TAMIL FREE TEST 23 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWERS
TAMIL FREE TEST 23
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
FAX
(A) தொலைநோக்கு இயந்திரம்
(B) தொலைநகல் கருவி
(C) தொலைநகல் இயந்திரம்
(D) தொலைநோக்கு கருவி
2. பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக
மாஸ்க்
(A) தலைக்கவசம்
(B) முகமூடி
(C) மூக்கு கவசம்
(D) முகக்கவசம்
3. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.
கோயம்புத்தூர்
(A) புத்தூர்
(B) கோவை
(C) கோவன்
(D) கோடை
4. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.
திருச்சிராப்பள்ளி
(A) திருப்பள்ளி
(B) திருவைப்பள்ளி
(C) திருச்சீர்
(D) திருச்சி
5.மரூஉவை எழுதுக.
‘கும்பகோணம்’
(A) மடந்தை
(B) குடந்தை
(C) சிந்தை
(D) கோயில் நகரம்
6.சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) அடடா எவ்வளவு சிற்பங்கள்.
(B) அடடா, எவ்வளவு சிற்பங்கள்.
(C) அட்டா? எவ்வளவு சிற்பங்கள்?
(D) அடடா ! எவ்வளவு சிற்பங்கள் !
7.நிறுத்தற்குறிகள் அறிதல் (எது சரியானது)
(A) சேரர்களின் பட்டப் பெயர்களில், கொல்லி, வெற்பன், மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை.
(B) சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை !
(C) சேரர்களின் பட்டப் பெயர்களில், கொல்லி வெற்பன் மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை?
(D) சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
8.பேச்சு வழக்கு, சொற்களை எழுத்து வழக்கு சொற்களாக மாற்றுக. சிரட்டையில் நீத்துபாகத்தை வடித்து நீட்டினான்
(A) கொட்டாங்குஞ்சியில் சோற்றை வடித்து நீட்டினான்
(B) சிரட்டையில் மேல்கஞ்சியை வடித்து நீட்டினான்
(C) அகப்பையில் நீத்துபாகத்தை வடித்து நீட்டினான்
(D) கரண்டியில் நீத்துபாகத்தை வடித்து நீட்டினான்.
9. எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக:
(A) சோலைக்குள் சத்தமில்லாமல் தென்றலு வீசியது.
(B) சோலைக்குள் சத்தமில்லாமல் தென்றல் வீசியது
(C) சோலைக்குள்ளே சத்தமில்லாமல் தென்றலு வீசியது
(D) சோலையிலே சத்தமில்லாமல் தென்றலு வீசியது
10. பொருத்தமான காலம் அமைத்தல் :
கபிலன் வேலை செய்தால் ஊதியம் பெறுவான்
(A) இறந்த காலம்
(B) நிகழ் காலம்
(C) எதிர் காலம்
(D) முக்காலம்
11. விண், கோல், மாலை, மீன் இச்சொற்களை இணைத்துப் பார்த்து சரியான சொல்லை தெரிவு செய்க.
(A) மீன்வெளி
(B) விண்மாலை
(C) விண்மீன்
(D) விண்கோல்
12. பொருத்தமான காலத்தை எடுத்து எழுதுக.
குமரன் மழையில் நனைந்தனன்
(A) இறந்த காலம்
(B) நிகழ் காலம்
(C) எதிர் காலம்
(D) கால வழு
13.உரைத்த – வேர்ச்சொல்லைத் தருக :
(A) உரை
(B) உரைத்து
(C) உரைந்து
(D) உறை
14.சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
கேலிச் சித்திரம் என்றால்
(A) யாவை
(B) என்ன
(C) ஏன்
(D) எப்படி
15.சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
முதல் ஆழ்வார்கள் -……………..பேர்?
(A) எங்கு
(B) எப்படி
(C) என்ன
(D) எத்தனை
16.சரியான இணைப்புச்சொல்லால் நிரப்புக.
குயிலுக்குக் கூடுகட்டத் தெரியாது……………. காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
(A)அதனால்
(B) ஏனெனில்
(C) அதுபோல்
(D) யாது
17. சரியான இணைப்புச்சொல்லால் நிரப்புக.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம்…………..மரங்கள் தான் மழைக்கு
அடிப்படை.
(A) எனவே
(B) ஆகையால்
(C) ஏனெனில்
(D) மேலும்
18. சரியான இணைப்புச் சொல்லை தேர்வு செய்க
உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன்……………… இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு வழங்கப் போகிறேன்.
(A) ஆகையால்
(B) ஏனெனில்
(C) அதுபோல
(D) அதனால்
19. அடைப்புக்குள் உள்ள கொழுந்து வகை குறித்த சொல்லைத் தகுந்த வாக்கியத்துடன் பொருத்துக.
(கொழுந்தாடை)
(A) பனையின் கொழுந்து
(B) கரும்பின் நுனிப்பகுதி
(C) புளியின் கொழுந்து
(D) வேம்பின் கொழுந்து
20.இலக்கணக் குறிப்பு தருக : கொள்க, குரைக்க
(A) வினைத்தொகை
(B) பண்புத்தொகை
(C) வியங்கோள் வினைமுற்று
(D) வினையெச்சம்
21. இரு பொருள் தருக
படி
(A) புத்தகம் – பாடுதல்
(B) படித்தல் – நூல்
(C) படிக்கட்டு – படித்தல்
(D) புத்தகம் – மாடிப்படி
22. பின்வரும் சொல்லுக்கு இருபொருள் தரும் சரியானவற்றை தெரிவு செய்க.
நகை
(A) சினம், நவமணிகள்
(B) வியப்பு, தங்கம்
(C) புன்னகை, ஆபரணம்
(D) மகிழ்ச்சி, வைரம்
23.இரு பொருள் தருக.
கூவல்
(A) நீர்நிலை, பள்ளம்
(B) துவாரம், மூங்கில்
(C) அமிழ், முழுகு
(D) சுங்கம், வரி
24. பொருள் வேறுபாடு அறிக
உழை – உளை
(A) சமைத்தல் – பிடரி மயிர்
(B) உழைப்பு – சேறு
(C) உலைக்களம் – கலைத்தல்
(D) உயிர் வாழ்தல் – கவலை
25. குறில் சொல்லை நெடில் சொல்லாக மாற்றி பொருள் வேறுபாடு வருமாறு ஒரே தொடரில் அமைத்து எழுதுக
மடு
(A) மடு-மேடு
மடுவானது மேட்டுப்பாங்கான நிலம் அருகில் இருந்தது
(B) மடு – மாடு
கழனி அருகே இருந்த மடுவில் மாடுகள் நீர் பருகின
(C) மடு -மூடு
ஓர் உழவன் சிறிது நேரம் மடுவை மூடப் பார்த்தான்
(D) மடு – மனு
கழனி அருகே இருந்த மடுவில் ஓர் மனிதன் நின்று கொண்டிருந்தான்
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்