தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு

மதுரை சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது.

TNPSC GROUP 4 TAMIL BOOK

BUY Books For TNPSC Group 4 Exams

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

 

அதில், தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டில் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைதூர கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது  பொருத்தமாக இருக்காது.

தொலைதூர கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர் சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. டி.என்.பி.எஸ்.சி.யின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20% இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைதூர கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர். ஆகவே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும்.
தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைதூர கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, 1 முதல் 12-ம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டி.என்.பி.எஸ்சி. பணியிடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி அல்லது தொழில்துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும்.  1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. யில் தமிழ்வழியில் பயின்றதற்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிரவிட்டுள்ளது.
மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றவருக்கான போலி சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading