TNUSRB Police Constable Answer Key 2025
பகுதி- I
முதன்மை எழுத்துத் தேர்வு
பிரிவு – அ : பொது அறிவு
1. பொருத்துக.
I. குறைந்த பட்ச ஆதரவு விலை a. 2013
II. வேளாண் கொள்கை b. தனி நபர் வருமானம்
III. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் c. பொருளாதார நிலைத் தன்மை
IV. தாதாபாய் நௌரோஜி d. இந்திய உணவுக்கழகம்
I II III IV
(A) a d b C
(B) a b C d
(C) C a d b
(D) d C a b
2. சிங்கப்பூரில் நடைபெற்ற ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றவர் யார்?
(A) டி.குகேஷ்
(B) விஸ்வநாதன் ஆனந்த்
(C) சாய் கிஷோர்
(D) வைஷாலி
3. பொருத்துக.
I. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் a. திரௌபதி முர்மு
II. இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் b. இந்திரா காந்தி
III. இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர் c. பிரதீபா பாட்டீல்
IV. இந்தியாவின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் d. மீரா குமார்
I II III IV
(A) C d a b
(B) a b C d
(C) b C d a
(D) d a b C
4. திறந்த விதைத்தாவரம் எது ?
(A) ஆஞ்சியோஸ் பெர்ம்
(B) பிரையோஃபைட்டா
(C) ஜிம்னோஸ் பெர்ம்
(D) டெரிடோஃபைட்டா
5. இந்திய தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் எவ்வளவு ?
(A) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
(B) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
(C) 6 ஆண்டுகள் அல்லது 60 வயது வரை
(D) 5 ஆண்டுகள் அல்லது 60 வயது வரை
6. பொருத்துக.
I. வங்கப் பிரிவினை a. 1885
II. பெருங்கலகம் b. 1905
III. இந்திய தேசிய காங்கிரஸ் c. 1916
IV. லக்னோ ஒப்பந்தம் d. 1857
I II III IV
(A) b a C d
(B) b d a C
(C) d C b a
(D) a d C b
7. தவறான இணையைக் கண்டறிக.
(A) மின்கலம் – மின் ஆற்றலைச் சேமிக்கும் சாதனம்
(B) மின்சுற்று – மின்சாரம் பாயும் பாதை
(C) மின் உருகி – தாமிரம், எஃகு
(D) வோல்ட் – மின்னழுத்தத்தின் அலகு
8. வாக்கியம் – I : தாவரப் பகுதி இலையின் புறத்தோலின் மேல்புறம் உள்ள கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிபோக்கு நடைபெறுகிறது.
வாக்கியம் – II : இலைத்துளைகள் மூலம் வாயுபரிமாற்றம் நடைபெறும். O₂ உள்ளெடுக்கவும், CO₂ வெளிவிடவும் செய்கிறது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
9. சக்தி சமநிலையின் அடிப்படையில் இந்தியா எத்தனையாவது பெரிய தாரமாக மாறியுள்ளது ?
(A) மூன்றாவது
(B) நான்காவது
(C) ஐந்தாவது
(D) இரண்டாவது
10. தவறான இணையைக் கண்டறிக.
(A) உலகளாவிய வளம் – நீர்
(B) தனிநபர் வளம் – திமிங்கல புனுகு
(C) புதுப்பிக்கக் கூடிய வளம் – சூரிய ஒளி
(D) புதுப்பிக்க இயலாத வளம் – நிலக்கரி
11. ‘அரபிக் கடலின் ராணி’ என்று அழைக்கப்படும் துறைமுகம் எது ?
(A) கொச்சி
(B) நியுமங்களூர்
(C) மும்பை
(D) மர்மகோவா
12. வாக்கியம் -1 : இந்தியச் சுரங்கப் பணியகம் – நாக்பூர்.
வாக்கியம்-II : இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் – ஹைதராபாத்
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
13. பொருத்துக.
I. ஒளியிழைகள் a. படுகதிர், விலகுகதிர் படுபுள்ளி, வரையப்படும் குத்துக்கோடு ஒரே தளத்தில் அமையும்
II. வாகனங்களில் பின்னோக்கு கண்ணாடியாக b. முழு அக எதிரொளிப்பு
III. ஒளி விலகல் c. குழியாடி
IV. பல் மருத்துவர் பயன்படுத்துவது d. குவியாடி
I II III IV
(A) b d a C
(B) a b C d
(C) C a b d
(D) d C b a
14. எந்த பிரிவின் கீழ் சில வழக்குகளில் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை அறிவிக்க முடியும்?
(A) பிரிவு 14
(B) பிரிவு 22
(C) பிரிவு 23
(D) பிரிவு 25
15. 1863-ல் ஐசிஎஸ் (ICS) தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் யார்?
(A) இரபீந்திரநாத் தாகூர்
(B) தயானந்த சரஸ்வதி
(C) சத்தியேந்திரநாத் தாகூர்
(D) சுவாமி விவேகானந்தர்
16. பொருத்துக.
I. உத்தரகாண்ட் a. போரா குகைகள்
II. மத்திய பிரதேசம் b. குடும்சர் குகைகள்
III. சத்தீஸ்கர் c. பாண்டவர் குகைகள்
IV. ஆந்திரப் பிரதேசம் d. தப்கேஷ்வர் கோவில் மற்றும் ராபர்ட் குகை
I II III IV
(A) d C a b
(B) C b d a
(C) a d b C
(D) d C b a
17. ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் இடம் எது?
(A) ஜப்பான்
(B) சென்னை
(C) சீனா
(D) மும்பை
18. வாக்கியம் -1 : நாணயங்கள், சிலைகள் உருவாக்கும் வெண்கலம் என்ற காப்பர் கலவையில் இரும்பு உள்ளது.
வாக்கியம் -11 : அறிவியல் உபகரணங்கள் உருவாக்கும் மெக்னலியம் என்ற அலுமினிய கலவையில் இரும்பு உள்ளது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
19. தமிழ் நாட்டின் மாநிலப் பறவை எது?
(A) மயில்
(B) நெருப்புக்கோழி
(C) கழுகு
(D) மரகதப்புறா
20. பொருத்துக.
I. செயல்படும் எரிமலை a. ஃபியூஜி-ஜப்பான்
II. செயலிழந்த எரிமலை b. செயின்ட் ஹெலன்ஸ்-அமெரிக்கா
III. கூட்டு அல்லது அடுக்கு எரிமலை c. மௌனலோவா-ஹவாய்
IV. கேடய எரிமலை d. கிளிமஞ்சாரோ-தான்சானியா
I II III IV
(A) b d a C
(B) b d C a
(C) b C d a
(D) C d b a
21. பிக்நோமீட்டர் என்பது ஐ அளக்க பயன்படுகிறது.
(A) மின்தடை
(B) மின்னழுத்த வேறுபாடு
(C) வளிமண்டல அழுத்தம்
(D) ஒப்படர்த்தி
22. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது ?
(A) சென்னை
(B) மும்பை
(C) கொல்கத்தா
(D) புதுதில்லி
23. மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது?
(A) ஆக்சிஜன்
(B) அலுமினியம்
(C) போரான்
(D) கார்பன்
24. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்திய பெருநகரம் எது?
(A) மும்பை
(B) சென்னை
(C) புதுடில்லி
(D) கொல்கத்தா
25. தவறான இணையைக் கண்டறிக.
(A) இதுவரை கண்டறியபட்ட தனிமங்கள் – 118
(B) திரவ நிலையில் உள்ள உலோகம் பாதரசம்
(C) அலோகங்கள் – சல்பர், பாஸ்பரஸ்
(D) உலோகப் போலிகள் – காரீயம், தாமிரம்
26. வாக்கியம் -I : கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.
வாக்கியம் – II : பல்லவர்களின் காலத்தில் புத்த சமயம் செழித்தோங்கியது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
27. வாக்கியம் -I: நிதி ஆயோக் 2015 மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியது.
வாக்கியம் – II: இந்திய இரயில்வேயானது மிகக் குறைந்த அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
28. தவறான இணையைக் கண்டறிக.
(A) தமனி – வழங்கும் குழாய்கள்
(B) இரத்த சிவப்பணுக்கள் – எரித்ரோ சைட்டுகள்
(C) சிரை – பெறும் குழாய்கள்
(D) இரத்த தட்டுகள் – லியுக்கோசைட்டுகள்
29. விரைவாக பழங்களைப் பழுக்க வைக்கும் வாயு எது ?
(A) ஆக்ஸிஜன்
(B) ஹைட்ரஜன்
(C) நைட்ரஜன்
(D) எத்திலீன்
30. பொருத்துக.
I. வறண்ட காலநிலை a. அக்டோபர் முதல் டிசம்பர்
II. வெப்ப காலநிலை b. ஜனவரி முதல் மார்ச்
III. தென்மேற்கு பருவ மழைக் காலம் c. ஏப்ரல் முதல் மே
IV. வடகிழக்கு பருவ காலம் d. ஜூன் முதல் செப்டம்பர்
I II III IV
(A) b d C a
(B) b a d C
(C) b C d a
(D) C d a b
31. நாணயவியல்
(A) துப்பொறிப்புகள் பற்றிய படிப்பு
(B) கல்வெட்டியல்
(C) வானவியல்
(D) சோதிடவியல்
32. தவறான இணையைக் கண்டறிக.
(A) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 1986
(B) சட்ட அளவீட்டு சட்டம் – 2009
(C) அத்தியாவசிய பொருட்கள் சட்டம் – 1955
(D) பொருட்களின் சட்டம் – 1986
33. மீத்தேன் மூலக்கூறில் கார்பன் அணுவின் இணைதிறன் என்ன ?
(A) 4
(B) 6
(C) 2
(D) 8
34. ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய கதிர்கள் எவை ?
(A) ஆல்பா கதிர்கள்
(B) பீட்டா கதிர்கள்
(C) X கதிர்கள்
(D) காமா கதிர்கள்
35. பாலைவனங்களே இல்லாத கண்டம் எது ?
(A) ஐரோப்பா
(B) ஆசியா
(C) ஆப்பிரிக்கா
(D) வட அமெரிக்கா
36. வாக்கியம்-1: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்ளைகள் 1954 ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் கையெழுத்தானது.
வாக்கியம் – II : சார்க் நாடுகளின் கூட்டமைப்பு என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அமைப்பாகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
37. தவறான இணையைக் கண்டறிக.
(A) முதல் வட்ட மேசை மாநாடு -1932
(B) வரிகொடா இயக்கம் – 1922
(C) சைமன் குழு புறக்கணிப்பு – 1927
(D) ஒத்துழையாமை இயக்கம் – 1920
38. வாக்கியம் – I : CE : எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
வாக்கியம் – II : ISO : தங்கம் வெள்ளி ஆபரணங்களின் பரிசுத்தம் உட்பட்ட பல்வேறு பொருள்களின் தரத்தை உறுதி செய்கிறது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
39. பொருத்துக.
I. பொன்னுக்கு வீங்கி a. ரைனோவைரஸ்
II. சாதாரண சளி b. மிக்சோ வைரஸ் பரோடிடிஸ்
III. டைபாய்டு c. வாரிசெல்லா ஸோஸ்டர்
IV. சின்னம்மை d. சால்மோனெல்லா டைஃபி
I II III IV
(A) a C b d
(B) d a b C
(C) b a d C
(D) C b a d
40. போக்சோ சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
(A) 2011
(B) 2012
(C) 2013
(D) 2014
41. பொருத்துக.
I. மோலார் பருமன் a. 18
II. அவகாட்ரோ எண் b. 22400
III. நீரின் மூலக்கூறு நிறை c. 44
IV. கார்பன் டை ஆக்சைடின் மூலக்கூறு நிறை d. 6.023×10²³
I II III IV
(A) b d a C
(B) a b d C
(C) C a b d
(D) d b a C
42. தவறான இணையைக் கண்டறிக.
(A) சரக்கு மற்றும் சேவை வரி 01.07.2017
(B) நேர்முக வரி – சேவை வரி
(C) ஆடம் ஸ்மித் – வரி விதிப்புக் கொள்கை
(D) விற்பனை வரி – பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி
43. வாக்கியம் -1 : மின்முலாம் பூசுதல் – மின்னோட்டத்தின் வேதி விளைவு.
வாக்கியம் – II: மின்சலவைப்பெட்டி, நீர் சூடேற்றி – மின்னோட்டத்தின் காந்த விளைவு.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
44. வாக்கியம் -I : இந்தியாவின் முதல் ராக்கெட் தளம் ஸ்ரீஹரிகோட்டா-சதீஷ்தவானில் அமைக்கப்பட்டு உள்ளது.
வாக்கியம் – II : இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் தளம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
45. பொருத்துக.
I. முதல் மகளிர் பல்கலைக் கழகம் a. விஜயலட்சுமி பண்டிட்
II. முதல் பெண் மத்திய அமைச்சர் b. பச்சேந்திரி பால்
III. மக்களவையில் பதவி வகித்த முதல் பெண் சபாநாயகர் c. மகர்ஷிகார்வே
IV. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் d. மீரா குமார்
I II III IV
(A) a b d C
(B) C a d b
(C) a C b d
(D) d C a b
பிரிவு – ஆ : உளவியல்
46. x-அச்சு மற்றும் x-அச்சுக்கு இணையான நேர்க்கோடுகளின் சாய்வுக் கோணம் ___________ ஆகும்.
(A) 0°
(B) 60°
(C) 45°
(D) 90°
47.
பட்டதாரிகள் B
e h
f g
C
அரசு ஊழியர்கள்
எந்த சில பட்டதாரிகள் அலுவலர்கள் ஆனால் அரசு துறைகளில் வேலை செய்பவர்கள் அல்ல ?
(A) f
(B) g
(C) h
(D) c
48. மெய்யுணர்வு – ஆங்கிலத்தில் எழுதுக.
(A) Art Gallery
(B) Knowledge of Reality
(C) Patriotism
(D) Knowledge
49. பின்வருவனவற்றுள் எந்த ஒரு வரைபடம் கம்பி, மரம் மற்றும் கட்டுமானப் பொருட்களை சரியாகக் குறிப்பிடுகிறது ?
(A) (ஒரு படம்)
(B) (ஒரு படம்)
(C) (ஒரு படம்)
(D) (ஒரு படம்)
50. x இன் 30% என்பது 150 எனில் x-ன் மதிப்பு என்ன ?
(A) 500
(B) 400
(C) 600
(D) 550
51. கீழ்க்கண்ட இணைச் சொற்களுக்கு ஏற்ப தொடர்புடைய இணைச் சொல்லைக் கண்டறிக.
கார் : பெட்ரோல்
தொலைக்காட்சி : ?
(A) ஆன்டெனா
(B) கேளிக்கை
(C) மின்சாரம்
(D) ஒளித்திரை
52. கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து விடுபட்ட எண்ணைக் கண்டறிக.
(ஒரு படம்)
(A) 24
(B) 36
(C) 30
(D) 40
53. இரவு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(A) எல்
(B) மாலை
(C) மாளை
(D) காற்று
54. விடுபட்ட எண்ணை கண்டறிக ?
(ஒரு படம்)
(A) 190
(B) 255
(C) 221
(D) 236
55. கூற்று: இளைஞர்களிடையே அமைதியின்மைக்கு கல்வி நிறுவனங்கள் காரணமா ?
விவாதங்கள்:
I) ஆம். கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் இல்லை.
II) இல்லை. கல்வி நிறுவனக்களில் ஒழுக்கப் பிரச்சினை இல்லை.
(A) வாதம் I மற்றும் II இரண்டும் வலுவானது
(B) வாதம் I மட்டும் வலுவானது
(C) வாதம் II மட்டும் வலுவானது
(D) வாதம் I மற்றும் II இரண்டும் வலுவானதல்ல
56. 72-இன் அடுக்குக் குறியீடு
(A) 7²
(B) 2⁷
(C) 2² x 3³
(D) 2³ x 3²
57. வரைபடத்தை கவனமாக படித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கவும்.
