03 August
நம்மை காக்கும் 48 திட்டம் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் விபத்து நடந்து 48 மணி மணிநேரத்தில் அவசர சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித்திட்டமாகும். இது 18.12.2021 அன்று மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்து நடந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான காலகட்டத்தில் முழுமையான சிகிச்சை வழங்க தேவையான நிதியினை வழங்குவதை உறுதி செய்வதாகும்.
