12th STD Public Exam Mark Reduced to 600 – 12th STD மொத்த மதிப்பெண் 600

12th STD மொத்த மதிப்பெண் 600 ஆக குறைப்பு 

12th Mark 600

+2 மொத்த மதிப்பெண் 1200-லிருந்து 600 ஆக குறைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், +2 மொத்த மதிப்பெண் 1200-லிருந்து 600 ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

மேலும், +1 மொத்த மதிப்பெண்ணும் 600 ஆக குறைக்கப்படுகிறது.

+ 1, + 2 ஆகிய இரு வகுப்புகளிலும் தலா 600 மதிப்பெண்கள் வீதம் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். இந்த மதிப்பெண் முறை இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்றார்.

உயர்கல்வி படிப்புக்கு +2 மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்த அமைச்சர், +1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ் இனி வழங்கப்பட மாட்டாது. பாடங்கள் கடினமாக இருப்பதாகவும், மன அழுத்தம் ஏற்படுவதாகவும் மாணவர்கள் கூறியதையடுத்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

மதிப்பெண் குறைக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

One thought on “12th STD Public Exam Mark Reduced to 600 – 12th STD மொத்த மதிப்பெண் 600

  1. Sir i am a commerce student i like to join in delhi sriram college (SRCC) does 11 th marks are included for that college please reply soon sir i am so upset about it

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us