வணக்கம்,
இனி அதியமான் குழுமத்தின் சார்பாக ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து வினாக்கள் அதற்கான விடைகள் அனைத்தும் தளத்திலும் காணொளியாகவும் பதிவேற்றம் செய்யப்படும் நீங்கள் athiyamanteam.com என்ற இணையதளம் வந்தும் Athiyaman Team Youtube தளத்திலும் இவற்றை தினமும் பார்த்து பயிற்சி பெறலாம். போட்டி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு நடக்கும் அனைத்து பொது தேர்வுகளுக்கும் (TNPSC Group 2, Group 2a, Group 4 VAO, TN TET, VAO, TNUSRB PC, TN SI) இவை பயன்படும். மேலும் அடுத்து வரக்கூடிய அனைத்து தேர்வுகளுக்கும் இந்த வினாக்களும் விடைகளும் பயன்படும்.
இந்த வினா விடைகள் அனைத்து பாடத்தில் இருந்தும் கேட்கப்படும்.
தமிழ், பொதுஅறிவு, அறிவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், இந்திய அரசியலமைப்பு. கணிதம் போன்ற பல்வேறு பாடங்களிலிருந்து இந்த வினாக்களும் விடைகளும் அமையும்.
தினசரி மாதிரி வினாக்கள் – முதல் பகுதி – தமிழ்
1. கார் அறுத்தான் என்பது இவ்வகை ஆகுபெயர் ?
2. பாஷாணம் எனும் வடமொழிச் சொல்லுக்கு உரிய தமிழ் சொல் எது ?
3. புனையம் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது ?
4. ஞான பச்சிலை என்று வள்ளலார் எதனை குறிப்பிடுகிறார் ?
5. இயல்பான ஒன்றை மிகவும் சிறப்பித்து கூறும் அணி எது ?
6. திண்ணம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன ?
7. சேவல் என்பதன் எதிர்பால் என்ன ?
8. தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவு பரிசு பெற்ற முதல் பாவலர் யார் ?
9. இந்த சங்கதியை மன்னனிடம் சொல் என்ற தொடரில் உள்ள பிற மொழிச் சொல்லை நீக்கி எழுதுக ?
10. இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் இது எவ்வகை தொடர் ?
விடைகள்
1.காலவாகு பெயர்
2.நஞ்சு
3.பிணையம்
4.தூதுவளை
5.உயர்வு நவிற்சி அணி
6.பொய்
7.பேடு
8.சுரதா
9.இந்த செய்தியை மன்னனிடம் சொல்
10.தனிநிலைத்தொடர்
இந்த பக்கத்தில் தேர்விற்கு தேவையான மாதிரி வினாக்கள் விடைகள் (TNPSC Model Questions, TNTET Model Question, Group 4 Model Questions, Group 2A Model Questions, Group 2 Model Questions, TN Police, TN SI, TNUSRB PC Model Questions) கொடுக்கப்பட்டுள்ளன. Tnpsc, TNTET, TN Police, TN SI, TN PC, குரூப் 4, Group 2a, விஏஓ போன்ற பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு பயன்படும்.
