TAMIL FREE TEST 19 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWERS
TAMIL FREE TEST 19
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1. சரியான தொடரை தேர்ந்தெடு
(A) திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்
(B) உரை எழுதியவர் முதல் முதலில் திருக்குறளுக்கு மணக்குடவர்
(C) திருக்குறளுக்கு உரை எழுதியவர் மணக்குடவர் முதல் முதலில்
(D) மணக்குடவர் முதல் முதலில் உரை எழுதியவர் திருக்குறளுக்கு
2. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்தல்
(A) உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
(B) உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்
(C) உள்ளவரையிலும் உலகம் வாழட்டும் தமிழ்மொழி
(D) வாழட்டும் உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும்
3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
(A) குசேலபுரி சமஸ்தானம் பிரதானத்தொழில் உழவுதான்
(B) பிரதானத் தொழில் உழவுதான் குசேலபுரி சமஸ்தானத்துக்கு
(C) குசேலபுரி சமஸ்தானத்துக்கு உழவுதான் பிரதானத் தொழில்
(D) உழவுதான் தொழில் குசேலபுரி சமஸ்தானத்துக்குப் பிரதானம்
4. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க.
ஆடு
(A) ஆட்டுக் கூட்டம்
(B) ஆட்டு மந்தை
(C) ஆடுகள்
(D) ஆட்டுநிரை
5. சரியான கூட்டுப்பெயரைத் தெரிவு செய்க.
மாடு
(A) மாட்டு மந்தை
(B) மாட்டுக்கூட்டம்
(C) மாட்டுப் பண்ணை
(D) மாடுகள்
6. நிரல் நிறை அணி – இதில் நிறை என்பதன் பொருள் எது?
(A) வரிசைப்படுத்துதல்
(B) நிறுத்துதல்
(C) வைத்தல்
(D) அடுக்குதல்
7. எங்க நிக்கற? – இந்த பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக்கும் பொழுது எவ்வாறு அமையும்?
(A) எங்கு நிற்கிறது?
(B) எங்கே நிற்கிறாய் ?
(C) எங்கே நில்கிறாய்?
(D) எங்கு நில்குது?
8. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது எது?
(A)வேற்றுமை உருபு
(B) எழுவாய்
(C) உவம உருபு
(D) உரிச்சொல்
9. கலைச்சொற்களை அறிதல்
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க
(A) Classical Literature – பண்டைய இலக்கியம்
(B) Epic literature – செவ்விலக்கியம்
(C) Ancient literature – காப்பிய இலக்கியம்
(D) Regional literature – வட்டார இலக்கியம்
10. கலைச்சொற்களை அறிதல்
சரியான இணையைத் தேர்க
(A) Irrigation – லப்பகுதி
(B) Consulate – துணைத்தூதரகம்
(C) Territory — வணிகக்குழு
(D) Guild — பாசனம்
11. கூற்று, காரணம் – சரியா? தவறா?
(1) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது
(2) எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்
(3) எழுத்து மொழியில் உடல் மொழிக்கு வாய்ப்பு அதிகம்
(4) பேச்சு மொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்
(A) (1). (2. (4) சரி (3) தவறு
(B) (1). (2). (3) சரி (4) தவறு
(C) (1) தவறு (2), (3), (4) சரி
(D) (1), (3), (4) சரி (2) தவறு
12. கூற்று, காரணம் – சரியா? தவறா?
(1) ஒரு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்
(2) பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்
(3) பெயரெச்சம் மூன்று வகைப்படும்
(A) கூற்று – 1,2,3 தவறு
(B) கூற்று — 1,2 சரி, 3 தவறு
(C) கூற்று- 1,2,3 சரி
(D) கூற்று- 1 சரி,2,3 தவறு
13. கூற்று, காரணம் – சரியா? தவறா?
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
கூற்று :
(1) இப்பாடலை பாடியவர் பாரதிதாசன்
(11) இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்
(111) இவரின் இயற்பெயர் சுப்புரத்தினம்
(A) கூற்று- (i), (ii), (iii) தவறு
(B) கூற்று- (i), (ii) சரி, (iii) தவறு
(C) கூற்று- (i) சரி, (ii), (iii) தவறு
(D) கூற்று – (i), (ii), (iii) சரி
14 குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு
பனம் – பானம்
(A)அருமை – வானகம்
(B) பருமை – பானகம்
(C) செழுமை – கானகம்
(D) கருமை – பானகம்
15. குறில் நெடில் வேறுபாடு
கண் – காண்
(A)உறுப்பு – மலர்ச்சி
(B)உறுப்பு — காட்சி
(C) உறுப்பு – எழுச்சி
(D) உறுப்பு – பயிற்சி
16. இரு பொருள் தருக
களை – இருபொருள் தருக
(A) பயிருடன் வளரும் புல்பூண்டுகள், அழகு
(B) அழகு, போதல்
(C) முதன்மை, குற்றம்
(D) அச்சம், அயர்வு
17. இரு பொருள் தருக : ஆழி
(A) ஓடுதல், மேற்கூரை
(B) கடல், மோதிரம்
(C) சந்திரன், மாதம்
(D) நதி, எண்
18. இரு பொருள் தருக
படி
(A) குணம் – தகுதி
(B) படித்தல் – வீட்டின்படி
(C) பாட்டுபடித்தல் – எழுதுதல்
(D) கீற்று – கயிறு
19. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (வலசை போதல்)
(A) காடுகள் இடம்பெயர்தல் ………………. எனப்படும்
(B) பறவைகள் இடம் பெயர்தல் ……………எனப்படும்
(C) மனிதன் இடம் பெயர்தல் ………………. எனப்படும்
(D) விலங்குகள் இடம் பெயர்தல் ………………. எனப்படும்
20. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (கருப்பு).
(A) பாடகரின் முகம் வெட்கத்தில் ————— விட்டது
(B) வானத்தின் நிறம்…………………….
(C) அப்பாவிகளின் மனம் ………………….
(D) வெயிலில் அலையாதே; உடல் ………………விடும்
21. சரியான இணைப்புச் சொல்
உணவு வகைகளும் உணவு சமைக்கும் முறைகளும் மொழியில் நயம்படச்
சொல்லப்படும் மூறைமையைப் படித்து சுவைத்து ———— — ஈர்ப்புடன்
எழுதப்பழகுதல் – விடுபட்ட சரியான இணைப்புச் சொல்லைத் தேர்வு செய்க.
A.அதனால்
B.ஆகையால்
C.எனவே
D.அதுபோல
22. சரியான இணைப்புச் சொல் எழுதுக
குயிலுக்குக் கூடு கட்டத்தெரியாது; ……………………. காக்கையின் கூட்டில் முட்டையிடும்
A.ஆகையால்
B.அதுபோல
C.அதனால்
D.எனவே
23. சரியான இணைப்புச் சொல்
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும் ………………….துன்பப்பட நேரிடும்
A.எனவே
B.எனெனில்
C.இல்லையென்றால்
D.மேலும்
24. சரியான வினாச்சொல்லை தேர்ந்தெடு
நிலங்களை ………………… வகையாக பிரித்தனர்?
A.எப்படி?
B.என்ன?
C.எத்தனை?
D.எவ்வாறு?
25. சரியான வினாச் சொல்லை தேர்ந்தெடு
கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் …………………..
A.எப்படி?
B.யார்?
C.எவ்வாறு?
D.யாவை
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்


