TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 12

TNPSC Group 4 & VAO Model Questions  வினா விடை தொகுப்பு-PART 12

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் 

பாமினி & விஜயநகர அரசுகள்  11th வரலாறு

Q1: கூற்று 1: இரண்டாம் தேவராயர் ஒரியர்களை சில போர்களில் தோற்கடித்தார்.
கூற்று 2: இப்போர்களின் மூலம் ஒரியாவின் பல பகுதிகள் விஜயநகர அரசுடன் இணைக்கப்பட்டன.

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
  4. கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

 

Q2: கஜபதியர்களிடமிருந்து விஜயநகரை காத்து, ஆந்திரக் கடற்கரை பகுதிகளை மீட்ட தளபதி சாளுவ நரசிம்மர் __________ஆண்டு அரசாட்சியை கைப்பற்றினார்.

  1. 1483
  2. 1484
  3. 1485
  4. 1486

 

Q3: கிருஷ்ணதேவராயர் தனது வெற்றித் தூணை நிறுவிய இடம்

  1. பீடார்
  2. குல்பர்கா
  3. சிம்மாச்சலம்
  4. விஜயநகர்

 

Q4: கூற்று 1: கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா (ஆண்டாளின் கதை) எனும் சமஸ்கிரு நூலை இயற்றியுள்ளார்.
கூற்று 2: அச்சுததேவராயர் நாயக் அல்லது நாயங்காரா முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
  4. கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

Q5: தலைக்கோட்டை போரில் விஜயநகரம் தோல்வியடைந்த பின் அரசர் சதாசிவராயரும் அவருடைய வீரர்களும் __________க்கு தப்பிச் சென்றனர்.

  1. சந்திரகிரி
  2. பெனுகொண்டா
  3. மங்களூர்
  4. பரகூர்

Q6: 1400இல் தமிழக பகுதிகளில் விஜயநகரை சேர்ந்த ___________ராஜ்யாக்கள் இருந்தன.

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

 

Q7: விஜயநகர அரசு ___________க்கும் மேற்பட்ட நாயக்குகளாக பிரிக்கப்பட்டிருந்ததாக நூனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

  1. 200
  2. 250
  3. 300
  4. 400

 

Q8: இராமேஸ்வரம் கோயில் ___________ என்பவரின் பாதுகாப்பின் கீழிருந்தது.

  1. நாயக்கர்கள்
  2. அறங்காவலர்கள்
  3. உடையான் சேதுபதி
  4. பாண்டியர்கள்

 

Q9: ஆந்திர கவி பிதாமகன் என அழைக்கப்படுபவர்

  1. கங்காதேவி
  2. அல்லசாணி பெத்தண்ணா
  3. தெனாலிராமன்
  4. திருமலம்மா

 

Q10: சாளுவ வம்சத்தை தோற்றுவித்தவர்

  1. நரசிம்மர்
  2. இரண்டாம் விருபாக்க்ஷர்
  3. நரச நாயக்கர்
  4. வீர நரசிம்மர்

 

 

 

 

Q11: கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றிய பாமினி சுல்தான்?

  1. அலாவுதீன் ஹசன் பாமன் ஷா
  2. முதலாம் முஹமது ஷா
  3. இரண்டாம் முகமது
  4. மூன்றாம் முகமது ஷா

 

Q12: ஹசன்சங்கு பாமினி என்பவரால் கி.பி. 1347ல் தோற்றுவிக்கப்பட்ட பாமினி அரசின் தலைநகரம் எது?

  1. ஹம்பி
  2. குல்பர்கா
  3. பீடார்
  4. தேவகிரி

 

Q13: ____ கோல்கொண்டா கோட்டையைக் புனரமைத்தார்.

  1. இராஜா கிருஷ்ண தேவ்
  2. சுல்தான் குலிகுதுப்சாஹி
  3. முகமது கவான்
  4. பாமன் ஷா

Q14: வடக்கு கர்நாடகாவில் ஜாபர்கான் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டு தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றிய ஆண்டு

  1. 1342
  2. 1343
  3. 1344
  4. 1345

 

Q15: கூற்று 1: ஆகாய நீல வண்ணத்திலுள்ள ரத்தினக்கற்கள் ஓரளவு விலை மதிப்புள்ள கற்களாகும்.
கூற்று 2: நீல வண்ண மாணிக்கக் கற்களினால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது என மனுசரிதம் என்னும் நூல் குறிப்பிடுகின்றது.

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
  4. கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

 

Q16: முதலாம் முகமதுவின் ஆட்சிக்கு பின் பாமினி அரசின் தலைநகரம் குல்பர்காவிலிருந்து ___________ ஆண்டு பீடாருக்கு மாற்றப்பட்டது.

  1. 1426
  2. 1427
  3. 1428
  4. 1429

 

Q17: கோல்கொண்டா கோட்டை சுல்தான் குலி குதப்ஷாவிற்கு ஜாகீராகத் தரப்பட்ட ஆண்டு

  1. 1492 – 1493
  2. 1493 – 1494
  3. 1494 – 1495
  4. 1495 – 1496

Q18: கோல்கொண்டா கோட்டையில் ___________ன் கல்லறை உள்ளது.

  1. ராஜா கிருஷ்ண தேவ்
  2. ஒளரங்கசீப்
  3. ஷாஜகான்
  4. குதுப்ஷாகி

 

Q19: கூற்று 1: விஜயநகர அரசின் தொடக்கத்தில் துங்கபத்திரை நதியின் வடக்குக் கரையில் அனகொண்டி அருகே தலைநகர் அமைந்திருந்தது.
கூற்று 2: விரைவில் துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா என்னும் இடத்திற்கு தலைநகர் மாற்றப்பட்டது.

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
  4. கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

 

Q20: விஜயநகர பேரரசில் ___________ ஆட்சியின் போது தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதியின் மீது கவனம் திரும்பியது.

  1. மாரையா நாயக்கர்
  2. முதலாம் புக்கர்
  3. இரண்டாம் புக்கர்
  4. மூன்றாம் புக்கர்

 

Q21: ஆந்திராவின் கடற்கரைப்பகுதிகளில் அதிகாரத்திற்கான போட்டி ஒரிசாவை சேர்ந்த ______________ அரசுக்கும் விஜயநகருக்குமிடையே நடைபெற்றது.

  1. காகத்திய அரசு
  2. ஹொய்சாள அரசு
  3. சோளங்கிகள் அரசு
  4. கஜபதி அரசு

 

Q22: இரண்டாம் தேவராயரின் இறப்புக்குப் பின்____________ ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் கஜபதி படைகள் விஜயநகரின் மீது பலமுறை தாக்குதல்களை மேற்கொண்டன.

  1. 1446 – 1450
  2. 1450 – 1455
  3. 1455 – 1460
  4. 1460 – 1465

 

Q23: மைசூருக்கு அருகே இருந்த கலக மனப்பான்மை கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனைத் தோற்கடித்துப் பணியச் செய்தவர்

  1. கிருஷ்ண தேவராயர்
  2. முதலாம் புக்கர்
  3. ஹரிஹரர்
  4. இரண்டாம் தேவராயர்

 

Q24: நாயக்க முறை யாருடைய ஆட்சியின் போது நிறுவன வடிவம் பெற்றது?
1.ஹரிஹரர்
2.இரண்டாம் தேவராயர்
3.கிருஷ்ணதேவராயர்
4.அச்சுததேவராயர்

  1. 1, 2
  2. 2, 3
  3. 1, 4
  4. 3, 4

 

Q25: இராமநாதபுரம் சிற்றரசு மதுரை நாயக்க அரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் ____________நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் துவக்கிவைக்கப்பட்டது.

  1. 15
  2. 16
  3. 17
  4. 18

 

Q26: பாண்டுரங்க மகாத்யம் என்ற நூலை எழுதியவர்

  1. கங்காதேவி
  2. அல்லசாணி பெத்தண்ணா
  3. தெனாலிராமன்
  4. திருமலம்மா

 

Q27: சாளுவ வம்சத்தின் கடைசி அரசர்

  1. இரண்டாம் விருபாக்க்ஷர்
  2. அச்சுத தேவராயர்
  3. ராமராஜா
  4. இம்மிடி நரசிம்மா

 

Q28: . பாமினி வம்சத்தில் இடம்பெற்ற அரசர்கள் எண்ணிக்கை

  1. 12
  2. 14
  3. 16
  4. 18

 

Q29: விஜயநகர பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?

