நிதி ஆயோக் SDG INDIA INDEX 2023-2024 REPORT

நிதி ஆயோக் SDG INDIA INDEX 2023-2024 REPORT

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டில் தமிழ்நாடு 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்த இலக்குகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மதிப்பெண், தேசிய சராசரியைவிட அதிகம் ஆகும். தேசிய சராசரி மதிப்பெண் 71-ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு 78 மதிப்பெண் பெற்றுள்ளது.

வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, ஆரோக்கியம், தரமான கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட 17 இலக்குகளை நிலையான வளர்ச்சிக் குறியீடாக ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

2023-24 நிதி ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. 0-49மதிப்பெண் (ஆசைப்படுபவர்), 50-64 மதிப்பெண் (முன்னேற செயல்பட்டுக் கொண்டிருப்பவர்), 65 -99மதிப்பெண் (முன்னிலை வகிப்பவர்), 100 மதிப்பெண் (சாதனையாளர்) என மாநிலங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

The SDG India Index 2023-24 scores for States range from 57 to 79, while for UTs they range between 65 and 77. This marks an improvement over the 2020-21 scores, where States ranged from 52 to 75, and UTs ranged from 62 to 79.
• Uttarakhand and Kerala lead as top States with scores of 79 each; Chandigarh maintains top spot among UTs with a score of 77.
• Tamil Nadu took the third spot followed by Goa and Himachal Pradesh.

இதில் 13 இலக்குகளில் தமிழ்நாடு முன்னிலை பிரிவில் உள்ளது. 11 இலக்குகளில் தமிழ்நாட்டின் மதிப்பெண் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.

2020-21 நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் மதிப்பெண் 74-ஆக இருந்தது. தற்போது அது 78-ஆக உயர்ந்துள்ளது. தேசிய சராசரி மதிப்பெண் 71-ஆக உள்ளது.

மலிவான மற்றும் சுத்தமான எரி ஆற்றல் இலக்கில் தமிழ்நாடு 100 மதிப்பெண் பெற்றுள்ளது. வறுமை ஒழிப்பில் 92 மதிப்பெண் பெற்று முன்னிலை வகிக்கிறது. வறுமை ஒழிப்பில் தேசிய சராசரி 72 ஆகும்.

பாலின பகுபாடு இலக்கில் 53 மதிப்பெண், நீர் வளம் இலக்கில் 61 மதிப்பெண் பெற்று ‘செயல்படுபவர்’ பிரிவில் தமிழ்நாடு உள்ளது. நிலையான நகரங்கள், நிலவளம் ஆகிய இரண்டு இலக்குகளில் தமிழ்நாடு தேசிய சராசரியைவிடவும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளது.

நிலையான நகரங்கள் இலக்கில் தேசிய சராசரி மதிப்பெண் 83 ஆகஉள்ள நிலையில் தமிழ்நாடு 81 மதிப்பெண்ணும், நில வளம் இலக்கில் தேசிய சராசரி மதிப்பெண் 75 ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு 72 மதிப்பெண்ணும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மகப்பேறு சமயத்தில் தாய்மார்களின் இறப்புவிகிதம் 1 லட்சத்துக்கு 54 ஆகவும்,5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000-க்கு 13 ஆகவும்உள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள வரம்புக்குள் உள்ளன.

கல்வியில் தமிழ்நாடு மிக மேம்பட்ட நிலையில் உள்ளது. உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரி57.6 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 81.5 சதவீதமாக உள்ளது. அதேபோல், கல்லூரி சேர்க்கையில் தேசிய சராசரி 28.4 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அது 47 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 81.87% குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றுள்ளன. அதேபோல், 92.8 சதவீத குடும்பங்களில் ஒருவரிடமாவது மொபைல் போன் உள்ளது.

வேலையின்மை விகிதம் 4.8 சதவீதமாகவும், 15 – 59 வயதுக்குட்பட்டவர்களில் வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 62.3 சதவீதமாகவும் உள்ளது.

NITI (இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம்) ஆயோக் 2023-24க்கான அதன் சமீபத்திய நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) இந்தியா குறியீட்டை வெளியிட்டுள்ளது , இது இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலையான வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது .

SDG இந்தியா இன்டெக்ஸ் என்றால் என்ன?
பற்றி: SDG இந்தியா இன்டெக்ஸ் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட SDG களை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் NITI ஆயோக் உருவாக்கிய ஒரு கருவியாகும் .

  • மதிப்பெண்கள் 0-100 வரை இருக்கும், அதிக மதிப்பெண்கள் SDG இலக்குகளை நோக்கி அதிக முன்னேற்றத்தைக் குறிக்கும்.
    • மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அவற்றின் SDG இந்தியா குறியீட்டு மதிப்பெண் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன: ஆர்வலர்: 0–49, செயல்திறன்: 50–64, முன்-ஓடுபவர்: 65–99, மற்றும் சாதனையாளர்: 100.
  • இந்தியாவில் திட்டக் கமிஷன் 2015 இல் NITI ஆயோக்கால் மாற்றப்பட்டது , ஒரு ‘கீழ்-மேல்’ அணுகுமுறை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் அளித்தது. 
  • NITI ஆயோக்கின் அமைப்பில் பிரதமரை தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் ஆளும் குழுவில் மற்றும் பிரதமரால் சிறப்பு அழைப்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்ட நிபுணர்கள் உள்ளனர்.
    • ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிரதமரால் நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி , இந்திய அரசாங்கத்தின் செயலாளர் பதவியை வகிக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading