TAMIL FREE TEST 5 – TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 25 QTS – TNPSC TAMIL OLD QUESTIONS

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 25 QTS – TAMIL FREE TEST 5

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS

கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – TAMIL PYQ- 25 QTS –  TNPSC TAMIL OLD QUESTIONS

 

TAMIL FREE TEST  5

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO
  1. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையைத் தெரிவு செய்க :
    (a) ஐ         1. கொன்றை
    (b) ஓ         2. யானை
    (c) ஒள      3. நுண்மை
    (d) நூ        4. பூமி
    (A) 2143
    (B) 2314
    (C) 3241
    (D) 3142

 

  1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
    கோல், கோழ், கோள்
    (A) அம்பு, இலந்தை, கம்பு
    (B) செழிப்பு, வளம், விழுங்கல்
    (C) அழகு, வழுவழுப்பு, இடையூறு
    (D) கிரகம், குறளை, பழமொழி

 

 

  1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
    வியாழம், வியாளம்
    (A) பெரியது, காமநோய்

(B) பாம்பு, புலி

(C) செடி,ஒளி
(D) உயர்வு, வேண்டாத ஒன்று

 

 

 

  1. “Aesthetician” – என்ற ஆங்கிலச் சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல்
    (A) நுண்கலை ஆய்வாளர்
    (B) தொல்லியல் ஆய்வாளர்

(C) திரைக்கலைஞர்
(D) அழகுக்கலைஞர்

  1. பிழைகளற்ற தொடரைத் தேர்வு செய்க.
    (A) மட்டுவார் குழலி மணத்தக்காளி பொறியல் செய்தாள்

(B) மட்டுவார் குழளி மணத்தக்காளி பொரியல் செய்தாள்

(C) மட்டுவார் குழலி மணித்தக்காளி பொரியல் செய்தாள்

(D) மட்டுவார் குழளி மணித்தக்காளி பொரியல் செய்தாள்

 

 

  1. மரபுச் சொற்களைப் பொருத்துக :
    விலங்குகள்                                      இளமைப்பெயர்கள்
    (a) எலி                                                1.குருளை
    (b) யானை                                      2. மறி
    (c) குதிரை                                     3. குட்டி
    (d) நாய்                                           4. கன்று

(A) 3142

(B) 3214

(C) 3421

(D) 4312

 

  1. எதிர்ச்சொல்லை கண்டறிக :
    கேளார்
    (A) பகைவர்

(B) செற்றார்
(C) கேட்டார்

(D) வெறுப்புற்றார்

 

 

  1. ‘அகலாது’ – என்பதன் எதிர்ச்சொல்
    (A) விலகாது

(B) பிறழாது
(C) மறையாது

(D) அணுகாது

 

 

  1. பிரித்தெழுதுக:
    கண்டெடுக்கப்பட்டுள்ளன
    (A) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன

(B) கண்டெடுக்க + பட்டுள்ளன
(C) கண் + டெடுக்க + பட்டுள்ளன
(D) கண்டெடுக்க + பட்டு + உள்ளன

 

 

 

  1. பிரித்தெழுதுக:
    பாகற்காய்
    (A) பாகற் + காய்
    (B) பாகல் + காய்

(C) பாகு + அல் + காய்
(D) பாகு + அல்காய்

 

 

 

  1. “வாழ வேண்டுமெனில் – தொழில்கள்
    வளர வேண்டுமையா”
    என்னும் கூற்றினை எழுதியவர்
    (A) பாரதிதாசன் .
    (B) குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
    (C) பாரதியார்
    (D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை12. பொருத்துக :
    (a) புலவர் சிங்கம்                       1. மே.வீ. வேணுகோபாலன்
    (b) தற்கால அகத்தியர்                 2.நக்கீரர்
    (c) இலக்கணத் தாத்தா               3.கி.வா. ஜகந்நாதன்
    (d) சிலேடை மன்னர்                 4.க.வெள்ளைவாரணன்

(A)   4312

(B)   3421

(C)   2413

(D)   2341

 

  1. ‘ஆலாபனை’ என்னும் நூலின் ஆசிரியர் – கண்டறிக.
    (A) ஜெயகாந்தன்
    (B) அப்துல் ரகுமான்
    (C) வைரமுத்து
    (D) ஈரோடு தமிழன்பன்

 

 

 

 

  1. “எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
    கதித்துக் களை” – என்பதில் இடம்பெறும் பொருள்
    (A) ஊர் கூடி தேரிழுத்தல்
    (B) தனிமரம் காடாதல் இல்லை
    (C) உறவாடி பகைகெடுத்த கதையாக
    (D) உவர் நிலம் உட்கொதிக்குமாறு

 

 