  1. 6
  2. 7
  3. 9
  4. 13

 

Q30: ஷா நாமாவை எழுதியவர் _______

  1. பிர்தெளசி
  2. இபின் பதூதா
  3. நிக்கோலோ டி கோன்டி
  4. டோமிங்கோ பயஸ்

 

Q31: தன் அரசை சிறப்பாக ஆட்சி புரிவதற்கென தலைநகரை தேவகிரிக்கு மாற்றியவர்

  1. பால்பன்
  2. முகமது பின் காசிம்
  3. முகமது பின் காசிம் C. அலாவுதீன் கில்ஜி
  4. முகம்மது பின் துக்ளக்

Q32: தவறான இணையைத் தேர்ந்தெடு. (அயல்நாட்டுப் பயணிகள் – நாடு)

  1. இபன் பதூதா – மொராக்கோ
  2. அப்துர் ரசாக் – பாரசீகம்
  3. நிகிடின் – ரஷ்யா
  4. டோமிங்கோ பயஸ் – இத்தாலி

 

Q33: முதலாம் முகமது ____________ ஆண்டு வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.

  1. 1362
  2. 1363
  3. 1364
  4. 1365

 

Q34: கூற்று 1: முதலாம் முகமது வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
கூற்று 2: நிறுவன மற்றும் புவியியல் ரீதியில் முகமது ஷா ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே அவர் அரசுக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கியது.

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
  4. கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

Q35: கோல்கொண்டா கோட்டையை கட்டிய காகத்திய வம்ச அரசர்

  1. ராஜா ரனதேவ்
  2. குலிகுதப்ஷா
  3. பிரதாபருத்ரன்
  4. ராஜா கிருஷ்ண தேவ்

 

Q36: கோல்கொண்டா கோட்டையின் உயர்ந்த பகுதி______________ என்றழைக்கப்படுகிறது.

  1. பதேதர்வாசா
  2. தர்பார்வாசா
  3. பாலா ஹிசார்
  4. பதேதர்ஹிசா

 

Q37: ஹொய்சாள அரசரிடம் சில காலம் பணி செய்த ஹரிஹரர், புக்கர் ஆகியோர் தங்களை சுதந்திர அரசர்களாக நிலைநிறுத்திக் கொண்டு __________ ஆண்டு புதிய அரசுக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

  1. 1334
  2. 1336
  3. 1342
  4. 1346

 

Q38: பதிமூன்றாம் நூற்றாண்டின் பெரிய அரசுகளான தமிழ்நாட்டில் பாண்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஹொய்சாளர், ஆந்திர காகத்தியர் ஆகிய மூன்று அரசுகளும் பதினான்காம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ___________ படையெடுப்புகளால் அழிவுற்று பெரும் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

  1. விஜயநகர அரசு
  2. பாமினி அரசு
  3. சோழ அரசு
  4. தில்லி சுல்தானியம்

Q39: ____________ நதி விஜயநகர பாமினி அரசுகளை பிரிக்கும் எல்லைக் கோடாக அமைந்திருந்தது.

  1. கிருஷ்ணா
  2. கோதாவரி
  3. மகாநதி
  4. தபதி

 

Q40: இலங்கை அரசனிடமிருந்து கப்பம் பெற்ற விஜயநகர அரசர்

  1. கிருஷ்ண தேவராயர்
  2. முதலாம் புக்கர்
  3. ஹரிஹரர்
  4. இரண்டாம் தேவராயர்

 

Q41: நரச நாயக்கின் மூத்த மகனான வீரநரசிம்மர் துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்த ஆண்டு

  1. 1501
  2. 1503
  3. 1505
  4. 1508

 

Q42: கீழ்க்கண்ட எந்த இடங்களில் உள்ள சைவ வைணவக் கோயில்களுக்கு கிருஷ்ண தேவராயர் கொடையளித்தார்?
1.ஸ்ரீசைலம்
2.திருப்பதி
3.காளஹஸ்தி
4.காஞ்சிபுரம்
5.சிதம்பரம்

  1. அனைத்தும்
  2. 1, 2, 3, 4
  3. 2, 3, 4, 5
  4. 1, 2, 3, 6

 

Q43: அச்சுததேவராயர் மரணமடைந்த ஆண்டு_____________.

  1. 1539
  2. 1540
  3. 1541
  4. 1542

 

Q44: பொருத்துக.
1.முதலமைச்சர் i) மகாபிரதானி
2.தளவாய் ii) தளபதி
3.வாசல் iii) அரண்மனைப் பாதுகாவலர்
4.ராயசம் iv) செயலர்/கணக்கர்
5.அடைப்பம் v) தனி உதவியாளர்
6.காரிய கர்த்தா vi) செயல் முகவர்

  1. i ii iii iv v vi
  2. ii i iii v iv vi
  3. i ii iii v iv vi
  4. iv ii iii vi i v

 

Q45: . எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது

  1. சோழ மற்றும் விஜயநகர அரசுகள்
  2. சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
  3. சேர மற்றும் பாண்டிய அரசுகள்
  4. சோழ மற்றும் சேர அரசுகள்

 

Q46: வரதாம்பிகா பரிநயம் என்ற நூலை எழுதியவர்

  1. கங்காதேவி
  2. அல்லசாணி பெத்தண்ணா
  3. தெனாலிராமன்
  4. திருமலம்மா

 

Q47: சங்க வம்சத்தின் கடைசி அரசர்

  1. இரண்டாம் விருபாக்க்ஷர்
  2. அச்சுத தேவராயர்
  3. ராமராஜா
  4. இம்மிடி நரசிம்மா

 

Q48: விஜயநகர பேரரசில் ராஜ்யாவுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர்

  1. தளவாய்
  2. பிரதானி
  3. காரிய கர்த்தா
  4. ராயசம்

Q49: பின்வருவனவற்றை காலவரிசைப்படி அமைப்பை காண்க.

  1. தலைக்கோட்டைப் போர் – முதல் பானிபட் போர் – இரண்டாம் தரைன் போர்.
  2. இரண்டாம் தரைன் போர் – முதல் பானிபட் போர் – தலைக்கோட்டைப்போர்
  3. முதல் பானிபட் போர் – இரண்டாம் தரைன் பேர் – தலைக்கோட்டைப் போர்
  4. தலைக்கோட்டைப் போர் – இரண்டாம் தரைன் போர் – முதல் பானிபட் போர்

 

Q50: கி.பி. 1482ல் மூன்றாம் முகமது ஷா இறப்பிற்கு பிறகு பாமினி அரசு எத்தனையாக சிதறுண்டது?

  1. 3
  2. 4
  3. 5
  4. 6

 

Q51: கூற்று 1: விஜயநகர அரசில் இராணுவ சேவைக்கு பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை 1500 அல்லது அதற்குச் சற்று முன்னதாகவே தொடங்கிற்று.
கூற்று 2: கல்வெட்டுகள் இம்முறையைத் தமிழில் நாயக் கட்டணம் எனவும், நாயக்தானம் என மலையாலத்திலும், நாயன் கரமு என தெலுங்கிலும் குறிப்பிடுகின்றன.

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
  4. கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

 

Q52: சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
1.சிறந்த வீரரும் ராணுவ வல்லுநருமான ராமராஜர் பாமினி சுல்தான்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்யும் திறமை பெற்றிருந்தார்.
2.போர்த்துகீசியரோடு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் பீஜப்பூர் அரசருக்குக் குதிரைகள் அனுப்பப்படுவதை நிறுத்தினார்.
3.கோல்கொண்டா, அகமதுநகர் சுல்தான்களுக்கு எதிராக சில போர்களில் பீஜப்பூரோடு கைகோத்தார்.

  1. அனைத்தும் சரி
  2. 1, 2 சரி
  3. 2, 3 சரி
  4. 1, 3 சரி

 

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 2

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 3

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 5

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 6

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 10

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading