TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 25 QTS – TAMIL FREE TEST 3
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – TAMIL PYQ- 25 QTS – TNPSC TAMIL OLD QUESTIONS
TAMIL FREE TEST 3
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
- செய்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க.
(A) பதவியை விட்டு நீங்கினான்
(B) உண்ணப்படும் தமிழ்த் தேனே.
(C) கருத்தைப் பதிவு செய்தான்
(D) கருத்துப்பதிவு செய்யப்பட்டது.
2.“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்”இவ்வடிகளில் அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு
(A) பண்புத் தொகை
(B) வேற்றுமைத் தொகை
(C) வினைத் தொகை
(D) உவமைத் தொகை
- பகைகொளல் – இலக்கணக் குறிப்பு தருக
(A) தொழிற்பெயர்
(B) இரண்டாம் வேற்றுமைத் தொகை
(C) ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(D) பண்புத்தொகை
- அறுகோணம் – எவ்வகை பெயர்ச்சொல் ?
(A) வடிவ பண்புப்பெயர்
(B) நிற பண்புப்பெயர்
(C) அளவு பண்புப்பெயர்
(D) சுவை பண்புப்பெயர்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
(A) குடநாடு நாடு சேரர்களின் எனப்பட்டது.
(B) சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.
(C) நாடு எனப்பட்டது சேரர்களின் குடநாடு.
(D) சேரர்களின் குடநாடு நாடு எனப்பட்டது.
- சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
(A) உழவு, மண், ஏர், மாடு
(B) மண், மாடு, ஏர், உழவு
(C) உழவு, ஏர், மண், மாடு
(D) ஏர், உழவு, மாடு, மண்
- கீழ்க்கண்ட வேர்ச்சொல்லிலிருந்து தொழிற்பெயரை உருவாக்குக.
வாழ்
(A) வாழ்ந்த
(B) வாழ்ந்தான்
(C) வாழ்ந்து
(D) வாழ்க்கை
8.’உலகம்’ என்னும் தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
(A) உலகு
(B) உலவு
(C) உளது
(D) உளவு
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
வானம் – வாணம்
(A) ஆகாயம் – குரங்கு
(B) கானம் – வானளரகம்
(C) வண்மை – விரும்பு
(D) ஆகாயம் – வெடி
10.‘Conviction’ என்னும் சொல்லின் தமிழ்ச் சொல்.
(A) தண்டனை
(B) குற்றம்
(C) வழக்கு
(D) தீர்ப்பு
- மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
நேற்று தென்றல் காற்று அடித்தது.
(A) காற்று பறந்தது
(B) காற்று வீசியது
(C) காற்று ஓய்ந்தது
(D) காற்று சுழன்றது
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) கலிப்பா
(B) வஞ்சிப் பா
(C) காஞ்சிப் பா
(D) வெண்பா
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) மூடுபனி – வினைத்தொகை
(B) வெந்து – வினையெச்சம்
(C) தடவரை – உரிச்சொல் தொடர்
(D) மூதூர் – தொழிற்பெயர்
- மற்றொன்று – என்ற சொல்லைப் பிரித்து, “நிலை மொழி” எவ்வகைத் தொடர் என்பதைச் சுட்டுக.
(A) உரிச்சொல் தொடர்
(B) இடைச்சொல் தொடர்
(C) எழுவாய்த் தொடர்
(D) பெயரெச்சத் தொடர்
- கார்காலம் என்பது
(A) மாசி, பங்குனி
(B) மார்கழி, தை
(C) ஆவணி, புரட்டாசி
(D) சித்திரை, வைகாசி
16.நாகபஞ்சமி கதை – அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
(A) யசோதர காவியம்
(B) சூளாமணி
(C) நாக குமார காவியம்
(D) உதயண குமார காவியம்
- பொருத்துக
(a) சிலம்பு (1) இடையில் அணிவது
(b) குழை (2) நெற்றியில் அணிவது
(c) சுட்டி (3) காலில் அணிவது
(d) அரைநாண் (4) காதில் அணிவது
(A) 4 3 1 2
(B) 3 4 2 1
(C) 1 2 3 4
(D) 4 2 1 3
- பொருத்துக.
(A) பாரதி நாளை வருவான் (1) செய்வினைத் தொடர்
(B) எவ்வளவு உயரமான கோபுரம்! (2) செய்தித் தொடர்
(C) கவிதா உரை படித்தாள் (3) தன்வினைத் தொடர்
(D) என் அண்ணன் நேற்று வந்தான் (4) உணர்ச்சித் தொடர்
(A) 2 4 1 3
(B) 2 4 3 1
(C) 3 1 2 4
(D) 4 2 3 1
- வினாவைக் கண்டறிக.
கடைக்காரரிடம் கடையில் தக்காளி உள்ளதா? என வினவுதல்
(A) கொளல் வினா
(B) கொடை வினா
(C) ஏவல் வினா
(D) அறியா வினா
- வட்டம்’ – இப்பெயர்ச் சொல்லின் வகையினைக் கண்டறிக.
(A) காலப் பெயர்
(B) தொழில் பெயர்
(C) பொருள் பெயர்
(D) பண்புப் பெயர்
- சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
(A) வெந்து, கூத்தர், வயரியம், கடும்பு, வேவை
(B) கடும்பு, கூத்தர், வயரியம், வெந்து, வேவை
(C) வேவை, வயரியம், கடும்பு, வெந்து, கத்தர்
(D) கடும்பு, கூத்தர், வெந்து, வயரியம், வேவை
- ‘வை!’ என்னும் ஓரெழுத்து சொல்லின் பொருள்
(A) நெல்
(B) புல்
(C) கல்
(D) வில்
- சரியான எதிர்மறைச் சொல்லால் நிரப்புக.
மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள்
(A) மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் அல்லள்
(B) மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் அல்லாள்
(C) மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் அல்லீள்
(D) மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் அல்லோள்
- ‘விசனம்’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் யாது?
(A) கவலை
(B) துன்பம்
(C) மகிழ்ச்சி
(D) அன்பு
- ஒருமொழியில் பொருள் உணர்த்தும் மிகச்சிறிய கூறு
(A) ஒலியன்
(B) உருபன்
(C) முற்றொலி
(D) மயங்கொலி
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்