  1. “புலமிக் கவரைப் புலமை தெரிதல்
    புலமிக் கவர்க்கே புலனாம்” – இப்பாடலடிகள் உணர்த்தும் பழமொழி.
    (A) தவளை தன் வாயால் கெடும்
    (B) பாம்பின் கால் பாம்பறியும்
    (C) குலவித்தை கல்லாமலே அமையும்
    (D) நிறைகுடம் நீர் தழும்பாது

 

 

  1. “தந்தீமை யில்லாதார் நட்டவர் தீமையையும்
    எந்தீமை யென்றே உணர்பதாம்” – தொடர்புடைய பழமொழி.
    (A) உறவாடிக் குடிகெடுத்த கதையாக
    (B) ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்

(C) ஆடு பகை குட்டி உறவு
(D) ஒருவர் பொறை இருவர் நட்பு

 

 

  1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்:
    (a) உடும்பு பிடி போல 1. விலகுதல்
    (b) பசுமரத்தாணி போல                        2. உறுதி
    (c) மலரும் மணமும் போல                   3. ஆழமாக பதிதல்
    (d) பகலவனைக் கண்ட பனி போல்        4. இணை பிரியாமை
    (A) 4312

(B) 3241

(C) 2341

(D) 2413

 

  1. ‘கலம்பாலில் துளி நஞ்சு போல’ என்ற உவமைத்தொடர் உணர்த்தும் கருப்பொருளைத் தேர்ந்தெடுக்க.
    (A) நன்மை

(B) நட்பு

(C) தீமை
(D) உறவு

 

 

  1. உவமைத் தொடர்களை பொருளோடு பொருத்துக:
    (a) இடியோசை கேட்ட நாகம் போல 1. நிலைத்திருத்தல்
    (b) கலம் பாலில் துளி நஞ்சு போல               2. மிரட்சி
    (c) மழைமுகம் காணாப் பயிர்போல             3. வன்மம்
    (d) கல்மேல் எழுத்துப் போல                         4. ஏக்கம்
    (A) 2413

(B) 2341

(C) 2134

(D) 2314

 

 

  1. மழை பெய்தால் நெல் விளையும் இத்தொடர் எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
    (A) உணர்ச்சி வாக்கியம்
    (B) விழைவு வாக்கியம்

(C) செய்தி வாக்கியம்
(D) வினா வாக்கியம்

  1. போர்கள் நாட்டைப் பாழாக்குகின்றன. – ஏற்ற வினாவினைத் தேர்க.
    (A) போர்கள் எவ்வாறு பாழாக்குகின்றன?
    (B) போரின் விளைவு யாது ?
    (C) நாடுகள் எவற்றால் பாழாக்கப்படுகின்றன?
    (D) எவை நாட்டைப் பாழாக்குகின்றன?

 

 

 

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
    ஆதிக்கம் செலுத்துகிற மொழி, குயிலாகக் கூவி வந்தாலும், மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம்.
    (A) குயிலும் மயிலும் என்ன செய்யும்?
    (B) மயங்காதவர் யார்?
    (C) ஆதிக்கம் செலுத்துகிற மொழி எப்படி வரும்?
    (D) எதைக் கண்டு மயங்கிடோம்?

 

 

  1. வினையாலணையும் பெயரைப் பொருத்துக.
    (a) கற்றோர்     1. முன்னிலை ஒருமை வினையாலணையும் பெயர்
    (b) வந்தேனை                      2. படர்க்கை வினையாலணையும் பெயர்
    (c) வந்தாயை                       3. உயர்திணை வினையாலணையும் பெயர்
    (d) வந்தானை                       4. தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்

(A)  3142

(B)  3412

(C)  2431

(D)  2314

 

  1. அடிக்கோடிடப்பட்டுள்ள சொல்களுக்கான இலக்கணக் குறிப்புகளுடன் பொருத்துக :
    (a) எனக் கூறினான் 1. குறிப்பு வினையெச்சம்
    (b) காணாது சென்றான்                         2. வினையெச்சம்
    (c) இனிது பேசினாய்                              3. நிகழ்கால வினையெச்சம்

(d) படிக்க வேண்டுகிறான்                      4. எதிர்மறை வினையெச்சம்

(A) 3142

(B) 3412

(C) 2143

(D) 2413

 

  1. “பலநாள்கள் தேடி இன்றுதான் யாப்பிலக்கணம் வாங்கினேன்” என்பதில் ‘யாப்பிலக்கணம்’ என்பதின் இலக்கணக் குறிப்பு யாது?
    (A) தொழிலாகு பெயர்

(B) கருவியாகு பெயர்
(C) பொருளாகு பெயர்
(D) காரியவாகு பெயர்

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

 


TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள்.  கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading