
ATHIYAMAN ACADEMY

போட்டித் தேர்வுப் பயிற்சி & பதிப்பகம் · கோயம்புத்தூர்
வகுப்பு & தேர்வுத் தொகுதி: 9994359181 · athiyamanteam.com

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop