6th Standard Tamil Book காணி நிலம் MCQ

Today’s Tamil Quiz: TNPSC Group Exam Preparation 2025

Tamil MCQs for TNPSC Group Exam Preparation

Group 4 New Syllabus Tamil 

Prepare for the TNPSC Group 4 Exam 2025 with this essential Tamil quiz. Enhance your vocabulary, grammar, and word combination skills to excel in the Tamil language section.

TNPSC Tamil Quiz: Vocabulary and Grammar Practice

Test your knowledge with this practice quiz for the TNPSC Group Exams 2025.

இயற்கை  – காணி நிலம்

  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
  • அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
  • எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
  • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
  • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார்.
  • பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  1. காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
  2. மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
  3. சித்தம் – உள்ளம் .

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் _________
a) ஏரி
b) கேணி
c) குளம்
d) ஆறு
விடை: b) கேணி

2. சித்தம் என்பதன் பொருள் _________
a) உள்ளம்
b) மணம்
c) குணம்
d) வனம்
விடை: a) உள்ளம்

3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _________
a) அடுக்குகள்
b) கூரை
c) சாளரம்
d) வாயில்
விடை: a) அடுக்குகள்

4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________
a) நன் + மாடங்கள்
b) நற் + மாடங்கள்
c) நன்மை + மாடங்கள்
d) நல் + மாடங்கள்
விடை: c) நன்மை + மாடங்கள்

5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________
a) நிலம் + இடையே
b) நிலத்தின் + இடையே
c) நிலத்து + இடையே
d) நிலத் + திடையே
விடை: b) நிலத்தின் + இடையே

6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
a) முத்துசுடர்
b) முச்சுடர்
c) முத்துடர்
d) முத்துச்சுடர்
விடை: d) முத்துச்சுடர்

7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
a) நிலாஒளி
b) நிலஒளி
c) நிலவொளி
d) நிலவுஒளி
விடை: c) நிலவொளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading