TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 25 QTS – TAMIL FREE TEST 4
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – TAMIL PYQ- 25 QTS – TNPSC TAMIL OLD QUESTIONS
TAMIL FREE TEST 4
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1.கபிலரை நல்லிசைக் கபிலன் என குறிப்பிட்டவர்
(A) பெருங்குன்றாூர்க்கிழார் (B) இளங்கீரனார்
(C) நக்கீரர் (D) மாறோக்கத்து நப்பசலையார்
2. பா வகை கண்டறிக.
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
(A) நிலைமண்டில ஆசிரியப்பா (B) ஆசிரியப்பா
(C) சிந்தடி வஞ்சிப்பா (D) குறளடி வஞ்சிப்பா
3. கம்பராமாயணம், கிஷ்கிந்தா காண்டத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?
(A) 16 (B) 11 (C) 12 (D) 22
4.“அனுமனையும் உலகம் ஆண் எனக்கூறும். ஆதலின், இவ்வுருத்தீண்டல் கூடுமோ”யார் யாரிடம் கூறியது?
(A) இராமன் சீதையிடம் கூறியது (B) சீதை இராமனிடம் கூறியது
(C ) இலக்குவன் அனுமனிடம் கூறியது (D) சீதை அனுமனிடம் கூறியது
5.“அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” – என்று
பாராட்டியவர்.
(A) ஒளவையார் (B) பாரதியார்
(C ) பாரதிதாசன் (D) ஒட்டக்கூத்தர்
6. எந்நூலின் செய்யுளின் முதலடி “ஆர்கவி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று
தொடங்குகிறது ?
(A) ஆசாரக்கோவை (B) முதுமொழிக் காஞ்சி
(C) பழமொழி (D) சிறுபஞ்சமூலம்
7. கூற்று 1: யாப்பருங்கலக்காரிகை, உறுப்பு, செய்யுள், ஒழிபு என்னும் மூன்று
இயல்களால் ஆனது.
கூற்று 2 : இந்நூல், வடமொழியில் எழுதப்பட்ட காவ்ய தரிசனம்’ என்னும்
நூலைத் தழுவி எழுதப்பட்டது.
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C ) கூற்று 1 மட்டும் சரி, கூற்று 2 தவறு
(D) கூற்று இரண்டும் சரி
8. பொருத்துக.
(a) ஒண்பொருள் காழ்ப்ப (1) தீதின்றி வந்த பொருள்
வியற்றியார்க் கெண்பொருள்
(b) செய்க பொருளைச் செறுநர் (2) புல்லார் புரள விடல்
செருக்கறுக்கும்
(C) அறனீனு மின்பமு மீனுந் (3) ஏனை யிரண்டு மொருங்கு
திறனறிந்து
(D) அருளோடு மன்பொடும் (4) எஃகதனிற் கூறிய தில்
வாராப் பொருளாக்கம்
(A) 1 3 4 2
(B) 2 4 3 1
(C) 3 4 1 2
(D) 4 1 3 2
9. தமிழில் தோன்றிய முதல் அகராதியின் பெயர்.
(A) கழக அகராதி (B) அகர முதலி
(C ) காலின்ஸ் அகராதி (D) சதுரகராதி
10. “கத்தும் பேரிகைச் சத்தம் புடைக்கும்
கவிப்பு வேலை ஒலிப்பைத் துடைக்கும்”.
முக்கூடற்பள்ளுவில் உள்ள இப்பாடலடிகளில் கவிப்பு வேலை என்பது………….. குறிக்கும்.
(A) தையல், உழவு, சிற்பம்
(B) கருமார், கொல்லர், தட்டார்
(C) ஓவியர், நெசவாளர், மீன் விற்போர்
(D) உப்பு விற்போர், கொல்லர், பாத்திரம் விற்போர்
11. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;”
— அடிமோனையை எழுது
(A) உண்டி, உயிர் (B) உண்டி, உணவு
(C) உண்டி, பிண்டம் (D) உண்டி, உண்டி
12. பிழையைக் கண்டறிதல்.
(A) எருது வண்டி இழுத்தன (B) எருது வண்டியை இழுத்தது
(C) எருது வண்டிகள் இழுத்தது (D) எருது வண்டிகளை இழுத்தது
13. அடிகள்தோறும் இறுதிச் சீரோ எழுத்தோ இயைந்து ஒன்றிவரத் தொடுப்பது
(A) இயைபு அளபெடை (B) இயைபுத் தொடை
(C) இயைபு முரண் (D) இயைபு சீர்த்தொடை முரண்
14. பின்வரும் மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
கல்லில் நார் உரித்தல்
(A) ஆராய்ந்து பாராமல் செய்தல் (B) இல்லாத செயல்
(C) விரைந்து செய்தல் (D) நன்கு பழகி அறிதல்
15. கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக – பயின்று வரும் மோனை வகை
(A) பொழிப்பு மோனை (B) முற்று
(C) கூழை (D) மேற்கதுவாய்
16. இலக்கணக் குறிப்புத் தருக.
விதையாமை, உரையாமை
(A) வினையாலணையும் பெயர்கள் (B) எதிர்மறைத் தொழிற் பெயர்கள்
(C) எண்ணும்மைகள் (D) வினைமுற்றுகள்
17. ‘குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா’ இப்பழமொழி உணர்த்துவது
(A) வீரம் (B) வெற்றி
(C ) சோம்பல் (D) வறுமை
18. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளை அறிந்து பொருத்துக.
(A) ஆ 1.அரசன்
(B) து 2.பசு
(C) கோ 3.தலைவன்
(D) பசு 4. உண்
(A) 2 1 3 4
(B) 1 3 4 2
(C) 2 4 1 3
(D) 3 4 1 2
19. பொருள் தருக.
கான் நடை
(A) காட்டை அடைதல்
(B) காட்டைச் சேர்தல்
(C ) காட்டுக்கு நடத்தல்
(D) கால்நடையாகக் காட்டுக்குச் செல்லுதல்
20. வழுநிலைகளைப் பொருத்துக.
(a) செழியன் வந்தது (1) இடம்
(B) கண்ணகி உண்டான் (2) காலம்
(C) நீ வந்தேன் (3) பால்
(D) நேற்று வருவான் (4) திணை
(A) 1 2 3 4
(B) 4 3 1 2
(C) 4 1 2 8
(D) 3 1 2 4
21. பொருந்துக
(a) இளமையில் கல்வி (1) செந்தமிழும் நாப்பழக்கம்
(b) கல்லாடம் படித்தவரோடு (2) இடமெல்லாம் சிறப்பு
(0) சித்திரமும் கைப்பழக்கம் (3) முதுமையில் இன்பம்
(0) கற்றோர்க்கு சென்ற (4) சொல்லாடாதே
(A) 3 4 2 1
(B) 4 3 1 2
(C) 3 4 1 2
(D) 2 4 3 1
22. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்று
“அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ
ஒழியா வனப்பு எட்டு உடையாய் ….”
இப்பாடல் அடிகளில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
(A) அழியா, ஒழியா (B) அழியா, அதிகம்
(c) வனப்பு, ஒழியா (D) எட்டு, வனப்பு
23. “கண்ணினைக் காக்கும் இமைபோல”- பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(A) மறவாமல் நினைத்துப் பாதுகாப்பது (B) தன்னலமின்றி பாதுகாப்பது
(C) உடனிருந்து பாதுகாப்பது (D) வேலி அமைத்துக் காப்பது
24. அவன் திருந்தினான்.
பிறவினை வாக்கியமாக மாற்றுக.
(A) அவனைத் திருத்தினான் (B) அவனைத் திருத்தினார்கள்.
(C) அவன் திருந்தவில்லை (D) அவனைத் திருந்தச் செய்தான்.
25.“பசுவும் கன்றும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கின்றன – எவ்வகை
வாக்கியம்?
(A) செய்தி வாக்கியம்
(B) தொடர் வாக்கியம்
(C) தெரிநிலை வினை முற்று வாக்கியம்
(D) கலவை வாக்கியம்
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்


