Salient Features of Constitution in Tamil -அரசியலமைப்பின் சிறப்புகள் | Indian Polity in Tamil – 3
இந்தியா அரசியலமைப்பின் சிறப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரசியலமைப்பு – அரசியலமைப்புச் சட்டம்
ஒவ்வொரு அரசின் முக்கியமான உறுப்புகள் முன்று ஆகும். அவை
நிர்வாகத்துறை (Executive)
சட்டமியற்றும் முறை (Legislature)
நீதித்துறை (Judiciary).
அரசின் இம்மூன்று உறுப்புக்களின் செயல்பாடு மற்றும் அதன் விதிகளை பற்றித் தொகுத்து கூறும் சட்டமே அரசியலமைப்புச் சட்டம் ஆகும். ஒரு நாட்டின் அரசைத் தோற்றுவித்து, குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி, அவற்றை உறுதி செய்து, நிர்வாகம், சட்டமியற்றும்துறை, நீதித்துறை போன்ற உறுப்புகளின் அதிகாரங்களை வரையறுத்து உரைப்பதே அரசியலமைப்புச் சட்டமாகும். அரசியலமைப்பு, ஆட்சியின் அமைப்பு பற்றிக் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டம் அவ்வமைப்பின் உறுப்புகள் அவைகளின் பணிகள், அதிகாரங்கள், அவைகள் செயல்பட வேண்டிய முறைகள் பற்றிக் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டமே நாட்டின் அடிப்படைச் சட்டம். இதன் விதிகளை மீறுமாறு நாட்டின் வேறு எந்த சட்டமும் இயற்ற இயலாது
அரசியலமைப்பின் வகைகள்
அரசியலமைப்பின் அடிப்படையில் இரண்டு வகையாகவும், அரசின் அடிப்படையில் இரண்டு வகையாகவும் அரசியலமைப்பைப் பிரிக்கலாம். அரசியலமைப்பு அடிப்படையில், எழுதப்பெற்ற மற்றும் எழுதபெறாத அரசியலமைப்பு எனவும், நெகிழ்வற்ற மற்றும் நெகிழ்வுடைய அமைப்பு எனவும், அரசின் அடிப்படையில் கூட்டாட்சிமுறையுடையது மற்றும் ஒற்றையாட்சி முறையுடையது எனவும் பிரிக்கலாம்
- Preamble
- Lengthiest written constitution
- Drawn from various sources
- Blend of Rigidity and flexibility
- Federal system with unitary bias
- A Secular state
- Parliamentary form of government
- Fundamental rights
- Directive Principles of state policy
- Fundamental duties
- Synthesis of Parliamentary Sovereignty and Judicial Supremacy
- Integrated and Independent Judiciary
- Universal Adult Franchise
- Single Citizenship
- Independent Bodies
- Emergency provisions
- Three-Tier Government
உலகிலேயே எழுதப்பெற்ற மிகவும் நீளமான அரசியலமைப்பு
பாரளுமன்ற முறை
தனித்தன்மையுடன் நெகிழ்வற்ற மற்றும் நெகிழ்ச்சியுடைமை ஆகியவற்றின் கலப்பு
அரசை நெறிமுறைப்படுத்தும் கொள்கைகள்
சக்தி வாய்ந்த மைய அமைப்புடன் கூடிய கூட்டாட்சி
வாக்குரிமை
சுதந்திரமான நீதித்துறை
சமுதய சார்பற்ற அரசு
ஒற்றைக் குடியுரிமை
அடிப்படை உரிமைகள்
நீதித்துறையின் ஆய்வு அதிகாரம்


team I need a PDF in English for this salient features of our Indian constitution