TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 25 QTS – TAMIL FREE TEST 7
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – TAMIL PYQ- 25 QTS – TNPSC TAMIL OLD QUESTIONS
TAMIL FREE TEST 7
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1. ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அறிதல்
APP (ஆப்) என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்
(A) தேடு பொறி
(B) புலனம்
(C) செயலி
(D) வலஞ்சுழி
2.ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அறிதல்.
TOUCH SCREEN (டச் ஸ்கிரீன்) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல்
(A) குரல் தேடல்
(B) தொடு திரை
(C) தேடு பொறி
(D) புலனம்
3. ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அறிதல்.
WHATSAPP (வாட்ஸ் ஆப்) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல்
(A) புலனம்
(B) வலஞ்சுழி
(C) தேடு பொறி
(D) செயலி
4. விடை வகையைக் கண்டறிக.
“இப்பக்கத்தில் உள்ளது”
(A) ஏவல் விடை
(B) நேர் விடை
(C) மறை விடை
(D) சுட்டு விடை
5. விடை வகையைத் தெரிவு செய் :
ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று நூலகரிடம் வினவும் போது சுஜாதாவின் சிறுகதைகள் இருக்கிறது என்று நூலகர் கூறுவது
(A) இனமொழி விடை
(B) நேர் விடை
(C) ஏவல் விடை
(D) உறுவது கூறல்
6. அலுவல் சார்ந்த சொற்கள் :
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
(A) Epigraphy — கல்வெட்டியல்
(B) Cave Temple – குடைவரைக் கோயில்
(C) Treasury — கருவூலம்
(D) Hero Stone – நடுகல்
7. சரியான இணையைத் தேர்ந்தெடு
(அலுவல் சார்ந்த சொற்கள்)
(A) Cultural Values – பண்பாட்டு விழுமியங்கள்
(B) Cabinet – அமைச்சரவை
(C) Humanism – மனிதநேயம்
(D) Belief – நம்பிக்கை
8. அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச் சொல்)
கலைச்சொல் அறிதல்:
NAUTICAL MILE என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல் தேர்க
(A) ஏவுகணை
(B) ஏவு ஊர்தி
(C) கடல் மைல்
(D) மின்னணுக் கருவிகள்
9. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
உடலும் உயிரும் போல
(A) பரந்த புகழ்
(B) ஒற்றுமையின்மை
(C) எதிர்பாரா நிகழ்வு
(D) மனமொன்றிய துணை
10. 15 உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்தல்
சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) உள்ளங்கை நெல்லிக்கனிபோல – ஒற்றுமையின்மை
(B) மடைதிறந்த வெள்ளம் போல் – தடையின்றி மிகுதியாக
(C) விழலுக்கு இறைத்த நீர்போல – வெளிப்படைத் தன்மை
(D) நெல்லிக்காய் மூட்டை கொட்டினாற் போல் – பயனற்ற செயல்
11. எவ்வகை வாக்கியம் கண்டறிக
கடிதம் கவிதாவால் படிக்கப்பட்டது
(A) தன் வினை
(B) பிற வினை
(C) செயப்பாட்டு வினை
(D) செய்வினை
12. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
பிறவினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க:
(A) மாணவன் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றான்
(B) பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்
(C) பாட்டு பாட மாணவிகள் கூட்டமாக வந்தனர்
(D) அவர்கள் நன்றாகப் படித்தனர்
13. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க:
(A) அவனைத் திருந்தச் செய்தான்
(B) அவன் திருந்தினான்
(C) அவர்கள் படிக்க வரவழைக்கப்பட்டனர்
(D) பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்
14. விடைக்கேற்ற வினா அமைக்க.
பொழுது – பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்
(A) பொழுது என்றால் என்ன?
(B) பொழுதின் வேறு பெயர்கள் யாவை?
(C) பொழுது எத்தனை வகைப்படும்?
(D) பொழுது விளக்குக
15. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையை நாட்டுப் புறப்பாடல் கூறுகிறது –
(A) நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையை எந்தப் பாடல் கூறுகிறது ?
(B) உபசரிப்பு என்றால் என்ன?
(C) நாட்டுப் புறப்பாடல் கூறுவது சரியா?
(D) உபசரிப்பு பாடல் கூறுவது யாது?
(E) விடை தெரியவில்லை
16.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
காணும் பொங்கல் அன்று உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்
(A) காணும் பொங்கல் என்றால் என்ன?
(B) காணும் பொங்கல் அன்று எங்கு சென்று மகிழ்வர்?
(C) யாரைக் கண்டு மகிழ்வர்?
(D) காணும் பொங்கல் அன்று உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச்
சென்று என்ன செய்வர்?
17. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
கலைத்தல் – களைத்தல்
(A) ஓட்டுதல்-சேர்தல்
(B) பிரித்தல்-காணுதல்
(C) அழித்தல்-சோர்தல்
(D) குலைத்தல்-காணுதல்
18. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
பணித்து, பணிந்து
(A) தலைவர் தொண்டர்களை பணிந்தார், தொண்டர்கள் தலைவருக்கு பணித்தனர்.
(B) தலைவர் தொண்டர்களை வேலை செய்ய பணித்தார். தொண்டர்கள்
தலைவருக்குப் பணிந்தனர்.
(C) தலைவர் பணிந்து நின்றார் தொண்டர்களும் பணிந்து நின்றனர்
(D) தொண்டர்கள் பணித்தனர். தலைவர் தொண்டர்களிடம் பணிந்து நடந்தார்
19. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்
(A) இன்றைய சூழலில் கவசங்கள் இல்லை. வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு
(B) கவசங்கள் தாங்கும் அளவுக்கு வெப்பத்தைத் இன்றைய சூழலில் இல்லை
(C) வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு இன்றைய சூழலில் கவசங்கள் இல்லை
(D) தாங்கும் அளவுக்கு இன்றைய வெப்பத்தைத் சூழலில் கவசங்கள் இல்லை
20. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்
(A) மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும்
(B) அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் கல்வியாக ஆக்குவதன் மூலம் மொழி பெயர்ப்பைக் பெற முடியும்
(C) கல்வியாக பெற மொழி பெயர்ப்பைக் ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் முடியும்
(D) நாம் எளிதாகப் பெற முடியும் மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும்
21. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
(A) பீர்க்கம், பாட்டு, பட்டு, பிட்டு
(B) பிட்டு, பட்டு, பாட்டு, பீர்க்கம்
(C) பட்டு, பாட்டு, பிட்டு, பீர்க்கம்
(D) பாட்டு, பட்டு, பீர்க்கம், பிட்டு
22. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
(A) புளி, பூனை, பெட்டி, பேரன்
(B) பேரன், பெட்டி, பூனை, புளி
(C) பூனை, புளி, பேரன், பெட்டி
(D) பெட்டி, பேரன், புளி, பூனை
23. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
மையல், மெளவல், மேடு, மெல்ல, மொட்டு, மோர்
(A) மொட்டு, மோர், மெளவல், மெல்ல, மேடு, மையல்
(B) மெல்ல, மொட்டு, மேடு, மோர், மையல், மெளவல்
(C) மெல்ல, மேடு, மையல், மொட்டு, மோர், மெளவல்
(D) மேடு, மோர், மெல்ல, மொட்டு, மெளவல், மையல்
24. வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க – “உணர்’
(A) உணர்ந்து
(B) உணர்ந்த
(C) உணர்ந்தோர்
(D) உணர்ந்தான்
25. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க.
முளை:
(A) முளைத்தவன்
(B) முளைத்து
(C) முளைத்த
(D) முளைத்தல்
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்


