TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 35 QTS – TAMIL FREE TEST 6
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – TAMIL PYQ- 35 QTS – TNPSC TAMIL OLD QUESTIONS
TAMIL FREE TEST 6
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.
விருந்து ஆயினும் உவக்கும் அல்லில் வரின்.
(A) அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்.
(B) உவக்கும் விருந்து ஆயினும் வரின் அல்லில்.
(C) அல்லில் வரின் ஆயினும் உவக்கும் விருந்து.
(D) விருந்து உவக்கும் ஆயினும் அல்லில் வரின்.
2. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
கருதிச் செயல் காலமும் அளவும் பிணியளவும் கற்றான் உற்றான்.
(A) கற்றான் பிணியளவும் காலமும் உற்றான் அளவும் செயல் கருதி
(B) உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான்
கருதிச் செயல்
(C) காலமும் பிணியளவும் உற்றான் கற்றான் கருதிச்
செயல் அளவும்
(D) பிணியளவும் கருதிச்செயல் காலமும் கற்றான் அளவும் உற்றான்
3. ‘வெல்’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் யாது?
(A) வென்று வந்தான்
(B) வெற்றிபெற்ற
(C) வென்றவன்
(D) வெற்றிபெறும்
4. ‘உறுகண்’ என்ற சொல்லின் வேர்ச்சொல் கண்டறிக :
(A) உற்
(B) உறை
(C) உறு
(D) உறுதல்
5. கா எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்.
(A) அரசன்
(B) துலாக்கோல்
(C) காற்று
(D) மயில்
6. சரியான பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.
(A) பை – அச்சம்
(B) மை – மலடு
(C) பா-தொண்டி
(D) மா – மேலிடம்
7. ஒலி வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
(a) வெலி 1.அறிவின்மை
(b) வெல்லி 2. ஆகாயம்
(c) வெள்ளி 3. பலி
(d) வெளி 4. சிற்றேலம்
(A) 4321
(B) 4132
(C) 3412
(D) 3124
8. Nautilus – என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்
(A) நண்டு வகை
(B) இறால் வகை
(C) நத்தை வகை
(D) மீன் வகை
9. ‘Aristology’ என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள்
(A) நுண்கலை
(B) கவின்கலை
(C) உணவுக்கலை
(D) கட்டடக்கலை
10. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(A) பொறுத்தாரைப்பொன்னைப் பொதிந்து வைத்தார் போல போற்றுவார்
உலகத்தார்
(B) பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற் போலப் போற்றுவார் உலகத்தார்
(C) பொறுத்தாரை பொன்னைப் பொதிந்து வைத்தாற் போலப் போற்றுவார் உலகத்தார்
(D) பொறுத்தாரைப் பொன்னை பொதித்துப் வைத்தாற் போலப் போற்றுவார் உலகத்தார்
11. பொருந்தாத இணையைக் கண்டறிக :
(A) ஆளை அறுகம்புல்
(B) உழை -ஆண்மான்
(C) இதல் – கௌதாரி
(D) ஊழை – தீ நாற்றம்
12. பிழையான இணையைக் கண்டறிக.
(A) அளகம் – பன்றிமுள்
(B) அலவன் – ஆண் நண்டு
(C) அலகம் – யானைத்திப்பிலி
(D) அலத்தி – நெய்தல் நிலப்பெண்
13. ‘நிலமடந்தைக் கெழிலொழுகும்’ – இச்சொல்லைப் பிரித்தெழுதுக.
(A) நிலமடந்தை + கெழில் + ஒழுகும்
(B) நிலம் + மடந்தை + கெழில் + ஒழுகும்
(C) நிலம் + மடந்தை + எழில் + ஒழுகும்
(D) நிலமடந்தை + கெழிலொழுகும்
14.தொல்காப்பியரின் வைப்பு முறைப்படி முல்லையோ நிலநூல் முறைப்படி குறிஞ்சியோ முதலில் இடம்பெறாமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய எட்டுத்தொகை நூல் எது?
(A) குறுந்தொகை
(B) ஐங்குறுநூறு
(C) நற்றிணை
(D) கலித்தொகை
15. “மாதமோ சித்திரை; மணியோ பத்தரை; உங்கள் கண்களைத் தழுவுதே நித்திரை” என்ற அடிகளுக்கு உரியவர் யார்?
(A) அறிஞர் அண்ணா
(B) கலைஞர். மு. கருணாநிதி
(C) மாங்குடி மருதனார்
(D) நக்கீரர்
16. எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் எந்தப் படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?
(A) சாய்வு நாற்காலி
(B) சஞ்சாரம்
(C) கையொப்பம்
(D) காந்தள் நாட்கள்
17. பொருத்துக:
(a) அநுக்கம் 1. குதிரை
(b) உன்னி 2. ஆண் முதலை
(c) ஏணம் 3. பாம்பு
(d) கரா 4. மான்
(A) 2314
(B) 3142
(C) 4231
(D) 2431
18. பழமொழியினை நிறைவு செய்க.
வாழ்கிறதும் கெடுகிறதும்………………….
