தமிழ்நாடு மின்சார வாரிய தேர்வு அறிவிப்பு 2021
கள உதவியாளர் (பயிற்சி) பணிநியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக 15.02.2021 முதல் 16.03.2021 வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் காண்க
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2,900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு அறிவிப்பு எண் 5/2020, 19.03.2020 அன்று வெளியிடப்பட்டு 24.03.2020 முதல் இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு விண்ணப்பம் பெறப்படும் தேதியானது மறுதேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அரசால் அறிவிக்கப்பட்ட தடைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் கள உதவியாளர் (பயிற்சி) பணிநியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக 15.02.2021 முதல் 16.03.2021 வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் காண்க.
ORDER TNPSC BOOKS:
JOIN TNEB ASSESSOR TEST SERIES- ONLINE EXAM
8681859181 OR 7299487694
அதேபோல், அறிவிப்பு எண் 03/2020, நாள் 08.01.2020 மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட 500 இளநிலை உதவியாளர்/கணக்கு பதவிக்கு 08.05.2021, 09.05.2021, 15.05.2021 மற்றும் 16.05.2021 ஆகிய நாட்களில் கணினி வழி தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையத்திலும், அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் பார்வையிடுட்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், அறிவிப்பு எண் 04/2020, நாள் 15.02.2020 மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி பொறியாளர்/மின்னியல் (400), உதவி பொறியாளர்/இயந்திரவியல் (125), உதவி பொறியாளர்/கட்டடவியல் (75) ஆகிய பதவிகளுக்கு 24.04.2021, 25.04.2021, 01.05.2021 மற்றும் 02.05.2021 ஆகிய நாட்களில் கணினி வழி தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையத்திலும், அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் பார்வையிடுட்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