குறிப்பு: ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு மாநிலம் பல்வேறு விளையாட்டுகளில் செலவு செய்ததை காண்பிக்கிறது.
(ஒரு படம்)
கேள்வி: கோல்ஃ விளையாட்டை விட எத்தனை சதவிகிதம் கூடுதலாக ஹாக்கிக்கு செலவிடப்பட்டது?
(A) 27%
(B) 35%
(C) 37.5%
(D) 75%
58. ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் ‘K’ மற்றும் ‘V’ இடையிலான எழுத்துக்களில் சரியாக நடுவில் அமைந்துள்ள எழுத்து என்ன ?
(A) N
(B) O
(C) Q
(D) எந்த எழுத்தும் இல்லை
59. தொடரில் உள்ள மரபுப்பிழை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டு கயல் கண்விழித்தாள்.
(A) சேவல் அகவும் சத்தம் கேட்டு கயல் கண்விழித்தாள்
(B) சேவல் கூவும் சத்தம் கேட்டு கயல் கண்விழித்தாள்
(C) சேவல் கத்தும் சத்தம் கேட்டு கயல் கண்விழித்தாள்
(D) சேவல் பாடும் சத்தம் கேட்டு கயல் கண்விழித்தாள்
60. பாலில் கால்சியம் இருப்பதால் அது வெண்மையாக உள்ளது. அரிசியும் வெண்மையானது. எனவே அரிசியிலும் கால்சியம் உள்ளது.
(A) தவறு
(B) ஒரு வேளை உண்மையாக இருக்கலாம்
(C) உண்மை
(D) செல்ல இயலாது
61. முற்றொருமையைப் பயன்படுத்தி 9k²-25-ஐ காரணிப்படுத்துக.
(A) (3k+5) (3k-5)
(B) (3k+5) (3k + 5)
(C) (5k+3) (5k-3)
(D) (3k-5) (3k-5)
62. ஒரு சங்கேத மொழியில் ‘FACT’ என்பது ‘IDFW’ என எழுதப்பட்டால், ‘SWAN’ என்பது எவ்வாறு எழுதப்படும் ?
(A) VXDQ
(B) VZDQ
(C) VZCP
(D) UXDQ
63. ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு துறைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் ஆண், பெண் சதவிகிதம்.
(ஒரு அட்டவணை)
கேள்வி : அனைத்து துறைகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை பணியாளர்கள் உள்ளனர் ?
(A) 3260
(B) 3310
(C) 3140
(D) 3020
64. நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு – ஆசாரக்கோவை
இதில் நன்றியறிதல் என்பதன் பொருள் என்ன ?
(A) நட்பை அறியாமை
(B) செய்நன்றி அறிதல்
(C) பிறர் செய்த உதவியை மறவாமை
(D) பிறர் செய்ததை மறத்தல்
65. நகரம் ‘A’ யிலிருந்து நகரம் ‘B’ செல்ல 4 வழித்தடங்கள் உள்ளன. நகரம் ‘B’ யிலிருந்து நகரம்’C’ செல்ல 6 வழித்தடங்கள் உள்ளன. நகரம் ‘A’ யிலிருந்து நகரம் ‘C’ செல்ல எத்தனை வழித்தடங்கள் இருக்க முடியும்?
(A) 24
(B) 12
(C) 10
(D) 8
66. சிறுவர்கள் வரிசையில் கோபி இடமிருந்து 7வது இடத்திலும், வெங்கட் வலமிருந்து 12வது இடத்திலும் உள்ளனர். அவர்கள் தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டால், கோபி இடமிருந்து 22வது இடத்துக்கு வருவார். வரிசையில் மொத்தம் எத்தனை சிறுவர்கள் உள்ளனர் ?
(A) 19
(B) 34
(C) 31
(D) 33
67. வரைபடத்தை நன்றாகப் படித்து கேள்விக்கு பதிலளிக்கவும். ஒரு நிறுவனத்தின் மொத்த செலவின் சதவிகிதம்.
(ஒரு படம்)
கேள்வி : உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட மொத்த செலவு, மற்றும் போக்குவரத்து மற்றும் வரிகளுக்காக செய்யப்பட்ட மொத்த செலவின் விகிதம் என்ன ?
(A) 5:4
(B) 8:7
(C) 9:7
(D) 13:11
68. மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு 42.195கி.மீ. ஆகும். இந்தத் தொலைவினை மீட்டரில் கூறுக.
(A) 4219.5
(B) 421.95
(C) 42195
(D) 4.2195
69. பின்வரும் எழுத்துக்களில் வலதுபுறத்தில் இருந்து 17வது எழுத்தின் வலதுபுறத்தில் 8வது எழுத்து எது ?
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
(A) R
(B) K
(C) S
(D) Q
70. கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து விடையளி.
நாம் வாழும் தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. எனவே நீர் சார்ந்த தன்னுணர்ச்சி தமிழக மக்களுக்கு மிகுதி. தாயைப் பழித்தாலும் தண்ணிரைப் பழிக்காதே என்பது சொல் வழக்கு. தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்பார் பேராசிரியர் தொ. பரமசிவன். அவர் குளித்தல் என்ற சொல்லைக் குறித்து கூறும் கருத்துகள் நமக்குப் புதிய சிந்தனையைத் தருகின்றன. குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினை தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள். சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலம் வெப்பமடைந்த உடலை குளிரவைத்தல் என்பதே அதன் பொருளாகும். குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று.