(A) கையிலேதான்
(B) மனதிலேதான்
(C) வாயிலேதான்
(D) எண்ணத்திலேதான்
19. “பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்” இவ்வடியில் இடம்பெற்றுள்ள மோனை வகை
(A) கூழை மோனை
(B) மேற்கதுவாய் மோனை
(C) பொழிப்பு மோனை
(D) முற்று மோனை
20.ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான் – இத்தொடர்களில் இடம்பெறும் மோனைச் சொற்களைக் கண்டறிக.
(A) ஞானச்சுடர் விளக்கு – நாரணற்கு
(B) ஞானத்தமிழ் – புரிந்த
(C) ஞானத்தமிழ் – நான்
(D) ஞானச்சுடர் விளக்கு – ஞானத்தமிழ்
21. செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
இப்பாடலடிகளில் இடம்பெறும் இயைபுச் சொற்களைக் கண்டறிக:
(A) செறிவு – நிறை
(B) செறிவு – மறாஅமை
(C) நிறை – அறி
(D) மறாஅமை – அறியாமை
22. கீழ்கண்டவற்றுள் பிறவினை வாக்கியம் எது?
(A) அவள் கண்டனள்
(B) அவள் கண்டுவந்தாள்
(C) அதைக் கண்டு வந்த மாணவர்
(D) இவள் காண்பித்தாள்
23. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) சேர்க்கிறேன்
(B) சேர்கிறேன்
(C) சேர்ப்பேன்
(D) சேர்த்தேன்
24. ‘அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை’ – இக்குறளடி எவ்வகை வாக்கியம்?
(A) தன் வினை
(B) பிற வினை
(C) செயப்பாட்டு வினை
(D) செய்வினை வாக்கியம்
25. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
கிளி பழத்தைக் கொத்தித் தின்றது.
(A) செயல் வாக்கியம்
(B) பிறவினை வாக்கியம்
(C) செய்தி வாக்கியம்
(D) விழைவு வாக்கியம்
26. பொருத்துக:
(a) வகுப்பு கலைந்தது 1. பண்பாகு பெயர்
(b) கொழுந்து நட்டனர் 2. இடவாகு பெயர்
(c) பொழுது சாய்ந்தது 3. சினையாகு பெயர்
(d) கார் பெய்தது 4. காலவாகு பெயர்
(A) 2413
(B) 2341
(C) 2134
(D) 2314
27. வேற்றுமை உருபினை ஏற்கும்பொழுது தன்மை, முன்னிலையில் திரியும்
பெயர்களைக் கண்டறிந்து பொருத்துக :
(a) யான் 1. உம்
(b) நீர் 2. என்
(c) யாம் 3. உன்
(d) நீ 4. எம்
(A) 2341
(B) 2143
(C) 3124
(D) 3412
28. ‘அறுகோணம்’ என்று எவ்வகைப் பெயர் ?
(A) இடப்பெயர்
(B) தொழிற்பெயர்
(C) காலப்பெயர்
(D) வடிவப்பண்புப் பெயர்
29. அகர வரிசையில் சொற்களை சீர்செய்தல்:
(A) குங்குமம், காட்சிக்கூடம், செந்தமிழ், சொல்லேருழவர்
(B) காட்சிக்கூடம், குங்குமம், செந்தமிழ், சொல்லேருழவர்
(C) செந்தமிழ், காட்சிக்கூடம், சொல்லேருழவர், குங்குமம்
(D) சொல்லேருழவர், செந்தமிழ், காட்சிக்கூடம், குங்குமம்
30. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் :
(A) தென்னை, துணி, தொட்டி, திண்ணன்
(B) துணி, திண்ணன், தென்னை, தொட்டி
(C) திண்ணன், துணி, தென்னை, தொட்டி
(D) தொட்டி, தென்னை, துணி, திண்ணன்
31. “வீழ்” என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் கண்டறிக.
(A) வீழ்ந்த
(B) வீழ்ந்து
(C) வீழ்த்துவான்
(D) வீழ்ந்தான்
32. “வாழ்” என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் கண்டறிக.
(A) வாழ்க
(B) வாழாது
(C) வாழ்தலை
(D) வாழா
33. பொருத்துக:
(a) விட்ட ஆகுபெயர் 1. கால் வலிக்கின்றது
(b) விடாத ஆகுபெயர் 2. என் பிழைப்புக் கெட்டது
(c) எண்ணலளவை ஆகுபெயர் 3. புளி தின்றான்
(d) காரியவாகு பெயர் 4. தஞ்சாவூர் வந்தது
(A) 4132
(B) 4312
(C) 2413
(D) 2341
34. பொருத்துக :
(a) புளி நட்டான் 1. மும்மடி ஆகுபெயர்
(b) கார் அறுத்தான் 2. இருபெயரொட்டு ஆகுபெயர்
(c) அறுபதம் முரலும் 3. இருமடி ஆகுபெயர்
(d) மக்கட்சுட்டு என்மனார் புலவர் 4. அடையடுத்த ஆகுபெயர்
(A) 3142
(B) 3412
(C) 4321
(D) 4312
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்


