08 February
கரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை 722ஆக உயா்வு சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 722ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 34,546 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
