TAMIL FREE TEST 14 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWERS
TAMIL FREE TEST 14
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
எரடு
A.இரண்டு
B.எட்டு
C.எட்டாயிரம்
D.நான்கு
2. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் கண்டறிக.
A.Volunteer – தன்னார்வலர்
B.Social Reformer – சமூகப் போராளி
C.Sentence – பதிவிறக்கம்
D.Missile – கடல் மைல்
3. “நீ படிக்கவில்லையா?” என்ற வினாவிற்கு “நான் எழுதுவேன்” என்று கூறுவது எவ்வகை விடை?
(A) நேர் விடை
(B) மறை விடை
(C) இனமொழி விடை
(D) சுட்டு விடை
4. “நீ படித்தாயா” என்று வினவியபோது “நீயே படி” என்று கூறுவது
(A) நேர் விடை
(B) ஏவல் விடை
(C) சுட்டு விடை
(D) உறுவது கூறல் விடை
5. உவமைகளால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால்”
என்னும் திருக்குறள் கூறும் உவமைப் பொருள்
(A) குன்றில் ஏறி யானைப் பார்ப்பது
(B) தன்கையில் பொருளை வைத்திருத்தல்
(C) குன்றில் ஏறி யானைப் போரைக் காண்பது
(D) தன்கையில் பொருள் கொண்டு ஒரு செயலைச் செய்வது
6. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று – திருக்குறள்
உவமை கூறும் பொருளைக் காண்க
(A) ஊரின் நடுவில் மரம் பழுத்து காணப்படுவது
(B) ஊரில் நடுவில் செல்வம் நிறைந்து காணப்படுவது
(C) ஊரில் நடுவில் நச்சு மரங்கள் நிறைந்து காணப்படுவது
(D) ஊரில் நடுவில் நச்சுமரம் பழுத்துக் காணப்படுவது
7. “அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
– உவமை கூறும் பொருளைக் கண்டறிக.
(A) எடுத்துக் கொள்ளுதல்
(B) வருத்திக் கொள்ளுதல்
(C) பொறுத்துக் கொள்ளுதல்
(D) ஏற்றுக் கொள்ளுதல்
8. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதா பாடம் படித்தாள்.
(A) பிறவினை
(B) செயப்பாட்டுவினை.
(C) தன்வினை
(D) செய்வினை
9. விடைக்கேற்ற வினா அமைக்க
ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர்
(A) யாரை உயர்திணை என்பர்?
(B) எது உயர்திணை எனப்படும்?
(C) உயர்திணையின் மறு பெயர் என்ன?
(D) உயர்திணையின் வகைகள் யாவை?
10. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்,
அகர வரிசை காண்க.
(A) அரிது, ஈதல், அந்நியர், இரவலர்
(B) அரிது, அந்நியர், ஈதல், இரவலர்
(C) அந்நியர், அரிது, இரவலர், ஈதல்
(D) அந்நியர், இரவலர், அரிது, ஈதல்
11. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
பணிந்து – பணித்து
(A) சோர்ந்து – பணிவு
(B) அடங்கி – கட்டளை
(C) எதிர்த்து – கூறுதல்
(D) பயந்து – செய்தான்
12. அகர வரிசையில் எழுதுக.
(A) பூனை, தையல், தேனீ, மான்
(B) தையல், தேனீ, மான், பூனை
(C) மான், தையல், பூனை, தேனீ.
(D) தேனீ, தையல்,பூனை, மான்
13. கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக.
(A) பழம், ஆசிரியர், மனிதன், மாணவன்
(B) ஆசிரியர், பழம், மாணவர், மனிதன்
(C) மாணவர், பழம், மனிதன், ஆசிரியர்
(D) ஆசிரியர், பழம், மனிதன், மாணவன்
14. நட- வேர்ச்சொல்லை வினைமுற்றாக தேர்ந்தெடு
(A) நடத்தல்
(B) நடந்தான்
(C) நடப்பவை
(D) நடப்பு
15. வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க “பொறு”
(A) பொறுத்த
(B) பொறுத்தல்
(C) பொறுத்தார்
(D) பொறுத்து
16. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க :
‘’கொடு”
(A) கொடுத்தான்
(B) கொடுத்தல்
(C) கொடுத்தவன்
(D) கொடுத்து
17. சாந்தம் என்பதன் எதிர்ச்சொல் எது? :
(A) அமைதி
(B) அன்பு
(C) கோபம்
(D) கருணை
18. ‘பீடு’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் தருக.
(A) சிறப்பு
(B) செறிந்து
(C) இழிவு
(D) இன்பம்
19. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……………………..
(A) மூச்சு + அடக்கி
(B) மூச் + அடக்கி
(C) மூச் + சடக்கி
(D) மூச்சை + அடக்கி
20.’செம்பயிர்’ பிரித்தெழுதுக.
(A) செம்மை + பயிர்
(B) செம் + பயிர்
(C) செமை + பயிர்
(D) செம்பு + பயிர்
21. சொல்லை பிரித்தெழுதுக.
பிரித்தெழுதுக
(A) பிரி + எழுதுக
(B) பிரித்து + எழுதுக
(C) பிரித்+ தெழுதுக
(D) பிரித்தெழு + துக
22. ஆங்கில. சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
(Crafts)
(A) கைவினைப் பொருள்கள்
(B) செயற்கைப் பொருள்கள்
(C) இயற்கைப் பொருள்கள்
(D) வெளிநாட்டுப் பொருள்கள்
23. கலைச் சொல்லை அறிக:
(WhatsApp)
(A) செயலி
(B) இணையம்
(C) முகநூல்
(D) புலனம்
24. சந்திப் பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(A) பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்
(B) பாலை குடித்துவிட்டு பள்ளிக்குப் புறப்பட்டாள்
(C) பாலை குடித்துவிட்டு பள்ளிக்கு புறப்பட்டாள்
(D) பாலைக் குடித்துவிட்டு பள்ளிக்கு புறப்பட்டாள்
25. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
(A) மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது
(B) மரத்தில் குயில் அலறிக் கொண்டிருந்தது
(C) மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது
(D) மரத்தில் குயில் கத்திக் கொண்டிருந்தது
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்