குளித்தல் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
(A) உடம்பினை தூய்மை செய்தல்
(B) அழுக்கு நீக்குதல்
(C) குளிர வைத்தல்
(D) குளிர்த்தல்
பகுதி – II
தமிழ் மொழி தகுதித் தேர்வு
71. ‘சிறுகதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவர்
(A) ப. சிங்காரம்
(B) கு. அழகிரிசாமி
(C) ஜெயகாந்தன்
(D) நாகூர் ரூமி
72. சோலை என்ற பொருள் தரும் சொல்
(A) கா
(B) தரளம்
(C) சுரிவளை
(D) வைப்பர்
73. ஒறுத்தாரை ஒன்றாக _______ பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
விடுபட்ட சீரைத் தேர்ந்தெடுக்க.
(A) வைப்பாரை
(B) வையாரே
(C) செய்தாரை
(D) பொறுத்தாரை
74. “ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி” இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல் எது ?
(A) விவேகசிந்தாமணி
(B) பரிபாடல்
(C) காசிக்காண்டம்
(D) முல்லைப்பாட்டு
75. மகளிர் என்பதற்கான இணைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
(A) சிறுமி
(B) தோழி
(C) பெண்
(D) முதியோர்
76. வாக்கியம் – I : என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.
வாக்கியம் – II : நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடரில் வல்லினம் மிகாது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
77. ‘வாசல் + அலங்காரம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
(A) வாசல்அலங்காரம்
(B) வாசலங்காரம்
(C) வாசலலங்காரம்
(D) வாசலிங்காரம்
78. வாக்கியம் -1 : முல்லைப்பாட்டு என்னும் நூலை இயற்றியவர் கீரந்தையார் ஆவார்.
வாக்கியம் – II : முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
79. வாக்கியம் – I : சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.
வாக்கியம் -II : வினைத் தொகையில் வல்லினம் மிகாது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
80. ‘அசைஇ’ என்பதன் இலக்கணக்குறிப்பு
(A) சொல்லிசை அளபெடை
(B) இன்னிசை அளபெடை
(C) இசைநிறை அளபெடை
(D) ஒற்றளபெடை
81. நிலையான வளர்ச்சி இலக்குகள் 5 (SDG -5) என்பது எதைக் குறிக்கிறது?
(A) பாலின அடையாளத்தை
(B) பாலினக் கடமைகளை
(C) பாலினச் சமத்துவத்தை
(D) பாலினப் படிமத்தை
82. தவறான இணையைக் கண்டறிக.
(A) வாழ்த்துக்கள் – வல்லினம் மிகும்
(B) பார்பார் – வல்லினம் மிகாது
(C) ஆட சொன்னார் – வல்லினம் மிகும்
(D) வந்த சிரிப்பு – வல்லினம் மிகாது
83. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(A) வணிகசாத்து
(B) வணிகம்சாத்து
(C) வணிகச்சாத்து
(D) வணிகத்துச் சாத்து
84. பொருத்துக.
I. தமிழ்நாட்டின் ஹாலந்து a. சேலம்
II. பின்னலாடை நகரம் b. ஏற்காடு
III. மாங்கனி நகரம் c. திண்டுக்கல்
IV. ஏழைகளின் ஊட்டி d. திருப்பூர்
I II III IV
(A) C a d b
(B) d C b a
(C) C d a b
(D) b C d a
85. “சட்டி உடைந்து போயிற்று” – எவ்வகைத் தொடர்?
(A) தன்வினை
(B) பிறவினை
(C) செய்வினை
(D) செயப்பாட்டு வினை
86. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
(A) பண்டமாற்று
(B) பண்டம்மாற்று
(C) பண்டம்மாற்று
(D) பண்டுமாற்று
87. பொருத்துக.
I. கழனி a. கதிரவன்
II. நிகர் b. மேகம்
III. பரிதி c. சமம்
IV. முகில் d. வயல்
I II III IV
(A) a C d b
(B) C d b a
(C) C b d a
(D) d C a b
88. ‘உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” -எனப்பாடிய சங்கப் புலவர் யார் ?
(A) மாங்குடி மருதனார்
(B) குடபுலவியனார்
(C) ஔவையார்
(D) பெருங்குன்றூர்க் கெளசிகனார்
89. வாக்கியம் -1 : தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களையும் 27 இயல்களையும் கொண்டது.
வாக்கியம் -II: தொல்காப்பியம் பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருக்கிறது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
90. ஒருமித்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(A) ஒன்றுபட்டு
(B) வேறுபட்டு
(C) உடன்பட்டு
(D) கட்டுப்பட்டு
91. தவறான இணையைக் கண்டறிக.
(A) மலைபடுகடாம் – பத்துப்பாட்டு
(B) மதுரைக்காஞ்சி – எட்டுத்தொகை
(C) சீவகசிந்தாமணி – ஐம்பெருங்காப்பியம்
(D) சூளாமணி – ஐஞ்சிறுகாப்பியம்
92. வாக்கியம் -I : முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
வாக்கியம் – II : மாலை சிறுபொழுதுகளுள் ஒன்று.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
93. தவறான இணையைக் கண்டறிக.
(A) வெண்பாவிற்கு – புகழேந்தி
(B) பரணிக்கு -ஜெயங்கொண்டான்
(C) கலம்பகத்திற்கு – இரட்டையர்கள்
(D) சந்தத்திற்கு – ஒட்டக்கூத்தன்
94. “தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தான்”- இவ்வுவமைத் தொடரை உருவகத் தொடராக மாற்றக் கிடைக்கும் தொடர்
(A) மொழித்தேனை பவளவாய் திறந்து படித்தாள்
(B) மொழித்தேனை வாய்ப்பவளம் திறந்து படித்தாள்
(C) தேன் போன்ற மொழியை வாய்ப்பவளம் திறந்து படித்தாள்
(D) மொழித்தேனை பவளம் போன்ற வாயால் திறந்து படித்தாள்
95. பொருத்துக.
I. குயில் a. கொக்கரிக்கும்
II. மயில் b. கரையும்
III. காகம் c. அகவும்
IV. கோழி d. கூவும்
I II III IV
(A) a b C d
(B) d C b a
(C) a C b d
(D) b a C d
96. வங்க மொழியில் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை இயற்றியவர் யார் ?
(A) தொல்காப்பியர்
(B) கால்டுவெல்
(C) இரபீந்திரநாத் தாகூர்
(D) வால்மீகி
97. தவறான இணையைக் கண்டறிக.
(A) எம்.எஸ். சுப்புலட்சுமி – மீரா திரைப்படம்
(B) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் – பூதான இயக்கம்
(C) பாலசரஸ்வதி – மகசேசே விருது
(D) சின்னப்பிள்ளை – ஔவை விருது
98. வாக்கியம் -1 : ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் ராஜம் கிருஷ்ணன்.
வாக்கியம் – II : ‘குறிஞ்சி மலர்’ என்னும் நூலை இயற்றியவர் நா. பார்த்தசாரதி.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
99. கேணி என்று குறிப்பிடப்படுவது
(A) தீ
(B) கிணறு
(C) குளம்
(D) ஆறு
100. தவறான இணையைக் கண்டறிக.
(A) ஓரறிவு – புல், மரம்
(B) மூவறிவு- கரையான், எறும்பு
(C) நான்கறிவு – நண்டு, தும்பி
(D) ஆறறிவு – பறவை, விலங்கு
101. “தென்னாட்டுச் சிங்கம்” என்று போற்றப்படுபவர்
(A) காமராசர்
(B) அறிஞர் அண்ணா
(C) இராஜாஜி
(D) முத்துராமலிங்கத் தேவர்
102. வைகை, பலகை, வேங்கை, மங்கை – பொருந்தாச் சொல் எது ?
(A) வைகை
(B) பலகை
(C) வேங்கை
(D) மங்கை
103. பொருத்துக.
I. பீலி a. சிறப்பு
II. ஊழி b. முறை
III. ஊழ் c. யுகம்
IV. பீடு d. அருமை
I II III IV
(A) d C b a
(B) d a b C
(C) d b a c
(D) d C a b
104. வாக்கியம் -1 : அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
வாக்கியம் – II : சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
105. பசுமை + கிளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(A) பசுமைக்கிளி
(B) பசுங்கிளி
(C) பசுமைகிளி
(D) பைங்கிளி
106. தவறான இணையைக் கண்டறிக.
(A) பல – சில
(B) உள்ளே – வெளியே
(C) எளிது – அரிது
(D) ஈதல் – கொடுத்தல்
107. தவறான இணையைக் கண்டறிக.
(A) சோறு – உண்
(B) தண்ணீர் – குடி
(C) பால் – பருகு
(D) பூ -பறி
108. வாக்கியம் – 1 : ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் செய்தித்தொடர் ஆகும்.
வாக்கியம் – II : ஒருவரிடம் ஒன்றை விளவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
109. பொருத்துக.
I. எம்.எஸ். சுப்புலட்சுமி a. சமூகப் போராளி
II. பாலசரஸ்வதி b. எழுத்தாளர்
III. ராஜம் கிருஷ்ணன் c. நடனக்கலைஞர்
IV. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் d. பாடல் கலைஞர்
I II III IV
(A) d a b C
(B) d C b a
(C) d b C a
(D) d a C b
110. வள்ளுவர் வாக்கின் படி, தீய செயலால் பொருள் சேர்ப்பது என்பது
(A) சல்லடையில், நீர்ப்பிடிப்பது போன்றது
(B) மூங்கில் கூடையில் நீர்ப்பிடிப்பது போன்றது
(C) வாளியில் நீரைச் சேமிப்பது போன்றது
(D) பசுமண் கலத்தில் நீரைச் சேமிப்பது போன்றது
111. வாக்கியம் -1 : வருமொழி, நிலைமொழியில் ஏதேனும் மாற்றங்கள் வருமாயின் அது இயல்புப் புணர்ச்சி.
வாக்கியம் – II : வருமொழி, நிலைமொழியில் மாற்றம் ஏதும் இல்லாமல் புணர்ந்தால் அது விகாரப்புணர்ச்சி.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
112. ‘நீருலையில்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) நீரு + உலையில்
(B) நீர் + இலையில்
(C) நீர் + உலையில்
(D) நீரு + இலையில்
113. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
(A) கர்நாடகம்
(B) கேரளா
(C) இலங்கை
(D) ஆந்திரா
114. வாக்கியம் – I வீரமாமுனிவர் இயற்றிய நூல் தொன்னூல் விளக்கம் ஆகும்.
வாக்கியம் – II: தேவநேயப் பாவாணர் இயற்றிய நூல் சொல்லாய்வுக் கட்டுரைகள் ஆகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
115. வாக்கியம் -1 : ‘பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே!’ -உணர்ச்சித் தொடர்
வாக்கியம் – II : உழவுத்தொழில் வாழ்க! – விழைவுத்தொடர்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
116. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
(A) ஆடு, அன்பு, இரக்கம், ஈதல், உயிர், ஊக்கம்
(B) அன்பு, இரக்கம், ஆடு, ஈதல், ஊக்கம், உயிர்
(C) அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிர், ஊக்கம்
(D) அன்பு, ஆடு, ஈதல், இரக்கம், உயிர், ஊக்கம்
117. பொருத்துக.
I. தன்மை ஒருமை a. நீ அல்லை
II. தன்மைப் பன்மை b. நான் அல்லேன்
III. முன்னிலை ஒருமை c. நீவிர் அல்லீர்
IV. முன்னிலைப் பன்மை d. நாம் அல்லோம்
I II III IV
(A) a C d b
(B) b d a C
(C) d a b C
(D) b a d c
118. ‘மற்றொன்று’ – எவ்வகைத் தொடர் என்பதைத் தேர்க.
(A) இடைச்சொல் தொடர்
(B) வினையெச்சத் தொடர்
(C) உரிச்சொல் தொடர்
(D) வேற்றுமைத் தொடர்
119. வாக்கியம் – I : வள்ளலிடம் பரிசு பெற்ற ஒருவர் பிறர் சென்று பரிசுபெற வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.
வாக்கியம் – II : மலைபடுகடாம் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
120. பொருத்துக.
I. பாவலர் மணி a. சுந்தரர்
II. தமிழ்த்தென்றல் b. பாரதியார்
III. தம்பிரான் தோழர் c. வாணிதாசன்
IV. செந்தமிழ்த் தேனீ d. திரு.வி.க.
I II III IV
(A) C a b d
(B) a C d b
(C) C d a b
(D) b a d c
121. ‘சனி நீராடு” என்று கூறியவர்
(A) ஔவையார்
(B) ஆண்டாள்
(C) நச்செள்ளையார்
(D) வெள்ளிவீதியார்
122. வல்லினம் மிகும் இடங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க.
(A) வாழ்த்துக்கள்
(B) எனக் கேட்டார்
(C) வாழ்கத் தமிழ்
(D) திருவளர்ச்செல்வன்
123. வாக்கியம் -I : செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
வாக்கியம் – II : செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
124. “உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” -இக்குறட்பாவில் பயின்று வரும் அணி
(A) உருவக அணி
(B) தீவக அணி
(C) ஏகதேச உருவக அணி
(D) எடுத்துக்காட்டு உவமை அணி
125. “யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்” – என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
(A) புறநானூறு
(B) திருக்குறள்
(C) நற்றிணை
(D) நல்வழி
126. பொருத்துக.
I. தோரணம் கட்டுக! a. மாடங்களில்
II. பூரணகும்பம் வைக்க! b. தங்கத் தூண்களில்
III. முத்துமாலை தொங்கவிடுக! c. மன்றங்களில்
IV. கொடிகள் கட்டுக! d. தெருக்களில்
I II III IV
(A) a C d b
(B) b C a d
(C) d a c b
(D) b a d c
127. அடிப்படையில் வேலைப்பங்கிடு என்பது பாலினச் சமத்துவமின்மையின் மைய அம்சமாகும்.
(A) கல்வி நிலையின்
(B) அரசியல் நிலையின்
(C) பொருளாதார நிலையின்
(D) பாலின பாகுபாட்டின்
128. வாக்கியம் -I : பெயரெச்சத்திலும் வினைத் தொகையிலும் வல்லினம் மிகாது.
வாக்கியம் – II : உவமைத் தொகையிலும் ஆறாம் வேற்றுமைத் தொகையிலும் வல்லினம் மிகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
129. எதுகை இடம்பெறாத இணை
(A) இரவு – இயற்கை
(B) வங்கம் -சங்கம்
(C) உலகு – புலவு
(D) அசைவு – இசைவு
130. வாக்கியம் -1 : ‘பரணிக்கோர் செயங்கொண்டார் ‘ என பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் செயங்கொண்டாரைப் புகழ்ந்துள்ளார்.
வாக்கியம் – II : செயங்கொண்டார் ஆலங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
131. ‘சமையல்’ என்ற சொல்லை உச்சரிக்கும் போது தேவைப்படும் மாத்திரை அளவு
(A) 1+1+1+½
(B) 1+2+1+½
(C) 1+2+2+2
(D) 1+1+2+2
132. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
(A) உழவு, ஆக்கம், ஊக்கம், அன்பு
(B) அன்பு, ஆக்கம், ஊக்கம், உழவு
(C) அன்பு, ஆக்கம், உழவு, ஊக்கம்
(D) ஆக்கம், அன்பு, உழவு, ஊக்கம்
133. தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது
(A) பெரிய புராணம்
(B) திருக்குறள்
(C) காலக்கணிதம்
(D) தேம்பாவணி
134. தவறான இணையைக் கண்டறிக.
(A) கபிலர் – மூதுரை
(B) சிவப்பிரகாசர் – நன்னெறி
(C) அதிவீரராம பாண்டியன் – வெற்றி வேற்கை
(D) சமணமுனிவர்கள் – நாலடியார்
135. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
(A) உவமானம்
(B) உவமேயம்
(C) உருவகம்
(D) உவமஉருபு
136. கருத்துப்பட ஓவியத்தை முதன்முதலில் பாரதியார் பயன்படுத்திய இதழ்
(A) இந்தியா
(B) சுதேசமித்திரன்
(C) தேசபக்தன்
(D) நவசக்தி
137. ‘இந்திய நூலகவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்
(A) அறிஞர் அண்ணா
(B) இரா. அரங்கநாதன்
(C) அண்ணல் அம்பேத்கர்
(D) ஜவஹர்லால் நேரு
138. பொருத்துக.
I. இயல்புப் புணர்ச்சி a. புலிப்பல்
II. தோன்றல் b. மரவேர்
III. திரிதல் c. வாழை மரம்
IV. கெடுதல் d. பற்பொடி
I II III IV
(A) c a d b
(B) c b d a
(C) c d a b
(D) c a d b
139. தவறான இணையைக் கண்டறிக.
(A) காருகர் – நெய்பவர்
(B) துகிர் – பட்டு
(C) சுண்ணம் – நறுமணப்பொடி
(D) கிழி – துணி
140. தவறான இணையைக் கண்டறிக.
(A) எளிது – அரிது
(B) ஈதல் – ஏற்றல்
(C) அந்நியர் – பகைவர்
(D) இரவலர் – புரவலர்
141. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டவர்
(A) பிரான்சிஸ் எல்லிஸ்
(B) ஸ்டென்கனோ
(C) எமினோ
(D) ராஸ்க்
142. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறையும் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு
(A) மனமகிழ்ச்சி
(B) தமிழ்த்தாய்
(C) விற்கொடி
(D) நாடகக்கலை
143. சரியான சொல்லைத் தேர்வு செய்க.
தின்னைப்பாய், திண்ணைப்பாய்
(A) தின்னைப்பாய்
(B) திண்ணைப்பாய்
(C) தின்னைப்பாய்
(D) திண்னைப்பாய்
144. வாக்கியம் -1 : குறுந்தொகை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
வாக்கியம் – II : இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
145. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான்” இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூலின் பெயர்
(A) சீவக சிந்தாமணி
(B) மணிமேகலை
(C) குண்டலகேசி
(D) சிலப்பதிகாரம்
146. “வங்கச் சிங்கம்” என்று போற்றப்படுபவர்
(A) விவேகானந்தர்
(B) விட்டல்பாய்
(C) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
(D) வல்லபாய் பட்டேல்
147. தவறான இணையைக் கண்டறிக.
(A) இது நாற்காலி – வினைப் பயனிலை
(B) என்னே அழகு! – உணர்ச்சித் தொடர்
(C) அப்பா சொன்னார் – செய்வினைத் தொடர்
(D) பூக்களைப் பறிக்காதீர் – கட்டளைத் தொடர்
148. பொருத்துக.
I. சாந்தம் a. சிறப்பு
II. தரணி b. இரக்கம்
III. கருணை c. உலகம்
IV. மகத்துவம் d. அமைதி
I II III IV
(A) d C b a
(B) a b d C
(C) b a C d
(D) a d C b
149. இந்தியாவை ‘மொழிகளின் காட்சிச் சாலை’ என்று குறிப்பிட்டவர்
(A) மாக்ஸ்முல்லர்
(B) தொ.பொ. மீனாட்சி சுந்தரம்
(C) கி.வா. ஜெகந்நாதன்
(D) ச.அகத்தியலிங்கம்
150. தவறான இணையைக் கண்டறிக.
(A) திருக்குறளின் மூலத்தை அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
(B) திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
(C) திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரம் – நட்பு
(D) திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு. போப்
TNUSRB PC Exam – Answer Key
Question Answer Question Answer Question Answer Question Answer
1 D 39 C 77 B 115 C
2 A 40 B 78 B 116 C
3 C 41 A 79 C 117 B
4 C 42 B 80 A 118 A
5 A 43 A 81 C 119 A
6 B 44 B 82 D 120 C
7 C 45 B 83 C 121 A
8 D 46 A 84 C 122 B
9 A 47 A 85 D 123 C
10 B 48 B 86 A 124 C
11 A 49 D 87 D 125 B
12 C 50 A 88 B 126 C
13 A 51 C 89 C 127 D
14 B 52 C 90 B 128 C
15 C 53 A 91 B 129 A
16 D 54 C 92 C 130 A
17 B 55 B 93 D 131 A
18 B 56 D 94 B 132 C
19 D 57 D 95 B 133 B
20 A 58 A 96 C 134 A
21 D 59 B 97 C 135 C
22 D 60 A 98 B 136 A
23 D 61 A 99 B 137 B
24 B 62 A 100 D 138 C
25 D 63 B 101 D 139 B
26 C 64 C 102 A 140 C
27 D 65 A 103 A 141 A
28 D 66 D 104 C 142 A
29 D 67 C 105 D 143 B
30 C 68 C 106 D 144 B
31 A 69 A 107 C 145 D
32 D 70 C 108 B 146 C
33 A 71 C 109 B 147 A
34 D 72 A 110 D 148 A
35 A 73 B 111 D 149 D
36 B 74 C 112 C 150 C
37 A 75 C 113 C
38 A 76 C 114 C
